(Reading time: 17 - 34 minutes)

" உங்க நம்பர் கேட்டேனே,புரியலையா?"

"இல்ல,நீங்க டைரக்டா எதுவும் சொல்லல அதான் ...."

" அடேங்கப்பா ,விட்டா பத்திரத்துல சைன் பண்ணி தர சொல்வ போல,ஐம் 200 % ஓகே வித் திஸ் மேரேஜ்.எனக்கு உன்னை ரொம்ம்ம்ப பிடிச்சிருக்கு போதுமா ? வா போலாம்"

அவன் உரிமையா ஒருமைக்கு மாறின விதத்துலயும் ,200%லயும், ஏகமா ஏகாந்தத்துக்கு போயி எக்கச்சக்க ஹாப்பி ஆயிட்டா பொண்ணு.

ஆக்ச்சுவலி பொண்ணை பார்க்கவுமே சார்க்கு கொஞ்சம் பூம்லாம் வந்து பிடிச்சு போச்சு .ஐ காண்டாக்ட் மேட்டர் பொண்ணு ஸ்டோரில யூஸ் செஞ்சது.அதுக்கு பொண்ணு நிமிர்ந்த வேகத்துலயும்,அடுத்து பொண்ணு குடுத்த ஏக எஸ்ப்ரஸின்லயும்,பொண்ணோட விழிஈர்ப்பு விசைலயும்,பொண்ணோட 100% ஸ்யூர்லயும் பையன் தொபுக்கடீர்னு விழுந்தாச்சு .

எல்லாம் நல்லா தானே போகுது,ஹீரோக்கு என்ன பிராப்லெம்னு தோணுதா? இனிமேல் தாங்க அவர்க்கு ஆப்டா ஆப்பு வரப் போகுது.வாங்க பாப்போம் .

கீழ வந்த நம்ம அபி ஸ்ட்ராயிடா ஸ்ரீ அப்பா கிட்ட போயி,"அங்கிள் இப் யூ டோன்ட் மைண்ட்,அபிநயஸ்ரீ நம்பர் தர முடியுமா?"னு கேட்டு வச்சான் .

அவர் தர்ம சங்கடமா லுக் விடவே நம்ம சார்,

"அங்கிள் ஐ ரெஸ்பெக்ட் யுவர் எமோஷன்ஸ் & வேல்யூஸ்.பட்,அவங்க கொஞ்சம் பயந்த சுபாவமா தெரியறாங்க ,ரொம்ப தயங்குறாங்க,கொஞ்சம் பிரண்ட்லியா பேசி பழகினா கம்போர்ட்டபிலா மேரேஜ் செஞ்சுப்பாங்க .இல்லனா புது இடம்,புது மனுஷங்கனு எல்லாமே மிரட்சியா இருக்கும். கண்ணியமா இருப்பேன் அங்கிள். இட்ஸ் அ ரிக்வஸ்ட் .அப்பறம் உங்க விருப்பம்"

இதைக் கேட்ட ஸ்ரீ அப்பா உச்சி குளிர்ந்து போய் உடனே நம்பர் குடுத்திட்டார் .கேட்டிருந்த பொண்ணுக்கும் கண்ணா பின்னானு காதல் பொங்குச்சு .3 மாசம் கழிச்சு மேரேஜ் வச்சிருந்தாங்க .

எல்லாம் ஓகே.இனி லவ் மோட் ஆன் செய்ய வேண்டியதுதான்னு நெனச்சான் .பட்,பொண்ணு அவன் கனவை கந்தல் பண்ணிடுச்சு.

எப்போ போன் செஞ்சாலும் அதிக பட்சம் 2 நிமிஷம் பேசுவா .அப்பறம் அம்மா கூப்பிட்டாங்க, அப்பா கூப்பிட்டாங்க, பாட்டி கூப்பிட்டாங்க,கஸ்ட் வந்திருக்காங்க,குக்கிங் பழகரேன் ,ஸ்டோரி எழுதறேன்னு சொல்லி எஸ்கேப் ஆயிடுவா .

சில ஈவென்ட்ஸ்ல நேர்ல பார்க்கறப்பகூட அவன் வந்து பேச முடியாதபடி சுற்றம் சூழ சேப் ஜோன்￰லயே இருந்தா.( பாவம் பா நீ! என்னமா ஸ்ரீ நீ இப்டி பண்றியேமா?)

ஒரு ஸ்டேஜ்ல செம்ம கடுப்பாகி நேர்ல பார்க்க வீட்டுக்கு போனான் .பொண்ணு படு ஷாக் ஆயிடுச்சு.திரு திரு முழி .

கோவமா கேட்டான் 

"ஏன் சரியா பேசறதில்ல .எதுக்கு நழுவி ஓடுற.எனக்கு குழப்பமா இருக்கு.உனக்கு இந்த மேரேஜ் பிடிக்கலையா ? ஏதோ ப்ரஷர்ல ஒத்துக்கிட்டயா ?,இல்ல என்ன பிடிக்கலையா? இது எனக்கு நார்மல்னு தோணலை.ப்ளீஸ் பிடிக்காம எதுவும் செய்யாத.அது எனக்கும் நரகம் ஆயிடும் .ஷல் வி ஸ்டாப் திஸ் மேரேஜ்?"

"அச்சோ அப்டிலாம் எதுவுமே இல்ல.ப்ளீஸ் மேரேஜ் ஸ்டாப் செய்லாம்னு மட்டும் சொல்லாதீங்க "

"பின்ன என்னதான் பிரச்சனை "

"அது வந்து ,நான் ஒரு தெனாலி.எல்லாத்துக்கும் பயம் .போன் பேசி ஈகோ கிளாஷ்ல எவ்ளோ மேரேஜ் ப்ரேக் அப் ஆயிருக்கு .அதை அவாய்ட் செய்யலாம்னுதான்"

கண்ல தண்ணி முட்ட பரிதாபமா சொன்னா.அவனுக்கு கோவப்படறதா பாவப்படறதா, சிரிக்கிறதானு தெரில.

"இது உனக்கே முட்டாள் தனமா தோனலயா?,இப்போ நீ பேசாததால பிரேக் அப் ஆயிருக்கும் விட்டா."

"நான் தாலி கட்டும்போது அந்தப் பொண்ணைப் பத்தி எனக்கு முழுசா தெரிஞ்சிருக்கணும் ,என் உயிருக்கும் மேல நேசிக்கணும்னு ஆசைப்பட்டேன்.உனக்கும் அப்டி இருந்தா நல்லா இருக்கும் தானே.ஸ்ட்ரேஞ்சர்ஸ் போல மேரேஜ் செஞ்சுக்கணுமா? கண்டிப்பா நான் மேரேஜ் நிக்க விட மாட்டேன். ஐ அஸ்யூர் யூ .இனி பேசலாம் தானே?"

"ஐ ஆம் சாரி!நான் ப்ராமிஸ் செஞ்சிருக்கேன்.நானா நெனச்சாலும் பேச முடியாது .அதுக்கு தான் பிராமிஸ் செஞ்சு வச்சேன்.",அதே பாவம் மோட் .

"யார் கிட்ட "

"பிள்ளையார்கிட்ட "

"Ohh God!!!!"

கோவமா ,"ஓகே!பை! மேரேஜ்ல பார்க்கலாம் " னு சொல்லிட்டு வேகமா திரும்பினான் .

"ஒரு நிமிஷம்"

"என்ன"

"நீங்க தாலி கட்டும் போது,எனக்கு நீங்க உயிருக்கும் மேல தான்.இப்போவே அப்டித்தான்.ஐ டோன்ட் வாண்ட் டு மிஸ் யு பார் எனி ரீசன்.உங்கள ஹர்ட் செஞ்சிருந்தா ஐம் சாரி.கல்யாணத்துக்கு அப்பறம் வட்டியும் முதலுமா குடுத்திடறேன்."

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.