(Reading time: 17 - 34 minutes)

"என்ன அபி ,உன் அக்காவை பார்த்து கூடவா மேரேஜ் மேல ஆசை வரல.ஒரு அடிமை கிடைக்கப் போகுதுனு சந்தோசப் படாம சுணங்குறியே !"

" இந்த மொக்கை ஜோக்குக்கு என்னால சிரிக்க முடியல மாமா."

பொண்ணு அழுது, கெஞ்சி,கொஞ்சி என்னலாமோ செஞ்சு பார்த்துச்சு .பட் வீட்ல உள்ள எல்லாரும் அதே கெஞ்சல் ,கொஞ்சல் ,ஆறுதல் சொல்லல் ,ஏக அட்வைஸ்,இப்படி ஏதேதோ செஞ்சு பொண்ணை ஒத்துக்க வச்சிட்டாங்க .

ஒத்துக்கிட்டாளே தவிர ,ஒரே கவலை & அப்பப்போ அழுகைனே இருந்தா .மாப்ள போட்டோ கூட பார்க்கல .

அடுத்த நாளே பெண் பார்க்கும் படலம்.பிள்ளையார்கிட்ட போய்,"என்னை பிடிக்கலனு சொல்ல வச்சிரு " னு பிரண்ட்லி பிரேயர் வேற .

அவங்க வந்துட்டாங்கனு தெரிஞ்சதும் ,ரோஜா பட மதுபாலா போல ரிப்பீட் மோட்ல பிள்ளையார்கிட்ட " பிடிக்கலைனு சொல்லிரனும் " னு பிரேயர்.

இந்த செனேரியோ பொண்ணுக்கு பிடிக்காது;மேரேஜ் செய்ய இஷ்டம் இல்ல;ஏக தர்ம சங்கட பீல் எல்லாம் சேர்ந்து உர்ர்ர்ர் மூஞ்சியோடவே போய் காபி குடுத்திட்டு வந்துட்டா.(அதே அதே ,பையன் நம்ம ஹீரோதான்)

எவ்ளோ சொல்லியும் மாப்பிளையை ,அங்க உள்ள யாரையுமே நிமிர்ந்து கூட பார்க்காம உள்ள வந்துட்டா.பையன் பொண்ணு கிட்ட தனியா பேசணுமாம்னு சொல்லி ரெண்டு பேரையும் மொட்டை மாடிக்கு அனுப்பினாங்க.அங்கேயும் அதே உர்ர்ர் மூஞ்சி,குனிஞ்ச தலை,ரிப்பீட் மோட் பிரேயர்.

வாங்க அபி வெர்சஸ் அபி பார்க்கலாம்!

"ஹாய், ஐம் அபிஜிக்த்.உங்க நேம்?"

( சோகமா குனிஞ்ச மேனிக்கே )

"அபிநயஸ்ரீ"

"ரெண்டு பேரும் அபி,செம்மல"

" ம் "

" எதுவும் பெரிய்ய தப்பு செஞ்சுட்டிங்களா அபி? ஐ காண்டாக்ட் இல்லாம பேசறீங்க "

அச்சச்சோ இல்லனு சொல்லி சட்டுனு நிமிர்ந்தா!

அவ்ளோதாங்க ! ஆனந்த அதிர்ச்சி பொண்ணுக்கு.அடுத்து அவன் என்ன சொன்னான்னு காதுல விழாத அளவு ஆவி ஆபீட் ஆயி பறக்க ஆரம்பிச்சுட்டா ! பிரகாசமா பல்பும் நங்குன்னு மணியோசையும் கேட்டுச்சு .இளையராஜா வயலின்,ரஹ்மான் ப்ளூட் எல்லாம் வந்து கும்மி அடிச்சுது !

அவன்,ஹலோ எக்ஸ்கியூஸ்மீனு சொன்னதுலதான் கீழயே வந்தா!

காக்க காக்க ஜோதிகா போல கண்ல சின்னதா தண்ணி ,ஒரு நிறைஞ்ச பார்வையோடு என்ன சொன்னீங்கனு கேட்டா.

நம்ம சார்க்கு இதை பார்க்க பிடிச்சிருந்தது ,புதுசா இருந்துது ,பட் கன்ப்யூஸ்டாவும் இருந்துது.( பின்ன மாத்தி மாத்தி எக்ஸ்பிரசன் குடுத்தா)

" பதறாதீங்க,உங்களை பார்க்க வைக்க தான் அப்டி சொன்னேன்னு சொன்னேன்.அப்டி என்ன சிந்தனை?"

ஒன்னும் இல்லைங்கனு சொல்லி சிரிச்சா.அதோட ரிப்பீட் மோட் பிரேயரை உல்ட்டாவா,அதாவது பிடிச்சிருக்கு சொல்லணும்னு செஞ்சு பிள்ளையாரைக் கடுப்பேத்தினா.மானஸீகமா காதைப் பிடிச்சு சாரி சொல்லி கெஞ்சல் வேற.பிள்ளையாரும் ஒரு முறை முறைச்சிட்டு ஓகே சொல்லிட்டார் .

"பரவால்ல சிரிக்க கூட தெரியும் போல.ஐ நோ ,உங்களுக்கு இந்த செனேரியோ பிடிச்சிருக்காது.அதனாலதான் ரிஜிடா இருந்தீர்களா? இல்ல வேற எதுவும் ரீசன் இருக்கா? ஆர் யு ஓகே வித் திஸ் மேரேஜ்? உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா ?"

" பிடிச்சிருக்கு "

"தயங்கி சொல்றீங்க .ஒரு செகண்ட்ல 1000 எக்ஸ்பிரசன் காட்டறீங்க. ஐம் கன்ப்யூஸ்ட். ஆர் யு ஸ்யூர்? சினிமால வரது போல, நான் வேற பையனை லவ் பன்ரேன் ஹெல்ப் வேணும்னு வந்து சொல்ல மாடீங்களே ?"

"அச்சச்சோ கண்டிப்பா அப்டிலாம் சொல்ல மாட்டேங்க .ஐம்100% ஸ்யூர்.நான் வேற யாரையும் லவ் பண்ணல."(மிக மெல்லிய குறும்பு புன்னகை )

" தென் ஓகே. உங்க கிட்ட பேசணும்.உங்க நம்பர் குடுங்க .இங்க இதுக்கு மேல நின்னு பேச முடியாது."

தயங்கி" அது அப்பா ஒத்துக்க மாட்டாங்க ."

" இது வேறயா ?,சரி வாங்க போலாம் "

" ஒரு நிமிஷம் "

"சொல்லுங்க அபி"

"நீங்க ஒண்ணும் சொல்லவே இல்ல"

குறும்பா சிரிச்சிட்டு,"என்ன சொல்லணும் ?"

"ஆர் யு ஓகே வித் திஸ் மேரேஜ்,உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.