(Reading time: 10 - 20 minutes)

Rice

ப்போ அந்த நாத்துச் செடிகளையெல்லாம் நாற்றங்காலிலிருந்து எடுத்து பயிர் செய்யக் கூடிய நிலத்தில நடுவாங்க. அதை “நாத்து நடுதல்”நு சொல்லுவாங்க. இந்த நாத்து எல்லாம் நடுறதுக்கு முன்னால அந்த நிலத்தை நல்லா உழுது, உரம் போட்டு, சமப் படுத்தி ( ஏதேது……கிரிக்கெட் கிரவுண்ட் எல்லாம் எப்படி சமப் படுத்துவாங்க ம்ம் அதே மாதிரியான்னு கேட்கிறீங்களா? ரொம்ப சரி அதை “மரமடித்தல்”னு சொல்வாங்க.)

நல்லா ஏற்கெனவே தண்ணீர் பாய்ச்சி இருக்கிற இருக்கிற நிலத்தில நாத்துக்களை ஒன்றிரண்டா எடுத்து அது நல்லா பெரிசா வளரும் போது அதுக்கு வளர நிறைய இடம் தேவைப் படும் இல்ல அதுக்காக கொஞ்சம் இடைவெளி விட்டு நடுவாங்க. இந்த நாத்துக்கள் தான் நல்லா பெரிசா நெற்பயிரா வளர்ந்திடும். அதனோட நெற்மணிகள் பெரிசா வளர்ந்ததும் செடி அதன் கனம் தாங்காம ஒரு பக்கமா சாஞ்சிடும். அப்படி சாஞ்சி ஸ்டைலா நிக்கும் போது அந்த செடிகள் எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். 

இப்படி நெற்பயிர் முழு வளர்ச்சி அடைஞ்சதும் அந்த நெற்செடிகளையெல்லாம் அறுத்து ஒண்ணுச் சேர்க்கிறதை தான் அறுவடைன்னு சொல்லுறோம். முன்பெல்லாம் 3 மாசம், 4 மாசம் இல்ல 6 மாசம் வரை பயிர் செய்வாங்களாம். அப்போதான் நமக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும். அரிசி எப்படி விளையுதுன்னு இப்போ புரிஞ்சதா குட்டீஸ்?

என்ன நான் சொன்னதைக் கேட்டு கேட்டு உங்க எல்லோருக்கும் ரொம்ப டயர்டா ஆகிட்டா? ஐயோ பாவம். ஆமா குட்டீஸ் நமக்கு கேட்கிறதே இவ்வளவு டயர்ட் ஆகுதே, அப்படின்னா தினமும் கஷ்டப் பட்டு விவசாயம் செய்யிற விவசாயிகளுக்கு எவ்வளவு டயர்ட் ஆகும் இல்ல?. இப்படி அவங்க கஷ்டப் பட்டு விளைவிக்கிற உணவை நாம் எப்போதுமே வீணாக்க கூடாது சரிதானே குட்டிகளா?

அறுவடை முடிஞ்சதோட இன்னும் வேலை முடியலை. அந்த நெற்செடிகளில் இருக்கும் நெற்மணிகளை தனியாக பிரித்து எடுக்கணுமே? அதற்காக விவசாயிகள் “கதிரடிப்பாங்களாம். அப்படின்னா அந்த நெற்செடிகளை கட்டா கட்டி தரையில் அடிப்பாங்க அப்படி அடிக்கும் போது நெற்மணிகள் எல்லாம் உதிர்ந்து நிலத்தில் விழுந்து விடும். அதை சேகரிப்பாங்க.

கதிரடித்த பின்னாலும் கூட அந்த செடிகளில் உதிராத நெற்மணிகள் இருக்கும். இப்போ அந்த நெல்மணிகளை எப்படி உதிர வைக்கிறது? அதற்காக அவங்க நெற்செடிகளை வட்டமாக ஒன்னுக்கு மேல ஒன்னா அடுக்கி வச்சிடுவாங்க. அதை “சூடு” ன்னு சொல்வாங்க. இந்த நெற்கதிர் இப்படி அடுக்கி வச்சிருக்கிர இடம் நிஜமாகவே ரொம்ப சூடாக இருக்கும். அந்த வெக்கையில் இரண்டு , மூணு நாட்கள் வச்சிருந்தா, உதிராம இருந்த நெல்மணிகள் தானாகவே உதிர்ந்து விழுந்து விடும். 

அப்படியும் நெற்மணிகள் எல்லாம் விழாவிட்டா அந்த நெற்செடிகள் மேல மாட்டை நடக்க வைப்பாங்க. இப்போ மாடு எல்லா நெல்மணியும் உதிர்ந்த பின்னே மாட்டுக்கு தீவனமா அந்த வைக்கோலை பயன்படுத்துவாங்க.

அப்பாடா ஒரு விவசாய பாடமே நடத்திட்டேன் இல்ல குட்டீஸ். உங்களுக்கு போரடிச்சிருந்தா..............நீங்களும் போரை அடிச்சிடுங்க சரியா .....சும்மா விளையாட்டுக்கு..........

அச்சச்சோ விவசாயம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்த நேரத்தில நம்ம (ஓவர்) ஸ்மார்ட் கோபால் சாரை மிஸ் பண்ணீட்டோமே.... ஹி ஹி....

எனக்கு அவர் சத்தம் கேட்குது..........உங்களூக்கு கேட்குதா...............அதே ஓல்ட் டயலாக் ஆமாம்.

அக்கா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

ஓ அண்ணா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

இந்த சத்தம் அந்த வேலு அண்ணாக்கு கேட்டுதாம், எந்த வேலு அண்ணா ...ம்ம் அதே வேலு அண்ணா தான் அவங்க வயலில நேற்று தான் அறுவடை நடந்திருக்கு. இன்னிக்கு அவங்க கதிரடிச்சி நெற்பயிறெல்லாம் கூட்டிச் சேர்த்து வச்சி, "சூடு" (அதான் ஒன்னு மேல ஒன்னா நெற்பயிறை அடுக்கி வைக்கிறது) வச்சிட்டு காவலுக்கு வயலுல இருந்தாங்களாம். அவங்களுக்கு யாராவது உதவிக்கு இருந்தா ரொம்ப நல்லா இருக்குமே......நாமளும் வீட்டுக்கு போய் கொஞ்சம் நல்லா ஓய்வெடுத்துட்டு வரலாமேன்னு தோணிட்டு இருந்திச்சாம்.

அந்த நேரம் தான் கோபாலோட சத்தம் அவருக்கு கேட்டுருக்கு. உடனே அவர் அந்த ஆற்றுத் தண்ணியில போயிட்டு இருந்த கோபாலை எப்படியோ காப்பாத்தி வெளியே எடுத்திட்டார்.

கோபாலுக்கு ரொம்ப சந்தோஷம், ஏன்னா ஆத்து தண்ணி வேகத்தை பார்த்து அவன் கொஞ்சம் மிரண்டு தான் போயிருந்தான். அவன் கொஞ்சம் ஆசுவசப் படுத்தினதுக்கு அப்புறம் அந்த வேலு அண்ணா அவன் கிட்ட கேட்டார்.

"ஏம்பா, வேலைச் செஞ்சு தருவேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே? உனக்கு என்ன வேலை எல்லாம் தெரியும்? சொல்லு பார்ப்போம்."

"எனக்கு எல்லா....வேலையும் தெரியும் அண்ணே.....எனக்கு தெரியாத வேலை இந்த உலகத்திலயே எதுவும் இல்லன்னா பார்த்துக்கோங்க"

அவன் சொன்ன விதத்தில் கவரப் பட்ட வேலு அண்ணன், சரிப்பா நான் வீட்டுக்கு போய் கொஞ்சம் நல்லா ஓய்வெடுத்துட்டு வறேன். நீ வயலை பத்திரமா பார்த்துக்கிறியா?

சரி அண்ணே, நீங்க கவலையே படாதீங்க. நான் ரொம்ப நல்லா, பத்திரமா பாத்துக்கிறேன்," ன்னு சொன்னான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.