(Reading time: 10 - 19 minutes)

பூங்குழலி ஐயையோ.. குரங்கு இப்பிடி பண்ணிடுச்சே அபிடின்னி கத்திக்கிட்டேகொரங்க வெரட்ட ஒடி வந்தாங்க. அப்ப என்ன ஆச்சு தெரியுமா குட்டீஸ்...? அந்த கொரங்கு இருக்கில்ல அது சட்டுன்னு அந்த இலைக்கு பக்கத்துலயே சரிஞ்சு விழுந்து செத்திடுச்சி.பாவமில்ல கொரங்கு..அமுதனேசனும் பூங்குழலியும் கொரங்கு செத்து விழுந்தத பாத்து பயந்து ஓ ன்னு கத்திட்டாங்க...ஒருவேள சாப்பாட்டுல ஏதாவது விஷம் கலந்திருக்குமோ? விபூதி சாமியாருக்கு ஏதாச்சும் ஆயிடுமோன்னு பயந்திட்டாங்க.

ஆனா சாமியார் அவங்களப் பாத்து பயப்படாதீங்கன்னு ஜாட காமிச்சாரு.செத்துக்கிடந்த கொரங்குகிட்ட போயி அதுன் தலய தொட்டாரு.அப்புரமா அத வீட்டுக் கொல்லைலியே பொதைக்க சொல்லிட்டாரு ஜாடை காட்டி...அமுதனேசனுக்கும் பூங்குழலிக்கும் விபூதி கொடுத்து வாயில போட்டுக்கச் சொன்னாரு ஜாடையிலயே...அவரு கடைசி வர அவங்க கிட்ட வார்த்தையால பேசவே இல்ல.சட்டுன்னு வீட்டுலேந்து வெளியே போய்ட்டாரு.

சாமியாரோட ஆசிர்வாதமோ  என்னவோ விரைவிலேயே அமுதனேசனின் மனைவி கருவுற்றாங்க. அழகான ஒரு ஆம்புள புள்ள பொறந்திச்சி அவங்களுக்கு.சந்தோஷம் தாங்க முடியல.இருக்காதா பின்ன? புள்ளைக்கு சிவகடாக்ஷம்ன்னு பேரு வெச்சாங்க.

சிவகடாக்ஷம் சூப்பர் சூப்பர் சூப்பரான நல்ல புள்ளையா வளர்ந்தான்.அழகு அறிவு அடக்கம் பணிவுன்னு எல்லா நற்குணமும் அவங்கிட்ட இருந்திச்சு.இப்ப அவனுக்கு  எட்டு வயசாச்சு.

அந்த சமயத்துல அந்த நாட்டு ராஜாக்கு ஒடம்பு முடியாம போக அவரு படுத்தபடுக்கயாகிடறாரு. அவருக்கு வாரிசு இல்லகிறதுனால பட்டத்து யான கிட்ட பூமாலைய குடுத்து இளவரசன தேடிகிட்டு வர செய்யிராரு ராஜா.அது நேரா சிவபுரிக்கு வருது.வாசல்ல வெளயாடிட்டு இருந்த எட்டு வயது சிறுவன் சிவகடாக்ஷம் கழுத்துல மாலையப் போட்டு  துதிக்கையால அவன தூக்கி தன்னோட முதுகுல வெச்சிக்கிட்டு டாங்..டாங்..டாங் ந்னு அரண்மன நோக்கி கெளம்பிடுது.

யானையோட வந்த அரண்மனைக்காரங்க அவனோட அப்பா அம்மாவ ரொம்ப மரியாதையோட ராஜாட்ட அழைச்சுகிட்டு போறாங்க.அவங்களுக்கு புள்ள இளவரசனாது பத்தி ரொம்ப சந்தோஷம் ஒருபுறம் ஆவன் தங்களவிட்டு பிரிஞ்சிடுவானேன்னு வருத்தம் ஒரு புரம்ன்னு இருக்காங்க.சிவத்தொண்டு செய்ய திரும்ப ஊருக்கே வந்துடறாங்க.

காலம் ஓடுது.இப்ப சிவகடாக்ஷம் ராஜசிம்மன் ற பேர்ல ராஜவா ஆகிடரான்.அது ஒரு பொற்கால ஆட்சியா இருக்கு.நாடெங்கும் கோயில்கள்,குளங்கள்,பாடசாலைகள்,ஆதூர சாலைகள்ன்னு ..நிர்மாணிக்கிறான்.தானமும் தர்மமும் தழைக்கிது,எல்லா ஜனங்களுக்கும் ராஜா ராஜசிம்மன ரொம்ப பிடிக்கிது.

இப்ப ராஜா ராஜ சிம்மனுக்கு நாப்பது வயசாயிடிச்சி.ஒரு நாளைக்கு ராஜா தன்னோட மனைவி ராணி அலங்கார வள்ளியோடயும் மகன் அம்பரீஷ்ஷோடவும் மற்ற மந்திரிப் பிரதானிகளோடவும் ஒரு நந்தவனத்துல பேசிக்கிட்டு இருந்தாரு.திடீர்ன்னு ராஜாக்கு என்ன ஆச்சுன்னு தெரியல..என்ன னடந்துச்சு தெரியுமா குட்டீஸ்...

ராஜா என்ன பண்ணாரு.... குடுகுடுன்னு ஓடிப்போய் ஒரு மரத்துல ஏறினாரு..அந்த மரத்துலேந்து பக்கத்துல இருந்த இன்னொரு மரத்துக்கு தாவினாரு.அந்த மரத்துங் கெளைய புடிச்சிகிட்டு தலகீழ தொங்கினாரு...தொபீர்ன்னு கீழ குதிச்சாரு.வரக்.வரக்.. பரக் பரக்குன்னு கொரங்கு விலாவ சொறின்சிகுமே அது மாரி ரெண்டு கையாலையும் விலாவ சொரிஞ்சு கிட்டாரு..கொரங்கு போலவே கிரீச் கிரீச்ன்னு கத்துனாரு.ஒத்துருக்கும் ஒண்ணு புரியல...எல்லாரும் பயந்துட்டாங்க.ராணியும் இளவரசனும் அப்பிடியே கத்திட்டாங்க.மந்திரிங்க எல்லாரு அவர கஷ்டப்பட்டு அரண்மனைக்கு அழச்சுக்கிட்டு வந்து ஒரு ரூமுல படுக்கவெச்சாங்க.ராஜா ரூமுலேயே தூணுல எல்லாம் ஏறி ஏறி குதிச்சாரு.அவர பிடிச்சு கஷ்ட்டப்பட்டு தூங்க வெச்சாங்க.

று நாள் காலைல பாத்தா ராஜாக்கு கொரங்குமாரியே ஒரு வாலும் மொளச்சி மூஞ்சியும் கொரங்குமாரி ஆயிடிச்சி. என்னென்னவோ வைத்தியமெல்லா செஞ்சு பாத்தாங்க.ம்ஹூம்...சரியாவே ஆகல ராஜா.

ஜனங்களெல்லாம் ரொம்ப வருத்தப் பட்டாங்க.இப்பிடியே பலவருஷம் ஆயிடிச்சு.இளவரசன் ராஜாவா ஆயிட்டான்.அப்ப அந்த ஊருக்கு சாமியார் ஒருத்தரு வந்திருக்கறதா கேள்விப்பட்டு அவர பாக்க இளவரசன் போனான்.தன்னோட அப்பாவ பத்தி கேட்க.அந்த சாமியார் வேற யாருமில்ல.விபூதி சாமியார்தான் அவரு.இப்ப அவருக்கு நூறு வயசுக்கு மேல இருக்கும். அவர பாத்து தன்னோட அப்பா ஏன் இப்பிடி கொரங்கா மாரினாருன்னு இளவரச ராஜா கேட்க..

அமுதனேசன் பூங்குழலி வீட்டுக்குத் தான் சாப்பிடப் போனதும் அங்கு நடந்தது பற்றியும் குரங்கு தனது ஆயுளில் பாதி மட்டுமே வாழந்து மீதி வாழ்க்கை வாழாமல் இறந்து மறு பிறவியில் உன் தந்தையாகப் பிறவி எடுத்து ராஜாவாகி புண்ணிய காரியங்கள் பல செய்தான்.மனிதனாய்ப்பிறந்த உன் தந்தையின் வாழ்க்கை முடிந்து விட்டது.ஆனால் ஆயுள் முடியாமல் இறந்த குரங்கு மீண்டும் பிறந்து தன் முழு ஆயுளையும்  முடிக்க வேண்டும்.இது ஆண்டவன் எழுதி வைத்த விதி.அதனால் உன் தந்தை குரங்காக சிலகாலம்  மாறி வாழவேண்டியிருந்தது. இனி குரங்கு மற்றும் உன் தந்தையின் காலம் முடியும் காலம் வந்துவிட்டது. அது பற்றி நீ வருந்த வேண்டாம்.அரசனாய் இருந்தபோது உன் தந்தை செய்த அரும் பணிகளுக்காகவும் தான தர்மங்களுக்காகவும் அவன் மீண்டும் உனக்கு மகனாகப் பிறந்து உலகம் போற்றும் அரசனாக வாழ்வான் என்றார்.

இளவர ராஜா மனத் தெளிவு பெற்று அரண்மனை திரும்பினான்.

என்ன குட்டீஸ்.. கத அவ்வளவா புடிக்கிலையா...?..புடிச்சிருக்கா...சரி சரி...குட்டீஸ்..

இக்கதை ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான உதயணனின் கதை சொல்லும் சீவக சிந்தாமணியின் ஒரு கிளைக்கதையின் மையக் கருவை எடுத்து என் கற்பனையைக் கலந்து எழுதப் பட்டது. தவறாக நினைக்கவேண்டாம் கொஞ்ச ம் பெரியவர்களே..நன்றி குட்டீஸ்..மற்றவர்களே உங்களுக்கும்தான்...குட்டீஸ்...இப்ப நான் சொல்லுறத கொஞ்சம் சொல்லிப்பாருங்களேன்..எங்க..சொல்லிப்பாருங்க..

ரெட்பல்ப்.ப்ளூபல்ப் ரெட்பல்ப் ப்ளூபல்ப் ரெட்பல்ப் ப்ளூபல்ப்

விடாம கிடு கிடுன்னு ஒரு பத்து தடவ சொல்லுங்க...குளறாம சொன்னீங்கன்னா  சூப்பர் பாய் சூப்பர் கேள்... சரியா..நீங்களும் சொல்லிப்பாருங்க கொஞ்சம் பெரியவங்களே..நன்றி

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.