(Reading time: 7 - 14 minutes)

முயற்சி திருவினையாக்கும்... - தங்கமணி சுவாமினாதன்

ந்த ஊரின் பெயர் சின்னக்காட்டூர்.அந்த ஊரின் அருகே சிறிது தொலைவில் காடு ஒன்று இருந்தது.

சின்னக்காட்டூரில் முத்து,ராசாத்தின்னு கணவன் மனைவி இருந்தாங்க.அவங்களுக்கு ஒரு மகன்.

அவன் பேரு வெள்ளையன்.அவனுக்கு பண்ணெண்டு வயசு இருக்கும்.அவன் பெயருக்கு ஏத்தபடி நல்ல கலரா வெள்ளையா இருந்தான்.அனா பாவம் அவன் ஒரு ஊமை.யார் செய்த புண்ணியமோ காது நல்லா கேட்கும்.ரொம்ப நல்ல பையன்.அவனுக்குக் கடவுள் பக்தி அதிகம்.அதுவும் வினாயகர்னா அவனுக்கு ரொம்ப பிடிக்கும்.அவன் ஊமை என்பதால் அவன ஊர்ல எல்லாரும் அவனோட நிஜப் பெயரால் கூப்பிடாமல் ஊமைய்யன் என்றே கூப்பிடுவார்கள்.

Muyarchiதங்கள் மகனை எல்லோரும் ஊமைய்யன் ஊமைய்யன் என்று கூப்பிடுவதைப் பார்த்து வெள்ளையனின் பெற்றோருக்கு மிகவும் வருத்தமாக இருந்துச்சு..வெள்ளையனோட அம்மா இப்பிடி தங்களோட பிள்ள ஊமையா இருக்கானே..எல்லாரும் இப்பிடி ஊமை..ஊமைன்னு கூப்பிடறாங்களேன்னு தினமும் சாமிட்ட அழுவாங்க.அப்பெல்லாம் வெள்ளையனுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும்.வினாயகர் படத்துகிட்ட போய் நின்னு ஏம் புள்ளையாரே என்ன ஊமையா படச்ச என்னோட அம்மா அழுவுறாங்களே அப்பிடின்னு  மனசுக்குள்ள புலம்புவான்.பாவம் அவனோட அம்மா... புள்ளைக்கு நேரிலேயே அவனோட குறைய சொல்லி அழுவரது தப்புன்னு அந்த பாசமான அம்மாக்குத் தெரியல.வெள்ளையனுக்குப் பாட்டுப் பாடனும்ன்னு ரொம்ப ஆசை.

வெள்ளையன் எல்லாப் பிள்ளைகளையும் போல் பள்ளிக்கூடம் போய்க்கிட்டுதான் இருந்தான். அனா பள்ளிக்கூடத்தில் அவன மத்த பசங்களெல்லாம் ஊமை..ஊமைன்னு பரிகாசம் செய்தும்..அவனை நடுவில் நிறக வைத்து கேலி செய்து..ஊம..ஊம..ஊம..ஊம.....ஊம பாரு டோய்..ஊமையத்தான் பாடச்சொல்லிக் கேட்டுப் பாரு டோய்..அப்பிடின்னு பாடுவாங்க.இது தினமும் நடக்கும்.

வெள்ளையன் வீட்டிற்கு வந்து தாயிடம் அழுவான்.பெற்றொருக்குத் தாங்க முடியாத வருத்தமாக இருந்தது.அப்புறம் அவன் பள்ளிக்கூடம் போகவில்லை நான்காம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டான்.

தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டு வாசல் திண்ணையில் வந்து உக்காந்துப்பான்.பாட்டுப் பாடணுன்ற  ஆசையால அடித்தொண்டையிலிருந்து ராகம் இழுப்பான்.அதுவும் மெள்ளகூட இல்லை.சப்தமாக ராகம் போடுவான்.அது கர்ண கடூரமாக இருக்கும்.அதுபற்றி அவன் கவலைப் படமாட்டான்.கிட்டத்தட்ட ஒருமணி ரெண்டுமணி நேரம் கூட இவனது ராக ஆலாபனை நீடிக்கும்.

கர்ண கடூரமான இவனது ராக இழுப்பு அக்கம் பக்கத்தினருக்கு மிகுந்த தொந்தரவா இருந்திச்சு.

எரிச்சலை ஏற்படுத்திச்சு..எல்லோரும் அவங்கிட்ட இது போல் ராகமிழுக்காதே என்று சொல்லிப் பார்த்தாங்க.வெள்ளையன் பாட்டு மீது இருந்த ஆசையால அக்கம் பக்கத்தினர் பேச்சைக் கேக்கல.தொடர்ந்து தினமும் ராகமிழுத்தபடி இருந்தான்.

தெருவிலிருந்தவர்கள் எல்லோருமாய் வெள்ளையனின் பெற்றோரிடம் வந்து முறையிட்டாங்க..

அவர்களும் அவங்கிட்ட இது போல செய்யாதே என்று சொன்னாங்க.ரெண்டு நாள் சும்மா இருந்தான்.

மூணா நாளு மறுபடியும் ராகம் போட ஆரம்பிச்சுட்டான்.

அக்கம் பக்கதுக்காரங்கள்ளாம் வெள்ளையனோட அம்மா அப்பாவ கண்டபடி திட்டிட்டாங்க. அதுனாலஅவங்க வெள்ளையன நன்னா அடிச்சுட்டாங்க.பாவம் அவ அழுகிட்டே இருந்தான்.

று நாள்லேந்து என்ன பண்ணினான் தெரியுமா?காலம்பர அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனதும் நேரா ஆத்தங்கரைக்குப் போனான்.அங்க ஒரு சின்ன பிள்ளயார் சில ஒண்ணு அரசமரத்தடில இருந்திச்சி.மரத்தடில ஒக்காந்த்கிட்டு மனம் போன போக்குல பாடறதா நனெச்சு ராகம் போட ஆரம்பிச்சான்.அங்க குளிக்க, துணி துவைக்க வரவங்களுக்கெல்லாம் இவனின் ராக இழுப்பு பெரிய இம்சையா இருந்திச்சு.அவன கண்டபடி திட்டி வெரட்டினாங்க.வெள்ளையனுக்கு ரொம்ப வருத்தமாயிடிச்சு.அவ பாவந்தானே?புளையார பாத்து என்ன யாருக்குமே புடிக்கல சாமின்னு அப்பிடின்னு சொல்லி அழுதான்.

அடுத்த நாள்ளேந்து ஆத்தங்க்கரைக்குப் போகல.அந்த ஊருக்குப் பக்கத்துல கொஞ்ச தூரத்துல காடு ஒன்னு இருக்குன்னு சொன்னேன்ல அந்த காட்ட நோக்கி நடந்து போனான் வெள்ளையன்.

அவ போரத யாருமே பாக்கல.கொஞ்ச தூரம் போனதுமே மனுஷங்க நடமாட்டமே இல்லாம போயிடிச்சி.பின்ன காட்டுப்பக்கம் யாரு போவாங்க?அப்பாடா இதுதான் ..நமக்கு சரியான இடம் இங்க யாரும் நம்மள பாடாதன்னு வெரட்ட மாட்டாங்கன்னு நெனச்சு ஒரு மரத்தடில ஒக்காந்து தன் இஷ்டப்படி மனம்போன போக்குல ராகம் இழுத்தான் வெள்ளையன்.கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ராகம் இழுத்திருப்பான்.அப்பாடி இது போறும்ன்னு வீட்டுக்குத் திரும்பினான்.அவனுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது.

ப்பறம் கொஞ்ச நாள் இப்பிடியே போச்சு.அவனுக்கு நல்லத எப்படா செய்யலாம்ன்னு புள்ளயார் பாத்துக்கிட்டே இருந்தாரு.அந்த நாளும் வந்திச்சி.ஒரு நாளைக்கு அவ இப்பிடி மரத்தடில ராகம் இழுத்து முடிச்சிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகிட்டு இருந்தான்.அப்பிடி வர்ரச்சே காரு ஒண்ணு ஒரு மரத்துல மோதி நசுங்கிப்போயி நின்னுக்கிட்டு இருந்தத பாத்தான்.காருக்குக் கொஞ்சம் கிட்டக்க ஒருத்தரு மொனகிக்கிட்டுக்கிடந்ததையும் பாத்தான்.அவுனுக்கு திகீர்னிச்சு.அவருக்குப் பக்கத்துல ஓடினான்.அவரு ஒடம்புலேந்து ரத்தமா வழிஞ்சிகிட்டு இருந்திச்சி.ரத்தத்த பாத்ததும் வெள்ளையனுக்கு ரொம்ப பயமா இருந்திச்சி.நமக்கும் அப்பிடித்தானே இருக்கும்.அவன் சின்ன பையந்தானே?பயமா இருக்காதா பின்ன?பே..பேன்னு பயத்துல கத்தினான்.அடிபட்டு விழுந்து கிடந்தவரு தண்ணி தண்ணின்னு மொனகினத கேட்டான்.தண்ணிக்கு எங்க போறதுன்னு அவுனுக்கு தெரில.

அப்பரம் காருக்குள்ள போயி எட்டிப் பாத்தான்.நசுங்கின காருக்குள்ள ஒரு பாட்டில்ல தண்ணி இருக்கிறத பாத்தான்.தண்ணிய கொண்டுட்டு வந்து அவரு மொகத்துல தெளிச்சிட்டு வாயிலயும் ஊத்துனான்.

மெள்ளஅவர தூக்கிப் பாத்தான்.முடீல.வேகமா ஊர நோக்கி பொடரில காலு பட ஓடிவந்தான்.

ஊருக்காரங்கெள்ளாம் ஒண்ணாச் சேந்து அவர ஆசுபத்திரில சேத்தாங்க.பெரிய டாக்டர் நல்ல வேளையா சரியான டைமுக்கு அவர தூக்கி வந்தீங்கன்னு எல்லாரையும் பாராட்டினாரு.

அவங்கெல்லாம் வெள்ளையந்தான் இதுக்கு காரணன்னு சொல்ல அவரு வெள்ளையன வெரிகுட் அப்பிடின்னு பாராட்டினாரு.

அடிபட்டு ஆசுபத்திரில சேத்திருந்தாங்கள்ல அவருக்கு நல்லா சொகமாயிடுச்சு.அவரு சின்னக்காட்டூர் மக்களுக்கு நன்றிசொல்ல ஒரு நாளு அந்த ஊருக்கு காருல வந்தாரு.அந்த ஊரு மக்கள்ளாம் அன்பா விசாரிச்சாங்க.அவுரும் எல்லாருக்கும் தேங்ஸ் சொன்னாரு.தன்ன காப்பாத்துன பையன் பாக்கணும்ன்னு சொன்னாரு.ஒருத்தரு அவர வெள்ளையன் வீட்டுக்கு அழச்சுக்கிட்டு வந்தாரு.

வெள்ளையன் ஒரு ஏழை பையன்னு அவன் வாய் பேச முடியாத ஊமைன்னும் தெரிஞ்சு ரொம்ப வருத்தப் பட்டாரு.

தான் ஒரு மருத்துவர்ன்னும் மூலிகை ஆராய்ச்சிக்காக மூலிகை பறிக்க காட்டுக்கு வந்ததாகவும் கார் மரத்துல மோதி விபத்து நடந்ததாகவும் தன்ன காப்பாத்திய வெள்ளையனுக்கு தான் ஏதாவது செய்யனும்ன்னு விரும்பரதாகவும் அவன சென்னை அழிச்சுக்கிட்டுப் போய் சிகிச்சை அளித்துப் பேச வைக்கப் போரதாகவும் சொல்லி வெள்ளையனையும் அவனோட பெத்தவங்களையும் சென்னைக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு.

பெரிய பெரிய மருத்துவரெல்லாம் வெள்ளையன சோதிச்சுப் பாத்தாங்க.ஒண்ணுமே பிரர்ச்சனை இல்லை என்றும் நாக்கின் அடிப்பாக சதை வாயின் கீழ் வரிசை பற்களுக்கு அடியில் கூடுதலாக ஒட்டியிருப்பதாகவும் அதை லேசாக சிறிதளவு வெட்டி விட்டால் நன்றாக பேச்சுவரும் என்று சொல்லி சிகிச்சை தர...என்ன ஆச்சரியம் பிள்ளையாரின் அருளால் வெள்ளையனுக்கு நன்றாகப் பேச முடிந்தது.தனக்கு சிகிச்சைதந்து பேச வைக்க உதவிய மருத்துவருக்கு வெள்ளையன் அவனது பெற்றோரோடு செர்ந்து அந்த ஊரே நன்றி சொன்னது.

இப்போதெல்லாம் வெள்ளையன் நிறைய பக்திப் பாடல்களை மிக இனிமையாக கணீரென்று பாடுகிறான்.அதுவும் வினாயகர் மீது பாட அவனுக்கு ரொம்ப ஆசை.அவர்தானே அவனுக்கு நல்லது செய்தவர்.பாத்துக்கிட்டே இருங்க வெள்ளையன் சினிமாவுலயும் பாடி கலக்கப் போகிறான்.

ஹாய் குட்டீஸ்...வழக்கம்போல சின்னவங்க,பெரியவங்க,ரொம்ப பெரியவங்க எல்லாரும் இந்த கதைய படிச்சீங்க தானே?குட்டீஸ்..வெள்ளையனப் போல நீங்களும் விடாமுயற்சியோடும் கொஞ்சம் கடவுள் பக்தியோடும்,பிறருக்கு உதவும் மனதோடும்,சமயோசித புத்தியோடும் இருந்தா நீங்க ஆசைப்படற எந்த ஒரு நல்ல முயற்சியிலேயும் கட்டாயம் வெற்றி பெறலாம்..இப்பிடி இருப்பீங்கதானே? நன்றி.....

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.