(Reading time: 2 - 4 minutes)

விருந்து - சித்ரா

vadai

ந்த கதையின் ஹீரோ திருவாளத்தான் , இவர் மூளை கொஞ்சம் வித்தியாசமாக வேலை செய்யும் , அதனால் பொதுவாக எல்லோருக்கும் இடைஞ்சல் , அதனால்  இடைஞ்சல் செய்பவர்களை சரியான திருவாளத்தான்  என்று சொல்வதுண்டு .

இப்போ  இந்த கதைக்கு வருவோம் ,இவன் இது போல தில்லு முள்ளு செய்வதால் , பொதுவாக எல்லோரும் இவனை விட்டு விலகியே இருப்பார்கள் .

அந்த நாட்டு  ராஜா எல்லோருக்கும் ஒரு விருந்து குடுக்க அழைப்பு விடுத்தார்.

 நம்ம  ஹீரோவுக்கு மட்டும் அழைப்பு இல்லை , அதனால்  அழைக்காத எல்லோருக்கும் ஒரு பாடம்  கற்பிக்க  திருவாளத்தான்  முடிவு செய்தான் .

 விருந்து  நடைபெறும் இடத்திற்கு சென்று உள்ளே போக பார்த்தான் , ஆனால்  காவலாளி அனுமதிக்க மறுத்தான் , உடனே அவனிடம்  உள்ளே எனக்கு குடுக்கும்  வெகுமதியில்  பாதி  உனக்கு என்று அவனுக்கு ஆசை  காட்டி  உள்ளே நுழைந்தான் .

அடுத்த கட்டத்தில்  இருந்த காவலாளிகும்  அதே போல் பாதி  குடுப்பதாக  சொல்லி வெற்றிகரமாக உள்ளே நுழைந்தான் .

அங்கே  விருந்துக்கான  ஆயத்தங்கள்  நடந்து  கொண்டிருந்தது .

ஒவ்வொரு  இலைக்கு கீழும் இரண்டு வாழை  நார்களை  வைத்தான் . மக்கள் வந்து அமர்ந்தபின்  ,அவர்களுக்கு  அறுசுவை உணவு பரிமாற பட்டது .

அந்த நாரை  எதற்காக வைத்திருக்கிறார் கள்  என்று எல்லோரும் குழம்பினர் , அப்போ அங்கெ நம் ஹீரோ வந்து , பரிமாற பட்டிருக்கும் மெது  வடையின்  ஓட்டைக்குள்  அந்த நாரை கோர்த்து  இரண்டு காதுகளிலும்  மாட்டி கொண்டு தலையை அசைத்து அசைத்துதான் அந்த வடையை  உண்ண  வேண்டும் என்பது அரசர் ஆணை என்றான் .

மக்களும்  வேறு வழி இல்லாமல் அப்படியே செய்தனர் . விருந்து எப்படி நடக்கிறது என்று பார்க்க வந்த ராஜா இதை கண்டு அதிர்ந்தார் . விசாரித்த போது  இது திருவாளத்தான்  வேலை என்று தெரிந்தது , உடனே அவனுக்கு நூறு கசையடி  குடுக்குமாறு  ஆணை இட்டார் .

நம்ம  ஹீரோ அதை காவலாளிகள்   இருவருக்கும் பகிர்ந்து அளித்து விட்டு மகிழ்ச்சியுடன்  சென்றான்

ஆக   மெது  வடையில்  ஓட்டை  எதற்கு இருக்கிறது என்ற அரிய  உண்மையை இன்று தெரிந்து கொண்டோம் , திருவாளத்தானுக்கு  அந்த பேர் வந்த காரணமும்  புரிகிறது அல்லவா . 

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.