(Reading time: 11 - 22 minutes)

மனிதக் கரடி - பூஜா

காடு ஒன்றின் அருகில் அமைந்திருந்தது அந்த குடிசை.அந்தக் குடிசையிலிருந்து வெளியே வந்தான் ஒரு மனிதன்.நல்ல உயரம் உயரத்திற்கேற்ற பருமன்.மிக ஆஜானுபாகனாக இருந்தான். அவன்

இடுப்பில் கற்கால மனிதர்கள் கட்டியிருப்பதைப் போல தோலால் ஆன ஆடை கட்டியிருந்தான்.

அவன் காட்டின் அருகே கொஞ்ச தூரத்தில் இருக்கும்  ஒரு ஊரை நோக்கி நடந்து வந்தான். அந்த ஊரை அடைய இன்னும் கொஞ்ச தூரமே இருந்தது.அப்போது தூரத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும்நடந்து வருவதைப் பார்த்தான்.அவர்களின் கண்களில் படாதவாறு ஒரு பெரிய மரத்தின் பின்னேஒளிந்துகொண்டான்.அந்த ஆணும் பெண்ணும் இவனைக் கவனிக்கவில்லை.இவன் ஒளிந்து கொண்டிருந்த மரத்தைக் கடந்து போனார்கள்.அந்த ஆண் மிக நேர்த்தியாய் ஆடை அணிந்திருந்தான்,

manitha karadiஇடுப்பில் வெள்ளை வெளேர் என்று வேட்டி, மேலே பளிச்சென்று ஷர்ட்,கண்களில் கூலிங் கிளாஸ்,

தலையில் அழகான தொப்பி..அந்தப் பெண்ணும் மிக அழகாக ஆடை உடுத்தி பார்க்க மிக அழகாக

இருந்தாள்.

அந்த ஆண் செய்து கொண்டிருந்த டிரெஸ்ஸைப் பார்த்த காட்டு மனிதனுக்கு தானும் அதுபோல ஆடை, கண்ணாடி, தொப்பி அணிய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.தானும் அழகான ஒரு பெண்ணோடு நடந்து செல்ல வேண்டும் என்றும் தோன்றியது.என்னசெய்யலாம் என்ற யோசனையோடு வீட்டுக்குத் திரும்பிவிட்டான் அந்த மனிதன்.

ஏதோ ஒரு முடிவோடு அடுத்த நாளும் அவ்வூரை நோக்கி வந்தான் அந்த மனிதன்.வழியில் யாரும் தென்படவில்லை.மெதுவாக அந்த ஊரின் தெரு ஒன்றிற்குள் நுழைந்தான்.தெருவில் மனித நடமாட்டமே இல்லை.அப்போது ஒரு வீட்டின் திண்ணையில் பை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

அதன் அருகே சென்ற அந்த மனிதன் சட்டென அந்தப் பையை எடுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக காட்டின் அருகே யிருக்கும் தன் வீட்டை நோக்கிச் சென்றான்.

வீட்டிற்குப்போய் பையைத் திறந்து பார்த்த அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.ஆம்

அந்தப் பைக்குள் ஒரு வேட்டி,ஒரு சட்டை,ஒரு கூலிங் கிளாஸ்.ஒரு தொப்பி,ஒரு சீப்பு, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு பவுடர் டப்பா,ஒரு புத்தகம் எல்லாம் இருந்தது. வெளியூர் செல்வதற்காக யார் வைத்திருந்தார்களோ?காட்டு மனிதனுக்கு தாங்க முடியாத சந்தோஷம்.

கொஞ்சமும் தாமதிக்காமல் வேட்டியைக் கட்டிக் கொண்டான் ஷர்ட்டைப் போட்டுக்கொண்டான்

முகத்தில் பவுடரைப் பூசி க்ளாசை அணிந்து கொண்டான் தொப்பியை தலையில் வைத்துவிட்டுக்

கண்ணாடியில் முகத்தை பார்த்தவன் அப்படியே அசந்துபோனான் தன் அழகைப் பார்த்து.எல்லாம்

முடிந்தது இனி பெண்தான் பார்க்கவேண்டும் என நினைத்தபடி மீண்டும் ஊரை நோக்கி நடந்தான்.

இம்முறை வேறு ஒரு தெருவுக்குள் நுழைந்த அவன் ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு

கொண்டு வந்திருந்த புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு கரா..முரா.கரா..முரா என்று

ஓசை எழுப்பி படிப்பதுபோல் பாவனை செய்தான்.

வாசல் திண்ணையில் ஏதோ சப்தம் கேட்பது உள்ளே இருந்த தனத்தின் காதில் விழுந்தது.என்ன சப்தம்.என்னவாயிருக்கும் என்று தோன்றியது அவளுக்கு.தனத்திற்கு பதினாறு பதினேழு வயதிருக்கும்.அம்மா,அப்பா இல்லை.ஒரு அண்ணன் மட்டும்தான்.ரொம்ப பாசமான அண்ணன். வேலைக்குச் செல்பவன்.காலையில் வேளியே சென்றால் மாலையில்தான் திரும்புவான்.உள்ளேயே

கதவைத் தாப்பா போட்டுக்கிட்டு பத்திரமாய் இரு..யார் கூப்பிட்டாலும் கதவைத் திறக்காதே

என்று தினமும் சொல்லிவிட்டுச் செல்வான்.தனமும் அதுபோலவே நடப்பாள்.அதனால் வாசலில்

ஏதோ சப்தம் கேட்பதுபோல் இருந்தாலும் கதவைத் திறக்கவில்லை.

திண்ணையில் உட்கார்ந்திருந்த காட்டு மனிதனுக்கு தாகமெடுத்தது.தண்ணீர் வாங்கிக் குடிக்க

நினைத்து வீட்டின் கதவைத் தட்டினான்.தண்ணி வேணும் தண்ணி வேணும் அப்பிடின்னு கத்தினான்.

உள்ளேயிருந்த தனத்திற்கு பயமா இருந்தது.ஆனாலும் தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுக்கலேன்னா

பாவம்னு செத்துப்போன பாட்டி அடிக்கடி சொல்லுவாங்களேன்னு தோணிச்சு.சரி பரவாயில்லன்னு

ஒரு சொம்புல தண்ணிய எடுத்துக்கிட்டு போய் வாசக்கதவ கொஞ்சமா தொறந்து அங்க நின்னிட்டிடி

ருந்த மனிதன்ட்ட கைய மட்டும் நீட்டி குடுத்தா.சட்டுன்னு அந்த காட்டு மனுஷன் கொஞ்சமா

தொறந்திருந்த கதவு வழியா தனத்த பாத்துட்டான்.அவனுக்கு ஏக குஷியா ஆயிடுத்து. அட..... பொண்ணு..டோய் அப்பிடின்னு கத்தினான்.தனம் பயந்து போய் பட்டுன்னு கதவ சாத்திட்டா.

கதவ தட்டித் தட்டிப் பார்த்தான்..தனம் தொறக்கவே இல்லை.அவனுக்குக் கோபம் வந்தது.இரு இரு

ஒன்ன பாத்துக்கறேன் அப்பிடின்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போய்ட்டான்.

மறுநாளும் வந்தான்.தனத்தோட அண்ணன் இவன் வருவானோன்னு சந்தேகப் பட்டு வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தான்.தெருவுலயிருந்த கொஞ்சப்பேரும் தனத்தோட வீட்டுல இருந்தாங்க.காட்டு மனிதன் கதவத்தட்டினான்.ரொம்ப நேரம் கதவ தொறக்கல.அவன் காட்டு மனிதனாச்சே அவனோட பலத்துக்கு கேக்கவா வேணும்?கதவுல ஒரு முட்டு முட்டினான்.கதவு

அப்பிடியே மல்லாந்து விழுந்துடிச்சு.உள்ள கோவத்தோடு போனான். அங்கயிருந்த எல்லாரையும்

அடிச்சு தொவச்சான்.ஒரு மூலேல பயந்து போய் நின்னுக்கிட்டிருந்த தனத்த அப்பிடியே தோள்ல

தூக்கி வெச்சுகிட்டு தன்னோட காட்டு வீட்டுக்குப்போய்ட்டான்.

தனம் பயத்துல அழுதுக்கிட்டேயிருந்தா.அவன் தனத்தப் பாத்து ம்ம்ம்ம்..என்ன அளுதுக்கிட்டே இருக்க எனக்கு பயங்கரமா பசிக்கிது...அதோ அந்த எடத்துல நான் வேட்டையாடிக்கிட்டு வந்த ஆடு,

காட்டெருமை,புலி மாமிசம், மான்,கொழுத்த பன்னி எல்லத்தோட மாமிசமும் இருக்கு..இதோ இங்க

பெரிய பெரிய பாத்திரமெல்லம் இருக்கு, சமைக்க பொருளெல்லாம் இருக்கு..கம கமன்னு

வாசனையா நெறைய்ய சீக்கிரம் சமைச்சுவை.சாபிட்டுட்டு தூங்கணும் அப்பிடின்னான்.

பயந்து போன தனம் கேவிக் கேவி அழுதா.ஏய் ஏன் அழுவுற..தப்பிச்சுப் போலாம்ன்னு மட்டும் நெனைக்காதே..இது காடு ஒன்னால தப்பிக்க முடியாது....போய் சமைக்கப் போறியா இல்லியா..

அப்பிடின்னு கத்தினான்.

அவனப் பாத்தாலே தனத்துக்கு பயமா இருந்தது.சமைக்காட்டிஎன்னசெய்வானோன்னுபயந்துகிட்டே 

மாமிசம் போட்டு வெச்சிருக்கிற எடத்துக்குப்போனா தனம்.ஐயோன்னு பயத்துல கத்திட்டா.ஏன்னா

அங்க பயங்கரமான மிருகங்களோட செத்த உடம்புங்க கெடந்துச்சு.ஒரே நாத்தம் வேற.அவ கண்ணால தண்ணியா கொட்டிச்சு.அண்ணன நெனச்சு அழுதா...இந்த காட்டுமிராண்டிட்ட மாட்டிக்

கிட்டமேன்னு தவிப்பா இருந்துது.அவ சின்னப் பொண்ணுதானே பெரியபெரிய பாத்திரத்த தூக்கி வெச்சு சமைக்கவே முடியல.மிருகங்களோட ஒடம்ப அரிவாளால வெட்டவும் முடில.எப்பிடியோ

சமச்சுவெச்சா.காட்டு மனிதன் நன்னா அள்ளிஅள்ளி சாப்டான்.துளிக்கூட மிச்சம் வெக்கல.வாசக் கதவையும் கொல்லைப்புரக் கதவையும் பூட்டைப்போட்டுப் பூட்டினான்.சாவியை ஒளித்துவைத்து

விட்டு கால்களையும் கைகளையும் அகட்டிப் போட்டவாறு பயங்கரமாய்க் குறட்டை விட்டுத் தூங்க

ஆரம்பித்தான்.அவனைப் பார்க்கவும் அவன் விடும் குறட்டையைக் கேட்கவும் தனத்துக்கு ரொம்ப ரொம்ப பயமாயிருந்துச்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.