(Reading time: 11 - 21 minutes)

ப்ப சட்டுன்னு அவன் பார்வ தம்பி சந்தோஷோட தகர பொட்டிமேல விழுந்திச்சு.ஓடிப்போயி அத தொறந்து பாத்தான்.பாத்தா... அதுல ஒரு மண்ணு உண்டியல் இருந்திச்சு.அந்த உண்டியல்ல அம்மாவும் அப்பாவும் தினம் தினம் கொடுக்குற ஒரு ஒரு ரூபாய்(மொத்தம் ரெண்டு ரூபாய்)காச சந்தோஷ் சேமித்து வைப்பான்.(ஆனா ஆகாஷ் தனக்கு அம்மாவும் அப்பாவும் கொடுக்கிர காச அன்னியன்னிக்கு கண்டதையும் வாங்கி தின்னுடுவான்.சேமித்து வைக்கும் நல்ல பழக்கம் அவங்கிட்ட கிடையாது) பொட்டிக்குள்ள இருந்த உண்டியல வெளியே எடுத்தான் ஆகாஷ்.அது ரொம்ப கனமா இருந்திச்சு.நிறைய காசு இருக்கும்போலன்னு சந்தோஷமா நெனச்சுக்கிட்டே அந்த உண்டியல வேகமா ஓங்கி படீர்ன்னு கீழ போட்டு ஒடச்சான் ஆகாஷ்...என்ன ஆச்சு தெரியுமா?உண்டில ரொம்ப நாளா சந்தோஷ்சேத்து வெச்கிருந்த காசெல்லாம் நாலு பக்கமும் செதறி விழுந்திச்சு..நிறைய காச பாத்ததும் ஆகாஷ்க்கு சந்தோஷம் தாங்க முடில.அவசர அவசரமா பரக்க பரக்க எல்லா காசையும் பொறுக்கி ஒரு கேரீ பேக்குல போட்டான்.எவ்வளவு தொகைன்னு எண்ணக்கூட இல்ல.அவனுக்கு எண்ணவும் தெரியாது.மக்கு பயதானே அவன்.கெடச்ச காசுக்கு செல்போன் வாங்கணும்கிற ஆசையில வீட்டு வாசக் கதவக் கூட சாத்தாம கடைத்தெருக்கு ஒடினான் ஆகாஷ்.

அந்த ஊரு கடைத்தெருவுல நாலஞ்சு செல்போன் கடைங்க இருந்திச்சு.அதுல ஒரு கடைவாசல்ல போயி நின்னான் ஆகாஷ்.உள்ளே போய் செல்போன் வேணும்ன்னு கேக்க தயக்கம்.பத்து நிமிஷம் கால் மணி னேரம் ஆச்சு நின்னுகிட்டே இருந்தான்.அப்ப இவனையே ரொம்ப னேரமா பாத்துக்கிட்டு இருந்த ஒருத்தன் நைஸா இவங்கிட்ட வந்து பேச்சு கொடுத்தான்.அவ ஒரு பக்கா திருடன். புள்ள புடிக்கிறவன்...ரொம்ப ரொம்ப கெட்டவன்.அவன் ஆகாஷ தம்பி..தம்பின்னு அன்பா கூப்பிட்டான்.ஆகாஷ் அவன பாத்தான்.தம்பி நீ ஏன் ரொம்ப நேரமா இங்க நிக்கிற?ஒனக்கு ஏதாச்சும் வாங்கணுமா?நான் ஒனக்கு ஹெல்ப்பு பண்ணட்டுமா?அப்பிடின்னு அன்பா கேக்கறமாதிரி நடிச்ச்சான்.

ஒடனே அவன நம்பிட்டான் ஆகாஷ்.சார்..எனக்கு ஒரு செல்போன் வேணும்..இதோ இந்த காசுக்கு வாங்கித்தறீங்களா?அப்பிடின்னு கேட்டு காசு இருக்குற கேரீ பேக்க அவன்ட்ட குடுத்தான்.நம்மகிட்ட நல்லா ஏமாந்தான் இந்த பையன்னு நெனச்ச அந்த திருடன்..தம்பி இந்த கடையில செல்போன் ரொம்ப விலை.எனக்குத் தெரிஞ்ச கடைக்கு வா..அங்க ரொம்ப கொறஞ்ச விலைக்கு நல்ல செல்போனா வாங்கித்தறேன்..என்னோட வரியான்னு கேட்டான்.சரின்னு அந்த திருனோட கெளம்பிட்டான் ஆகாஷ்.லூஸுப்பய..மக்குப்பய..என்னசொல்றீங்க குட்டீஸ்?ஓ.ஆகாஷ திட்றீங்களா ஆமாமா..நீங்க சொல்லுறது சரிதான்..ஆகாஷ் லூஸுபயதான்..யாராவது முன்னப் பின்ன தெரியாதவங்களோடு அவங்க கூப்டதும் போவாங்களா?நீங்கள்ளாம் அப்பிடி போகமாட்டீங்கள்ல?

குட் பாய்ஸ்..குட் கேள்ஸ்.அந்த திருடன் என்ன பண்றான் ஆகாஷ ஒரு ஆட்டோவுல ஏத்திகிட்டு போறான்.ஆட்டோ வேகமா போவுது..

ப்ப என்ன காரணத்தாலோ ஸ்கூல் கிடையாதுன்னு சொல்லிவிட சந்தோஷ் வீட்டு திரும்பி வந்துக்கிட்டு இருந்தான்.அவன் ஆட்டோல ஆகாஷ் யாரோடையோ போரத பாத்தான்.அவுனுக்கு திக்குன்னுது.என்ன இது ஆகாஷ் யாரோட ஆட்டோவுல போரான்?அந்த ஆளு யாருன்னு தெரியலயேன்னு யோசிச்சிக்கிட்டே சட்டுன்னு அந்த ஆட்டோவோட நம்பர உள்ளங்கையில குறிச்சிக்கிட்டான்.அவனுக்கு ஏதோ தப்பு நடக்குதுன்னு தோணிச்சி.ஒடனே வேக..வேகமா வீட்டுக்கு ஓடினான்.அங்க பாத்தா கதவு தொறந்தே கெடந்திச்சு..உண்டியல் ஒடஞ்சு கிடந்திச்சு..காசல்லாம் காணும்...ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு நினச்ச சந்தோஷ் புத்தகப் பைய வீட்டுலயே வெச்சிட்டு வாச கதவ மூடிட்டு கிடு கிடுன்னு ஓட்டமா ஓடி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போனான்.இன்ஸ்பெக்டர்ட்ட எல்லாத்தியும் சொல்லி ஆட்டோவோட நம்பரையும் சொன்னான்.

ஆட்டோவோட நம்பர புத்திசாலித் தனமா குறிச்சிக்கிட்டு வந்ததுக்காக இன்ஸ்பெக்டர் அவன வெரி குட் பாய் அப்பிடின்னு பாராட்டினாரு நாலஞ்சு போலீஸ்காரங்கள அழைச்சுக்கிட்டு சந்தோஷயும் கூட்டிக்கிட்டு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குறிச்சிக்கிட்டு வந்த நம்பர வெச்சு ஆட்டோக்காரர கண்டுபுடிச்சிட்டாரு.அவன் பயந்துகிட்டே அந்த திருடனையும் ஆகாஷையும் இறக்கிவிட்ட எடத்துக்கு அழைச்சுக்கிட்டு போனான்.எல்லாரும் வேனிலும்,ஜீப்பிலுமாக போய்க்கிட்டு இருந்தாங்க.

தே சமயம் அந்த திருடன் என்ன செஞ்சான் தெரியுமா?ஆகாஷ ஒரு பழய பங்களா ஒண்ணுல ஒரு ரூமுல போட்டு பூட்டினான்.ஆகாஷ் என்னை ஏன் இங்க கொண்டுவந்து பூட்டிவெக்கிற..என்னை விட்டுடு..எனக்கு பயமா இருக்கு..என்ன யாராவது காப்பாத்துங்க..காப்பாத்துங்க அப்பிடின்னு கத்தினான்.அந்த திருடன் கெக்..கெக்..கெக்..ஹா..ஹா..ஹான்னு சிரிச்சான்.டேய்..பயலே ஒன்ன விடுரதுக்கா இங்க அழச்சுக்கிட்டு வந்தேன்?ஒன்ன 30,000 ரூபாய்க்கு ஒருத்தங்கிட்ட விக்கப்போறேன். அவன் இப்ப வந்துடுவான்.ஒன்ன கூட்டிக்கிட்டு போய் உன் கண்ண நோண்டி கைகால வெட்டி ஒன்ன பிச்ச எடுக்க வெப்பான் அப்பிடின்னு சொல்லிட்டு பயங்கரமாய் சிரித்தான்.

ஆகாஷ் ஓன்னு கத்தி கதற ஆரம்பிச்சான்.ஐயோ..தம்பி சந்தோஷ் மாரி நாமளும் நல்ல பையனா இருந்திருந்தா இப்பிடி இங்க வந்து இவன்ட மாட்டிருக்க மாட்டோமேன்னு அழுதான்.அப்போ அவன வெலைக்கு வாங்கர ஆள் வந்தான்.அவன் அந்த திருடன்ட பணத்த கொடுத்துட்டு ஆகாஷ வாடா என்னோட அப்பிடின்னு கையபுடிச்சி இழுத்தான்.ஆகாஷ் ஐயோ..ஐயோ..என்ன காப்பாத்துங்க..காப்பாத்துங்கன்னு கத்தினான்.

அந்த திருடனுங்க ரெண்டு பேரும்..அடங்கொய்யால..ஒன்ன காப்பாத்த இங்க யாருடா வருவான்னு ஹே..ஹே..ஹேன்னு சிரிச்சாங்க.

டேய்...திருட்டு நாய்ங்களா..இதோ நாங்க வந்துட்டோம்டா..அப்பிடின்னு சொல்லிக்கிட்டே போலிஸ் காரங்களொட இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைஞ்சு திருடங்க ரெண்டுபேரையும் புடிச்சு வேன்ல ஏத்தினாரு.

ஆகாஷ்.. சந்தோஷ்ன்னு கத்திக்கிட்டே ஓடிவந்து தம்பிய கட்டிபுடிச்சிக்கிட்டான்.

எல்லாருமா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தாங்க.அங்க ஆகாஷ்,சந்தோஷ் இவங்களொட அப்பாவும் அம்மாவும் இருந்தாங்க.ஆகாஷ் அம்மாவ  ஓடிப்போய் கட்டிக்கிட்டு அழுதான்.இனிமே நான் நல்ல பிள்ளையா இருக்கேன்னு சொன்னான்.அதக்கேட்டு அவனோட அம்மாக்கும் அப்பாக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்திச்சி.இன்ஸ்பெக்டர் சந்தோஷ வெகுவா பாராட்டினாரு..குட் பாய்..வெரி குட் பாய் அப்பிடின்னாரு.பள்ளிக்கூட ஆண்டு விழாவுல சந்தோஷ்க்கு மாவட்ட ஆட்சியர் பரிசு கொடுத்து பாராட்டினாரு.சந்தோஷ ஊரே பாராட்டிச்சு.இப்பெல்லாம் ஆகாஷும் ரொம்ப நல்ல பையனா ஆகிட்டான்.அவனும் வெரி குட் பாய்ன்னு பேர் வாங்கறான். எல்லா பிள்ளைகளுமே நல்ல பேர வாங்கணும்தானே?......நீங்களும் குட் பாய்..குட் கேள் அப்பிடின்னு ..நல்ல பேர் வாங்குவீங்கதானே?

 நீங்களும் நல்ல பேரு வாங்குவோம்ன்னு சொல்றீங்களா? வெரி குட் வெரி குட்..நீங்க எல்லாருமே நல்ல பசங்க...

குட்டி பையங்களா..குட்டி பொண்ணுங்களா நீங்களும் சந்தோஷ் மாரி நல்ல புள்ளையா கொஞ்சம் சாமி பக்தியோடவும்,சேமிக்கிர பழக்கம் இருக்குறமாரியும் வளரணும்..நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும்.. வாடா முல்லைகளே..

இந்த கதை புடிச்சிருக்கா?வாண்டூஸ்...மற்றும் மற்றவர்களே?நன்றி..

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.