(Reading time: 10 - 19 minutes)

கொரங்கு மூஞ்சி..கொரங்கு வாலு.. ராஜா..ராஜா.. - தங்கமணி சுவாமினாதன்

Monkey king

குட்டீஸ்.....ஒங்களெலெல்லாம் பாத்துபேசி ரொம்ப நாளாயிடிச்சில்ல..எல்லாரும் நல்லா இருக்கீங்களா?... நல்லா இருக்கீங்களா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எப்பவும் சந்தோஷமா இருங்க குட்டீஸ்....கதைய சொல்லட்டுமா?

அந்த காலத்துல நம்ம நாட்ட ராஜாக்கள் ஆண்டுகிட்டு வந்தாங்க.ஜனங்கெள்ளாம் சந்தோஷமா இருந்தாங்க.அப்ப சிவபுரின்ற ஊர்ல அமுதநேசன் பூங்குழலின்னு புருஷன் மனைவி இருந்தாங்க.ரெண்டு பேருமே தீவிரமான சிவ பக்தர்கள்.ஒரு நாள் கூட அந்த ஊர்லஇருந்த சிவன் கோயிலுக்குப் போய் சாமி கும்புடாம இருக்க மாட்டாங்க.சிவன வேண்டாம சாப்புட மாட்டாங்க.ரொம்ப நாளா அவங்களுக்கு கொழந்தையே இல்ல.தினமும் கோயிலுக்குப் போரச்சேல்லாம் சாமி..எங்களுக்கு ஒரு கொழந்தைய குடு...நிறைய பணமும் காசும் நகையும் நட்டும் வீடும் மாடும் கொடுத்த நீ ஒரு கொழந்தைய கொடுக்க மாட்டேங்கிறயே..எல்லா செல்வத்தையும் நீயே எடுத்துக்க..எங்களுக்கு ஒரு கொழந்தைய மட்டும் கொடுன்னு கெஞ்சி கெஞ்சி வேண்டிப்பாங்க. பாவம்தானே அவங்க.எவ்வளவு பணம் இருந்தாலும் அது ஒங்களப்போல கொழந்தகளுக்கு ஈடாகுமா? நிறைய தானம் தர்மமும் பண்ணுவாங்க அவங்க.

அந்த சம்யத்துல அந்த ஊருக்கு சாமியார் ஒருத்தரு வந்தாரு.அவரு ஒடம்பு முழுக்க விபூதி பூசிக்கிட்டு கோவணம் மட்டும் கட்டியிருந்தாரு.ஊர்ல இருந்த எல்லாரும் அவர வேடிக்க பாத்தாங்க.அவரு அதப்பத்தி கவலயே படல. எப்பவும் நமசிவாய...சிவாய நம அப்பிடின்னு சொல்லிக்கிடே இருந்தாரு.கோயில் வாசல்லயும் கோயில் முகப்பு மண்டபத்துலயும், பிராகாரத்திலயும் ஒக்காந்துகிட்டு இருப்பாரு.தலை முழுக்க முடி முடிச்சு முடிச்சா சடையா இருந்திச்சி.அவர பாத்து சின்னப் புளைங்கள்லாம் பயந்து அழுதுச்சுங்க.அப்பிடி ஒரு நாளு ஒரு கொழந்த அவர பாத்து அழுதிச்சு..அந்த கொழந்த நம்ம பாத்துதான் அழுவுதுன்னு தெரிஞ்சுகிட்ட அவரு ஒடனே கைய நீட்டுனாரு..என்ன ஆச்சரியம் அவரு கையில ஒரு மரப்பாச்சி பொம்மயும் பனை ஓலைல செஞ்ச கிலுகிலுப்பயும் வந்திச்சு.அத அழுதுக்கிட்டு இருந்த கொழந்தைட்ட கொடுத்தாரு..பட்டுன்னு சிரிச்சிகிட்டே அதெல்லாம் வாங்கிகிட்டுது அந்த கொழந்த.அதப் பாத்த அங்க இருந்தவங்கெளுக்கெல்லாம் அந்த சாமியார்ட்ட ஒரு மரியாதையும் பக்தியும் வந்திடிச்சி.எல்லாரும் அவர கோவணம்கட்டி சாமியார்ன்னும் விபூதி சாமியார்ன்னும் சடை சாமியார்ன்னும் அவங்க அவங்க விருப்பப்படி கூப்பிட ஆரம்பிச்சாங்க.சாப்பாடு கொடுக்க ஆரம்பிச்சாங்க..ஒருனாளில் முதலில் யார் உணவு கொடுக்கிறார்களோ அதை மட்டுமே அவர் வாங்கிச்சாப்பிடுவார்.அன்று முழுதும் வேறு ஒன்றையும் மறுபடி சாப்பிட மாட்டார்.ஆனா ஒண்ணு அவர் யாருகிட்டேயும் பேச மாட்டாரு.சில பேரு அவர தங்கள் வீட்டுக்கு சாப்பிட வரணும்ன்னு வேண்டிக்கு வாங்க.ஆனா அவரு போகமட்டாரு.அவரு அந்த ஊருக்கு வந்தப்புறம் எல்லாருக்கும் நல்லதே நடந்திச்சு.

அதனால அவர ஜனங்களுக்கெல்லாம் ரொம்ப பிடிச்சுது..

முத நேசனும் பூங்குழலியும் இருக்காங்கள்ல அவங்க தினமும் கோயிலுக்கு வர்ரபோதெல்லாம் இந்த சாமியார கும்பிட்டு தங்களோட வீட்டுக்கு சாப்பிட வரணும்ன்னு வேண்டிக்குவாங்க.அவரு பதிலே சொல்லமாட்டாரு.

அமுதனேசனுக்கும் பூங்குழலிக்கும் ஒரு வழக்கம் இருந்திச்சு.அது என்னன்னா தினமும்

ஒரு அதிதிக்கு சாப்பாடு போடாம சாப்பிடமாட்டாங்க.அன்னிக்கு அப்பிடித்தான் யாராவது சாப்பிட வரமாட்டாங்களான்னு காத்துகிட்டு இருந்தாங்க.அப்ப வீட்டு வாசல்ல நமசிவாய..நமசிவாயன்னு சத்தம் கேட்டிச்சு.இவங்க ரெண்டு பேரும் வாசலுக்குப் போய் பாத்தாங்க. பாத்தா அந்த விபூதி சாமியார் நின்னுகிட்டு இருக்காரு.இவங்களுக்கு ஆச்சரியம் தாங்க முடில.அதோட சாமியார் தன்னோட வலது கையால வயிற்றையும் வாயையும் தொட்டு காண்பிச்சாரு.அவரு சாப்பிடவந்திருக்கறதா சொன்னது இவங்களுக்கு புரிஞ்சிது.ரொம்ப சந்தோஷமா ஆயிடிச்சு இவங்களுக்கு...அவர மகிழ்சியோடயும் மரியாதையோடையும் பணிவோடையும் வரவேற்றாங்க.அவர ஒக்காரவெச்சு பெரிய வாழ இலைய போட்டு ஒரு செம்புல குடிக்க தண்ணீர் வெச்சு சமச்செதயெல்லா பத்தியோட பரிமாறினாங்க பூங்குழலி அம்மா.அவர் பக்கத்துல கையகட்டிகிட்டு பவ்யமா நின்னுகிட்டிருந்தாரு அமுதனேசன்.

ஓம் நமசிவாய...சிவாய நம ஓம் அப்பிடீன்னு சொல்லிட்டு கோவண சாமியார் சாதத்த ரெண்டு வாய் அள்ளி வாயில போட்டுகிட்டு செம்புல இருந்த தண்ணிய மடக் மடக்குன்னு கொஞ்சம் குடிச்சிட்டு இலையில சாப்பாட்ட மீதியும் செம்புல தண்ணிய கொஞ்சம் மிச்சமும் வெச்சுட்டு எழுந்து கிட்டாரு.

அவருக்கு கைகால் அலம்ப தண்ணி எடுத்துக் கொடுக்க அமுதனேசனும் பூங்குழலியும் அவர அழச்சுகிட்டு புழக்கடை பக்கம் போனாங்க.

அப்ப என்னாச்சு தெரியுமா குட்டீஸ்....ஒரு கொரங்கு அமுதனேசன் வீட்டுக்குள்ள நுழஞ்சிடுத்து.அதுக்கு பயங்கர பசி. அதுங் கண்ணுல சாமியார் சாபிட்டுட்டு மிச்சம் வெச்சிருந்தாரில்ல எலேல சாதம் அது பட்டுடிச்சு.கிடு கிடுன்னு ஓடிப்போய் இலைல இருந்த மிச்ச சாதத்த சாப்பிட்டிடிச்சி..செம்புல சாமியார் குடிச்ச மிச்ச தண்ணி இருந்திச்சில்ல அதையும் குடிச்சிச்சு.புழக்கட பக்கத்துலேந்து திரும்பி வந்து கிட்டு இருந்த மூணுபேர் கண்ணுலயும் குரங்கு செஞ்ச காரியம் பட்டிச்சு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.