(Reading time: 6 - 12 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - மாறுவேடத்தில் சிங்கம் - ஜான்சி

Lion and woman

ஹாய் குட்டீஸ்,

மறுபடி ஒரு குட்டிக்கதையோடு வந்திருக்கிறேன்.

காடும், காட்டை ஒட்டிய பகுதியுமாயிருந்த அந்த ஊரில் ஒரு சில குடும்பங்களே வசித்து வந்தன. அங்கே ஒரு விதவை தாயும் அவரின் மகளும் மகனும் வசித்து வந்தனர். அவர் பெயர் மீனா, மகள் பெயர் ரமா மகன் பெயர் சுரேஷ். அவர் காட்டை அடுத்து இருக்கும் மற்ற ஊர்களில் தினமும் பலகாரங்கள் சுட்டு எடுத்துக் கொண்டு போய் விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.

மீனா அந்த காட்டை கடந்துச் செல்லும் போதெல்லாம் ஒரு சிங்கம் தொந்தரவு செய்து வந்தது.

உன்னை இன்றைக்கு தின்று விடப் போகிறேன் என்று தன் கோரப் பற்கள் காட்டி மீனாவை தினமும் மிரட்டும். அவரோ அதனிடம் கெஞ்சி கெஞ்சி தன்னிடம் விற்பனயாகாமல் இருக்கும் மீதி பலகாரங்களைக் கொடுத்து தன் உயிரை காப்பாற்றி வந்தார். (சிங்கம் பலகாரம் கொடுத்தா திங்குமான்னு எல்லாம் கேட்கபடாது? )

இப்படியே பல நாட்கள் கடந்தன. ஒரு நாள் அவரிடம் இருந்த எல்லா பலகாரங்களும் விற்று விட்டன. வெறும் கூடையோடு காட்டை கடக்க முயலும் போது சிங்கம் எதிரில் வந்து கோரப் பற்களைக் காட்டி மிரட்டியது. கையில் பலகாரம் ஒன்றும் இல்லையே இன்று நம் உயிரை இழக்க வேண்டியது தானா? என எண்ணும் போதே சிங்கம் அருகில் வந்து,

இன்று எனக்கு மிகவும் பசிக்கிறது நான் உன்னை இன்று சாப்பிட போகிறேன் என்று கர்ஜித்தது.

மீனா சிங்கத்திற்கு பயந்து போய் ஓடிய போது காட்டில் ஒரு பள்ளத்திற்குள்ளாக தடுமாறி விழுந்து விட்டார். அவர் விழும் முன்பாக அவரது சேலை மரத்தில் மாட்டி விட்டிருந்தது. அதன் பாதி நீளத்துணி

அம்மரக்கிளையில் மாட்டி அசைவாடிக் கொண்டிருக்க கீழே விழுந்தவர் நிலையோ தெரியவில்லை.

உடனே அந்த சிங்கம் மீனாவின் கிழிந்த அந்த சேலைத்துணியை தன் உடம்பில் சுற்றிக் கொண்டது.அவர் கையிலிருந்து விடுபட்ட பலகார கூடையை தன் கையில் வைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டியது.

தான் ஊருக்கு மாறுவேடத்திலன்றி வேறு எப்படி சென்றாலும் தமக்கு ஆபத்து என்பதால் ஊராருக்கு தெரியாத வகையில் அது புறப்பட்டிருந்தது.

மாறுவேடத்தில் சென்று அந்த பெண்ணின் குழந்தைகளை சாப்பிட வேண்டும் என்று எண்ணி அது தந்திரமாக செயல்பட்டது.

அப்போது இரவாகி விட்டபடியால் கதவை திறந்த ரமாவுக்கு வந்திருப்பது தன் அம்மா அல்ல சிங்கம் என்று புரியவில்லை. சிங்கமோ ஒன்றுமே தெரியாதது போல சென்று அறையின் ஓரத்தில் படுத்துக் கொண்டது.

ஏற்கெனவே உறங்கிக் கொண்டிருந்த தம்பியின் அருகில் ரமாவும் படுத்து தூங்கி விட்டாள்.

இரவு நேரம் இருவரையும் தின்று விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த சிங்கம் தன்னையறியாமல் உறங்கிவிட்டது.. சற்று நேரம் கழிந்ததும் ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சிங்கத்தின் குறட்டைச் சத்தம் மிக அதிகமாக கேட்கலாயிற்று.

தூக்கத்திலிருந்து எழுந்த சுரேஷ் குறட்டை சத்தம் கேட்டு மிரண்டு எழுந்து தன் தாயை நோக்கி சென்றான். கிட்டே சென்று முகத்தை மறைத்திருந்த சேலையை சற்று அகற்றிப் பார்க்க , அங்கே அவன் அம்மா முகம் இல்லை.

சிங்கத்தின் முகத்தையும், கூரிய பற்களையும் பார்த்து மிரண்டுப் போய் விட்டான்.

ஓடிச் சென்று ரமாவிடம்,

“அக்கா அக்கா, அங்கே தூங்கிக் கொண்டு இருப்பது நம் அம்மா இல்லை, அது சிங்கம் என்று பயந்து நடுங்கிக் கொண்டே கூறினான்.

எழுந்த ரமாவும் கிட்டே சென்று அது சிங்கம் தான் என்று உறுதி செய்துக் கொண்டாள். அப்படியானால் நம் அம்மா எங்கே? என்றெண்ணிய இருவருக்கும் அழுகை வரலாயிற்று.

தம்பியை தேற்றிய ரமா,

“நாம் இப்போது நம் உயிரை பாதுகாத்துக் கொள்வோம். பின்னர் நம் அம்மாவை தேடி கண்டு பிடிப்போம் என்றுச் சொல்லி தன் தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

ரவு களைப்பில் தூங்கி எழுந்த சிங்கம் இப்போது இன்னும் வெகுவாக பசிக்கவே இரண்டு பேரையும் தேடியது. பார்த்தால் இருவரின் படுக்கையும் கலைந்து கிடக்க இருவரையும் காணவில்லை. தன்னுடைய இரை பறி போன கோபத்தில் சிங்கம் வெளியே வந்து தேடலாயிற்று. இரவில் அந்த சின்ன ஊரையே அது சுற்றி சுற்றி பார்த்து விட்டது ஆனால் இருவரையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

சற்று நேரத்தில் பகல் புலர்ந்து விடுமே அதற்குள்ளாக இருவரையும் தின்று விட்டு காட்டை நோக்கி செல்லவேண்டும் என்கின்ற அவசரத்தில் இருந்தது சிங்கம். அப்போது இரவின் நிழலில் மரத்தில் அசைவு கேட்கவே மேலே பார்த்தால் ரமாவும், சுரேஷிம் மரத்தின் கிளையொன்றில் ஏறி அமர்ந்து இருந்தார்கள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.