(Reading time: 9 - 17 minutes)

று நாள் வழக்கம் போல விறகு பொறுக்கச் சென்றார். சற்று நேரம் கழித்து அதே வெள்ளையுடை நபர் அவரிடம் வர, என்னடா இவர் தினம் தோறும் நம்மைத்தேடி வருகிறாரே?! என்று நினைத்துக் கொண்டார். அவர் தாத்தாவிடம் பேசி முன்தினம் நடந்ததை தெரிந்துக் கொண்டு,

"ஐயா,பரவாயில்லை இன்னொரு முறை என்னுடைய உதவியை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றுச் சொல்லி ஒரு குடம் நிறைய தங்கக் காசுகளை கொடுத்து மறைந்து விட்டார். இம்முறை அந்த குடத்தை மிகவும் பத்திரமாக வீடு கொண்டு வந்துச் சேர்த்த தாத்தா வீடு பூட்டப் பட்டிருப்பதையும், பாட்டி அக்கம் பக்கம் எங்கும் இல்லை என்பதையும் அறிந்துக் கொண்டவராக பாட்டியை அழைத்து வரத் தேடிச் சென்றார். போகும் முன்னர் குடத்தை வெகு நேரமாக தூக்கிக் கொண்டு வந்ததனால் கையில் வலி ஏற்பட்டதால் அந்தக் குடத்தை தன்னுடைய வாசலில் வைத்து அதை அங்கிருந்த ஒரு தாளை எடுத்து மூடி வைத்து விட்டுச் சென்றார்.

 சற்று நேரத்தில் அந்த தாள் குடத்திலிருந்து பறந்து விட்டது, காற்றின் வேகத்தில் பறந்துப் போய் பக்கத்து வீட்டு வாசலில் விழுந்தது. அவர்களது பக்கத்து வீட்டுப் பெண்மணி மிகவும் பொல்லாத குணம் கொண்டவள். அவளுக்கு யாரிடமாவது ஏதாவது காரணம் தேடி சண்டைப் போடாமல் இருக்கவே முடியாது, என்வே கோபத்துடன் தாள் பறந்து வந்த இடம் நோக்கி நடந்தாள். அங்கு வாசலில் ஒரு குடம் இருப்பதையும் அது தங்கக் காசுகளால் நிறைந்து இருப்பதையும் கண்டாள். அக்கம் பக்கம் பார்த்து விட்டு அதை எடுத்துக் கொண்டு தன் வீட்டின் உள்ளேச் சென்று பரணில் ஒளித்து வைத்தாள்.

 இங்கு பாட்டியை அழைத்துக் கொண்டு வந்த தாத்தா அவரிடம் தங்கக் காசுகள் நிறைந்த குடத்தை பற்றி மிகவும் மகிழ்ச்சியோடுச் சொல்லிக் கொண்டு வந்தார். வாசலில் வந்துப் பார்த்தால் அங்கு அந்தக் குடத்தை காணவில்லை. பாட்டிக்கு கோபம் வந்து விட்டது , 

"தினம் தோறும் புது புதுக் கதைகள் சொல்ல ஆரம்பித்து விட்டீர்கள் . இப்படி பொய் சொல்வது எனக்கு பிடிக்கவில்லை" என்றுக் கோபம் கொண்டார். தாத்தாவிற்கு குடம் மறைந்து போனதை விட மனைவி தன்னை நம்பவில்லையே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

 டுத்த நாள் விறகு பொறுக்கச் செல்லும் முன்னதாக வழக்கம் போல் பாட்டி சமையல் செய்ய ஆரம்பித்தார். அன்று மீன் குழம்பு வைக்க வேண்டுமென்று அவர் ஏற்கெனவே இரண்டு மீன்களை வாங்கி வந்திருந்தார். 

 மீன் கழுவுகையில் பாட்டி திடீரென மகிழ்ச்சியாக தன்னைக் கூப்பிடுவதைப் பார்த்து தாத்தா அங்குச் சென்றார். அங்கே அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது அந்த இரண்டு மீன்கள் வயிற்றிலிருந்தும் பாட்டிக்கு இரண்டு வைரங்கள் கிடைத்து இருந்தன. அவை அந்த வெள்ளுடை நபர் தந்த வைரங்கள்தான் என தெரிந்துக் கொண்ட தாத்தா அதைக் குறித்துக் கூறினார். இருவருமே தங்கள் வறுமை நிலை மாறி விட்டது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

 பின்னர் மீன் கழுவிய தண்ணீரை வழக்கமாக ஊற்றும் மரத்தின் கீழ் ஊற்றச் சென்ற தாத்தா ஏதேச்சையாக மேலே எட்டிப் பார்க்க அங்கு மரத்தின் ஒரு கிளையில் ஏதோ மின்னுவதாக அவருக்கு தோன்றியது. அது என்னவென்றுப் பார்க்க அவர் மரத்தில் ஏறினார். அங்கே அவருக்கு அன்றைய நாளின் இரண்டாவது ஆச்சரியம் காத்திருந்தது.பறவையிடம் அவர் தவறவிட்ட வைரமாலை மரத்தின் கிளையில் தொங்கிக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்து அவர் மகிழ்ச்சியின் மிகுதியில் " நான் பார்த்துட்டேன், எனக்கு கிடைச்சிடுச்சி, இதோ அது இங்கேதான் இருக்கு" என்று பாட்டிக்கு கேட்கும் விதமாக கத்தி கூப்பிட்டார். பாட்டியும் என்னமோ ஏதோவென பதறி அடித்துக் கொண்டு மரத்தின் கீழே வந்து நின்றார்.

 அவரது கத்தலைக் கேட்டு அங்கு இன்னொரு நபர் பயந்துப் போய் விட்டார், அது வேறு யாருமில்லை அந்த பக்கத்து வீட்டுக்கார அம்மாள் தான். அன்று அவரது வீட்டின் ஓட்டைத் திறந்து வைத்து சரி செய்துக் கொண்டிருந்தார்கள். மரத்தில் தாத்தா ஏறியதையும் , " நான் பார்த்துட்டேன், எனக்கு கிடைச்சிடுச்சி இதோ அது இங்கேதான் இருக்கு" என்று அவர் கத்தியதையும் பார்த்து, எங்கே அவர் தன்னுடைய வீட்டுப் பரணிலிருக்கும் குடத்தைத் தான் பார்த்து விட்டாரோ என அஞ்சி நடுங்கிப் போய் விட்டார். எல்லோரும் தன்னைத் திருடி எனக் கூறி விடுவார்களே என எண்ணிக் கலங்கியவறாக அதனை மறுபடி எப்படி திரும்ப அவர்களிடம் சேர்ப்பது என்று யோசித்தார். தாத்தா பாட்டி இரண்டு பேருமே வீட்டில் இல்லை என்பதை அறிந்து தான் எடுத்த மாதிரியே அந்த தங்கக் காசு நிறைந்த குடத்தை சத்தமேயில்லாமல் வீட்டு வாசலில் மறுபடி வைத்து விட்டு வந்து விட்டார்.

 இங்கு மரத்திலிருந்து இறங்கிய தாத்தா தன் கையிலிருந்த வைரமாலைக் குறித்து தன் மனைவிக்கு கூறிக் கொண்டு, அது தனக்கு மறுபடிக் கிடைத்தது குறித்த தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொண்டு வந்தார்.

 வீட்டிற்கு வந்தவர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியாக தங்கக் காசுகள் நிறைந்த குடம் வாசலில் காத்திருந்தது. இருவருமே அன்று மிகவும் மகிழ்ச்சிக் கொண்டனர். பாட்டி தான் தாத்தா கூறியதை நம்பாமல் சண்டையிட்டதற்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டார். 

தன் பின்...

அதன் பின் என்ன இரண்டு பேரும் தங்களுடைய முதுமையில் வேலைச் செய்து வாழ வேண்டிய நிலை மாறி விட்டதால் , தேவையான ஓய்வு எடுத்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்கள். தங்களுக்கு தேவையானதை விட மிகுதியான செல்வத்தைக் கொண்டு பிறருக்கு உதவிச் செய்தார்கள். ஆனால், சண்டைப் போடுவதை மட்டும் நிறுத்தவில்லை. ஆம் இப்போதும் அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் வருகின்றது. அது என்னவென்று கேட்கிறீர்களா?

 அந்த வெள்ளுடை நபரைத் தான் பார்த்துப் பேசியிருப்பதால் அவர் மனிதர் தான் என்கிறார் தாத்தா , இல்லை, இப்படி எந்த மனிதனாவது பிறருக்கு உதவி செய்வார்களா அவர் மனிதராக இருக்கவே முடியாது அவர் இறைவன் அனுப்பிய தேவதைதான் என்கிறார் பாட்டி... நீங்க என்னச் சொல்றீங்க குட்டீஸ்....

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.