(Reading time: 12 - 24 minutes)

ப்ரியாவுக்குப் பதில் சொல்லாமல் கவிதா நகர முற்படவும், புடவைத் தலைப்பைப் பிடித்த நிவேதா தன் மழலைக் குரலில் அத்தை என்றாள். “த்” என்னும் சொல்லில் அழுத்தி அழகாக “அத்தை”,”அத்தை” என்று சொன்னாள்.

அந்த பிஞ்சுக்குரலைக் கேட்டதும், தன் அத்தை தன்னைப் பாசத்துடன் பார்த்துக் கொண்டதும், தான் எப்படிப்பட்ட அத்தையாகப் பாசம் காட்ட வேண்டும் என்றும் நினைத்ததெல்லாம் அவள் மனதில் மின்னியது. பெரியவர்கள் எப்படியோ தவறு செய்தாலும், குழந்தைகள் மேல் கோபம் வருமா? கொண்ட கோபமெல்லாம் நிமிடத்தில் கரைந்தோடியது.

நிவேதாவை ஆனந்தத்துடன் தூக்கிக் கொண்ட கவிதா, தனது புகுந்த வீட்டுக்குக் கிளம்பினாள்.

அம்மாவிடம், “ஞாயிற்றுக்கிழமை எங்க நிவேதாவுக்குக் காதணி விழா. நீங்களும் அப்பாவும் கண்டிப்பா வரணும்.!போய்ட்டு வர்றேன்மா!” என்று சொல்ல, கவிதாவின் தோளில் இருந்த நிவேதாவும் கவிதாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு  சொன்னாள்.

“ அத்தை, அத்தை!”

ப்ரியாவின் செல்பேசி சிணுங்க,

”அண்ணன் தான் கால் பண்ணிருக்காங்க!இந்தாங்க பேசுங்க அண்ணி!,

“கவிதா, உன்னைப் பார்க்க இங்கே ஒரு கெஸ்ட் வந்திருக்காங்க. யாருன்னு சொல்லு பார்ப்போம்.

கவிதா உற்சாகத்துடன் சொன்னாள் “என் அத்தை!”

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.