(Reading time: 14 - 27 minutes)

ண்டிதர் சொன்னவற்றைக் கேட்ட ராஜாவும் ராணியும் கண்களை இமைக்கவும் மறந்து வியப்போடு அமர்ந்திருந்தார்கள்.இதெல்லாம் உண்மையாய் இருக்குமா?இப்பெடியெல்லாம் நடக்குமா?அதுவும் ஒரு பெண்ணால் இவற்றையெல்லாம் சாதிக்க முடியுமா?என்ற ஐயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

அப்போது அரண்மனை வாசலில் மக்கள் ஹோ..ஹோ..ஹோ..என்று தாறுமாறாய் சப்த்தம் போடுவது கேட்டது.ராஜாவுக்கும் ராணிக்கும் மற்றும் அங்கே இருந்தவகளுக்கும் ஒன்றும் புரியவில்லை.அரசே..அரசே..என்று கத்திக் கொண்டே ஓடிவந்தான் ஒரு காவலாளி.

என்னவாயிற்று?வாசலில் என்ன சப்தம் என்று கேட்டார் ராஜா.

மன்னா..மன்னாதி மன்னா...அரசே..மஹாராஜா...காவலாளியால் பேசவே முடியல..கொஞ்சம் நிதானித்தான்...மஹாராஜா...வாசலில் குதிரை ஒன்று வந்திருக்கிறது...அது நடந்து வரவில்லை..பறந்து வந்தது....அந்த குதிரை சாதாரண குதிரை போல் இல்லை மிக அழகாக ..நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.அதன் கழுத்தில் ஒளி வீசும் மணி மாலை ஒன்று உள்ளது.

அவை எல்லாவற்றையும் விட அதிசயம் மஹாராஜா..அதற்கு உடலின் இரு புறமும் பறக்கும் வசதிக்காக றெக்கைகள் உள்ளன.அது மிகவும் முறட்டுக் குதிரையாக உள்ளது மஹாராஜா என்றான்.

என்னது பறக்கும் குதிரையா..அதிசயமாய் உள்ளதே..?என்றபடி ராஜா,ராணி,இளவரசி தங்கமாலா, ம்ற்றும் அங்கு இருந்தவர்கள் அனைவரும் அதிசயக் குதிரையைப் பார்க்க அரண்மனையின் வாசலுக்கு வந்தார்கள்.

வாசலில் நின்றிருந்தது அந்த அதிசயக் குதிரை.அதைப் பார்த்த அனைவரும் வாயைமூடாமல் கண்களைக் கொட்டாமல் மலைத்துப் போய் நின்றனர்.எல்லோர் கண்களும் அதன் உடல் முழுதும் பார்த்த பின்னர் அதன் வாலுக்கு வந்தன.என்ன்ன்ன்ன்ன்ன்...ன அதிசயம் அதன் வால் பச்சை நிறத்தில் இருந்தது.அதன் கழுத்தில் இருந்த மணிமாலை அனைவரின் கண்களையும் கூசச் செய்தது.

அது ஒரு தெய்வக் குதிரையாகத் தெரிந்தது அனைவருக்கும்.

ராஜாவோடும் ராணியோடும் நின்று கொண்டிருந்த இளவரசி தங்கமாலாவைப் பார்த்த குதிரை மெள்ள அவளை னோக்கி நடந்து வந்தது.இளவரசியின் அருகில் வந்த குதிரை சட்டென அவளின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தது.இதை எல்லோரும் அதிசயமாய்ப் பார்த்தார்கள்.இளவரசி என்ன பண்ணினா தெரியுமா பட்டூஸ்...குதிரையோட முதுக தடவிக்கொடுத்துக்கிட்டே "பஞ்சகல்யாணீ " அப்பிடின்னா.ஒடனே அந்த குதிர ஓஹ்ஹ...ஓஹ்ஹ....ஹி..ஹி..ஹிக்க்க்க் அப்பிடின்னு கனச்சிது.

ராஜாக்கும் ராணிக்கும் புரின்சிடிச்சி...இளவரசி சாதனை செய்ய கெளம்பர நேரம் வந்தாச்சுன்னு.

இளவரசியும் ராஜா ராணியோட கால்ல விழுந்து தான் பிறந்த காரணத்துக்கான செயல்கள செய்ய கிளம்புரதாகவும் தனக்கு ஆசிவழங்கி அனுமதி தரணும்ன்னு கேட்டா.தான் வெற்றியோட வருவேன் பயப்பட வேண்டம்ன்னும் சொன்னா.ராஜாவும் ராணியும் இளவரசிய வாழ்த்தி ஒரு வாளையும் அவளோட கையில கொடுத்து வெற்றியோட திரும்பி வான்னு அனுப்புனாங்க.சட்டுன்னு பஞ்சகல்யாணி குதுர மேல ஏறினா தங்கமாலா.விர்ருன்னு மேல ஏறிச்சு குதுர.இளவரசிக்கு வெற்றி கிட்டட்டும்..இளவரசிக்கு வெற்றி கிட்டட்டும்ன்னு ஜனங்களெல்லாம் சத்தம்போட்டு வாழ்த்தினாங்க.

குதுர இளவரசியோட வானத்துல றெக்கய விரிச்சி பறக்க ஆரம்பிச்சிச்சு.

ஏழு மலை ஏழு கடல் ஏழு தீவு தாண்டி பறந்து எட்டாம்தீவுக்கு வந்து நின்னுச்சி அந்த பஞ்சகல்யாணி குதிரை.அந்த தீவு மேல நாலு காலையும் அழுத்தி வெச்சு நின்னுது குதிரை.அப்ப பூகம்பம் வந்தாப்புல கிடு கிடுன்னு ஆடிச்சு அந்த தீவு.அனா அந்த குத்ரை ரொம்ப ஸ்ட்ராங்கா நின்னுச்சி.தங்கமாலா குதிரைய கெட்டியா புடிச்சிகிட்டா.அவ கீழ விழல.அப்ப குதிரையோட கழுத்து மாலைலேந்து ஒரு மணி தெரிச்சி தீவு மன்ணுல விழுந்திச்சி.அடுத்த நொடி படார்ன்னு பூமி வெடிச்சு அதுலேந்து ஒரு ஐஞ்சு தல பாம்பு வெஷத்த கக்கிக்கிட்டே வெளிய வந்திச்சு.அப்ப இன்னோரு மணி குதுர கழுத்துலேந்து பாம்பு மேல விழுந்திச்சு பாம்பு அப்பிடியே பக்குன்னு எரிஞ்சி போய்டிச்சி.

அப்பரம் ஒரு பூதம் பயங்கரமா சிரிச்சிகிட்டே வந்திச்சு.அதும் மேலயும் ஒரு மணி விழ அதும் ஒரு பூச்சியா மாரி சொத்துன்னு கீழ விழிந்திடிச்சி.அதுக்கப்பரம் ஒரு சூனியக்கார கிழவி வந்தா மந்தரக் கோலோட. இன்னூரு மணி அந்த மந்திரக் கோல் மேல விழ அது ஒடஞ்சி போக அந்த கிழவி ஒரு நாயா மாறிட்டா.உடனே இளவரசி என்ன பண்ணினா அந்த நாய வாளால வெட்டி கொன்னுடரா.

அவ்வளவுதான் பூமிக்குள்ளேந்து ஒரு அழகான நாடு வெளியே வந்திச்சி.அதுல ..நிறைய மனுஷங்க,மிருகங்க,பறவைங்கன்னு ..நிறைய உயிரினங்க இருந்திச்சி.ஆனா எல்லாமே கல்லு ரூபத்துல இருந்திச்சி.அழகான அரண்மன ஒண்ணும் இருந்திச்சி.அதுல கல்லு ரூபத்துல ராஜா ராணி இளவரசன் எல்லாரும் இருந்தாங்க.அந்த அரண்மனையில ஒரு பெரிய குடம் ஒண்ணு இருந்திச்சி.அந்த குதிர என்ன செஞ்ச்சிது தெரியுமா?இளவரசியோட கழுத்துல இருந்த தங்க ருத்திராட்ச மாலைய கழ்ட்டி அந்த குடத்துல போட இளவரசிக்கு ஜாட காட்டிச்சு.இளவரசியும் கழுத்துலேந்து மாலய கழட்டுனா.என்ன அதிசயம் ரொம்ப ஈஸியா மாலய கழட்ட முடிஞ்சிது.அத அந்த கல்லுக் கொடத்துல போட்டா.அந்த கொடம் முழுக்க தண்ணீர் ரொம்பிச்சு.அந்த கொடத்த தூக்கிக்கிட்டு குதிரையோட முதுகுல ஏறிக்கிட்டா இளவரசி.குதுர வானத்துல பறக்க ஆரம்பிச்சிது.அந்த நாட்ட வட்டமிட்டு பறந்திச்சு.அது புனிதமான தண்ணி.அந்த தண்ணிய நாடு முழுக்க இளவரசி தெளிச்சா.ஒடனே என்னாச்சு தெரியுமா..?கல்லாப் போயிருந்த மரம் செடி கொடி அருவி ஆறுகள் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள்ன்னு எல்லா உயிர்களுக்கும் சட்டு சட்டுன்னு உயி வந்துடிச்சி.ஒவ்வொரு உயிரும் எந்த வயசுல கல்லாமாறிச்சோ அதே வயசுல இப்போ உயிரோட எழுந்துகிச்சுங்க.இளவரசி தங்கமாலாக்கு எல்லாரும் உயிரோட வந்தத பாத்து ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு.குதுர கீழ எறங்கிச்சு..தங்கமாலா குதிரையோட அரண்மனைக்குப் போனா.

இளவரசியையும் குதிரையையும் அந்த நாட்டு ராஜாவும் ராணியும் மட்டுமில்ல அந்த நாடே பாராட்டிச்சு..நன்றி சொல்லிச்சு.அப்ப குதிர அரண்மனைக்கு பின்புரம் போய் நின்னு பலமா கனைச்சிது.எதோ காரணமிருக்குன்னு எல்லாரும் அங்க போனாங்க.அப்ப குதிர காலால மண்ண நோண்டிச்சி.ஒடனே ராஜா அந்த இடத்த தோண்ட ஆளுங்களுக்கு கட்டளையிட்டான். 

என்ன ஆச்சரியம் தோண்ட தோண்ட நம்பவே முடியாத அளவு புதையல் வந்துகிட்டே இருந்திச்சி.

அந்த புதையல வெச்சு இந்த ஒலகத்தையே வாங்கலாம்.அந்த அளவு புதையல் இருந்திச்சி.

எல்லாரும் சந்தோஷத்துல ஆரவாரம் செஞ்சாங்க.

சரி நான் வந்த வேல முடிஞ்சிடுத்து நானும் குதிரையும் கெளம்பறோம்ன்னு தங்கமாலா சொன்னா.

ஆனா அந்த ராஜா இந்த புதையல னீயும் உன் குதிரையும்தான் கண்டு புடிச்சீங்க..எங்களையும் நீங்கதான் மறுபடியும் உயிர்ப்பிச்சீங்க..அதுனால இந்த புதையல நீயே எடுத்துக்கன்னு சொன்னான்.

ஆனா தங்கமாலா புதயல ஏத்துக்க மறுத்துட்டா.நானும் உன்னோடு உங்க நாட்டுக்கு வந்து உன்னோட அம்மா அப்பாட்ட ..நன்றி சொல்லனும்ன்னு சொல்லிட்டு ..நிறையபேர அழச்சுக்கிட்டு கப்பல்ல மரகத நாட்டுக்கு கெளம்பினான் எட்டாம்தீவு அரசன்.

இளவரசி தங்கமாலா குதிரல ஏறி தன்னோட நாட்டுக்கு புறப்பட்டா.பத்திரமா திரும்பி வந்த இளவரசி தங்கமாலாவ பாத்ததும் மரகத நாட்டு ராஜா சந்திரவர்மனுமக்கும் ராணிக்கும் தாங்கமுடியாத சந்தோஷம்.நாட்டு மக்களுக்கும்தான்.நாடே திருவிழாக் கோலம் பூண்டிச்சி.

எட்டாம்தீவு ராஜா ராணி இளவரசன் மத்தவங்க எல்லாரும் மரகத நாட்டுக்கு வந்தாங்க.ராஜாவும் ராணியும் அவங்கள ரொம்ப சந்தோஷத்தோடு வரவேத்தாங்க.

அப்பறம் என்ன?இளவரசி தங்கமாலாக்கும் எட்டாம்தீவு இளவரசனுக்கும் கல்யாணம் ஆயிடுது.

பஞ்சகல்யாணி குதிர அவங்க ரெண்டு பேரையும் முதுகுல ஏத்திக்கிட்டு ஜாலியா ஒலகத்த சுத்திவர வானத்துல பறக்க ஆரம்பிச்சிடிச்சி.குட்டீஸ்..பட்டூஸ்..சுட்டீஸ்...நீங்கெள்ளாம் அடிக்கடி வானத்த பாருங்க..பஞ்சகல்யாணி குதுர இளவரசியையும் அவளோட புருஷனையும் முதுகுல ஏத்திகிட்டு ஒலகத்த சுத்தி வருதுல்ல அது ஒங்க ஊருல தெரியும் வானத்துக்கும் ஒரு நாளு வரலாம்.இந்த கதைய படிக்கும் கொஞ்சம் பெரியவங்களே நீங்களும் ஒங்க ஊருக்கும் பஞ்சகல்யாணி குதுர வரும் நீங்களும் பாக்குறீங்களா?

அன்பு குட்டீஸ்..நீங்கள்ளாம் நவராத்திரிக்கி கோயிலுக்கு கொலு பாக்க போவீங்க..தீவாளிக்கி டிரெஸ் எடுக்க கடைக்குப் போவீங்க..எனக்கும் ஆத்துல கொலுவைக்கணும் பூஜ பண்ணணும்..தீவாளிக்கு பட்சணம் பண்ணணும்..அதுனால இனிமே தீவாளிக்கு அப்பறமா கத சொல்றேன்..சரியா?

அன்பான கொஞ்சம் பெரியவங்களே....என்னோட "நவராத்திரி தேவியே வருக' கவிதைய படிச்சீங்களா?

அதுல இருக்கிற "அம்மனின் படம்"(புலி மேல) நான் வரஞ்சது..(systemla "PAINT' la) ..நல்லா இருக்கா?

நன்றி..நன்றி...

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.