(Reading time: 10 - 20 minutes)

வர் ரெண்டு எட்டு வைக்கிறதுக்கு அப்புறமாதான் அவருக்கு இந்த பையனோட பேர் கூட நாம இன்னும் கேட்கலியேனு தோணிச்சு. அதான் வந்து அவன் கிட்ட கேட்டார்.

"ஏன் தம்பி உன்னோட பேர் என்னப்பா?"

அதுக்கு அவன்,

"என்னோட பேரு சூடு சுட்டு பொரி பெரக்கி அண்ணே"ன்னு சொன்னான்.

அதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியமா இருந்துச்சாம். "இப்படியெல்லாம் பெயர் இருக்குமான்னு நினைச்சுக்கிட்டே "சூடு சுட்டு பொரி பெரக்கி "இப்படி ரெண்டு மூணு தடவை மனசுக்குள்ளே சொல்லிட்டே அவர் வீட்டுக்கு போயிட்டார்.

கோபாலும் ரொம்ப நேரமா சமர்த்தா இருந்தான். இரவு கடந்து அதிகாலை நேரம் வேலு அண்ணா கதவை பக்கத்து வீட்டுக்கார அண்ணா வேக வேகமா தட்டுனார். என்னமோ ஏதோன்னு கதவை திறந்த வேலு அண்ணா பக்கத்து வீட்டு அண்ணா சொன்ன விபரம் கேட்டவுடனே அலறியடிச்சிட்டு வயலுக்கு ஓடினார்.

அங்கே வயலில கோபால் "சூடு" இருக்கில்ல அதான் உயரமா குவிச்சு வச்சிருந்த நெற்செடிகள்ல தீ வைச்சிருந்தான். அந்த தீயில எரிஞ்சிட்டு இருந்ததிலிருந்து நெற்மணிகள் பொரி பொரியா (.நீங்கள்லாம் சாப்பிட்டு இருப்பீங்கள்ல அந்த அரிசி பொரி தான்) வர வர அதை பொறுக்கி எடுத்து சாப்பிட்டுட்டு இருந்தான். அதைப் பார்த்துட்டு இருந்த வேலு அண்ணாக்கு பல மாசமா பாடுபட்டு காப்பாத்தின நெற்கதிர் எல்லாம் வீணாப் போச்சேன்னு ரொம்ப கோபம் கோபமா வந்தது. முதலில நெருப்பை எல்லாம் அணைச்சு முடிச்சார், அவருக்கு அக்கம் பக்கத்தில இருக்கிற வயல்காரங்க எல்லாம் உதவி செஞ்சாங்க.

கோபால் இன்னும் பொரி பெறக்கி சாப்பிட்டுட்டு தான் இருந்தான். வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு கோபாலு கிட்ட வந்த வேலு அண்ணா, ஏண்டா இதைத் தான் நீ "சூடு சுட்டு பொரி பெரக்கி "ன்னு சொன்னியான்னு கேட்டாரு.

"ஆனா அண்ணே, அதான் நான் முதலிலேயே சொன்னேனே" ன்னு சொல்லிட்டு இன்னும் பொரி பெறக்க ஆரம்பிச்சான் கோபாலு.

உன்னையெல்லாம் போயி காப்பாத்தினேன் பாரு என்னோட பல மாச உழைப்பே போச்சுன்னு சொல்லி அவனை மறுபடியும் தூக்கி ஆற்றிலேயே எறிஞ்சிட்டார்.

தன் பாட்டுக்கு பொரி தின்னுகிட்டு இருந்த கோபாலுக்கு என்னடா நம்ம மறுபடி ஆற்றுக்குள்ளே எப்படி வந்தோம்னு புரியறதுக்கே கொஞ்சம் நேரமாச்சு.

அவனும் என்னச் செய்வான். மறுபடியும் கூவ ஆரம்பிச்சுட்டான்.

“ஏ அக்கா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

ஓ அண்ணா “என்னைக் காப்பாத்துவோருக்கு நான் வேலை செஞ்சு தருவேன்.”

தொடரும்

பின்னுரை: ஹாய் பிரண்ட்ஸ், உண்மையிலேயே எனக்கு விவசாயம் பற்றி எதுவும் தெரியாது, சினிமாவில வயற்காட்டைப் பார்த்தது தான். நான் எதையாவது தவறா எழுதியிருந்தா ப்ளீஸ் எனக்கு தெரியப் படுத்துங்க. நான் தெரிந்து கொள்கிறேன் :)

{kunena_discuss:875}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.