(Reading time: 17 - 34 minutes)

" ஆப் கோர்ஸ் இருப்பேன் "

" அப்பாவா ?"

" ஆப் கோர்ஸ் டா "

" சகோவா?"

" கண்டிப்பா,பிரண்ட், லவர்,ஹஸ்பண்டு .....சமயத்துல நீ, இப்படி எல்லாமாவும் இருப்பேன் டா "

" என்னை இணையா நடத்துற ,என் உணர்வுகளை மதிக்கிற நேசிக்கிற ,எனக்கு எல்லாமாவும் இருக்கற மனித உயிரை நான் பார்ப்பேன் , வாழ்க்கைத்துணையா அடைவேன்னு கனவுலயும் நெனைச்சதில்ல . அப்படி பார்க்கும் போது அர்ப்பணிப்பு உணர்வு இயல்பா வருது.இது அடிமைத்தனம் இல்ல .அன்பு.என்னை உயிருக்கும் மேல நேசிக்கிற ,நான் உயிருக்கும் மேல நேசிக்கற என்னை விட வயசுல பெரியவரா இருக்கற உங்க கிட்ட ப்லெஸிங் வாங்கிட்டு நம் வாழ்க்கையை தொடங்கினா எனக்கு ஒரு ஆத்ம திருப்தி ,பாசிட்டிவ் பீல் & எனர்ஜி.மார்னிங் எல்லார்கிட்டயும் வாங்கியாச்சுனு மொக்கை போடாதீங்க ப்ளீஸ் "

அவளோட அன்பயும் ,மென்மையையும் ,உணர்வையும் உள் வாங்கினவனுக்கு நெகிழ்ச்சில கண்ல தண்ணி கட்டிருச்சு .நூறு வருஷத்துக்கு ஹாப்பி ஹாப்பியா இருப்படானு அவ முகத்தை கையில் ஏந்தி கண்ணோட கண் பார்த்து சொல்லி ஆசீர்வாதம் செஞ்சு உச்சந்தலையில் முதல் முத்தம்.

"பிளெஸ்ஸிங்ஸ் வித் கிஸ் , செம்மயா இருக்கே .சைக்கிள் கேப் ல ஆட்டோ ஓட்டறீங்களா " இப்டி சொல்லி பழிப்பம் காட்டினா.

" ஹேய் ,செல்லப் பொண்டாட்டி ,பிளைடே ஓட்டுற அளவு அன்பும் உரிமையும் இருக்குடி "

"ஆஹான். நெனப்புத்தான் ."

மனம் நிறைஞ்ச சந்தோஷத்தோடயும் பூரிப்போடயும் ஒரு செயினை தன் கழுத்துல இருந்து கழட்டி அவனுக்கு அவளே போட்டு விட்டா.அதுல டாலர்ல ஹார்டின் ஷேப்க்குல்ல ஒரு 'அ' இருந்துச்சு .

" என்னடி நீ எனக்கு தாலி கட்ட முடியலனு பீலிங்கு போல,அதுக்கு பதில் இதுவா .....(பொண்ணு முறைச்சா )சரிசரி முறைக்காதே ரொம்ப அழகாய் தெரியற......( வெட்கம் )பார்ரா சின்ன பொய்க்கு இவ்ளோ வெட்கமா ......( மறுபடியும் முறைப்பு ).ஓகே.ஓகே.கூல் கூல் .விட்டா அடிப்ப போல.இது என்னடி ' அ ',நம்ம நேமா?,ஒரு 'அ'தான் இருக்கு.தேங்க்ஸ் டா.ரொம்ப அழகா இருக்கு."

"அது நம்ம நேம்னும் வச்சுக்கலாம்.ரெண்டு பேரும் ஒண்ணேதான்.சோ ஒரு 'அ'.இது தமிழ்ல முதல் உயிரெழுத்து .நீங்க எனக்கு அப்படித்தான்.நானும் உங்களுக்கு அப்படித்தான்.ரொம்ப முக்கியமா இது உங்களுக்கு இல்ல, எனக்கு. "

"என்னடி இப்படி ஷாக் குடுக்குற .பின்ன எதுக்கு எனக்கு போட்ட ?"

"நீங்க அன்னைக்கு கோவமா பேசிட்டு போனப்போ யோசிச்சதுதான் இந்த ஐடியா.நீங்க அப்போ சொன்ன விஷயம் ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சி.உங்களுக்கு ஏமாற்றமா இருக்குமேனும் இருந்துச்சி.அதான் நீங்க எப்போ என்னை உங்க உயிருக்கும் மேல நேசிக்கறதா உங்களுக்கு தோனுதோ அப்போ இந்தச் செயினை,ஒரு கோயிலுக்குப் போய் என் கழுத்துல போடுங்கனு சொல்லி குடுக்கலாம்னு வாங்கினேன் ."

"சரி,அதான் அப்போவே சொல்லிட்டேனே.இப்போ இதை எதுக்கு எனக்கு போட்ட. உனக்குன்னு சொல்ற ?"

"நீங்க கொஞ்ச நாள் போட்ருந்து அப்பறம் எனக்கு போடுங்க "

அவ ஏன் அப்டி சொல்றான்னு தெரிஞ்சும் தெரியாதது போல குறும்பு சிரிப்போடு ,

" எதுக்குடி "

நாணத்தோட ,

"அதெல்லாம் அப்படிதான்.அதெல்லாம் சொல்ல முடியாது போங்க "

" ஓகே ஓகே.கூல்.புரியுதுடா .என்னை பத்தி உனக்கு அப்டி என்ன தெரியும் .எப்படி வந்துச்சு இவ்ளோ அன்பு என் மேல? "

"உங்களுக்கு தான் இது அரேஞ்ட் மேரேஜ்.எனக்கு லவ் மேரேஜ்."

"என்னடி அணுகுண்டு போடற"

பிளாஷ் பேக் ஓட்டி முடிச்சா.

அவனும் வியந்து ,அதிர்ந்து ,மகிழ்ந்து முடிச்சப்பறம் , காதலாவும், கலகலப்பாவும் நிறைய பேசினாங்க .

அப்பறமா பையன்,

"ஒரு ரைட்டரை கல்யாணம் செஞ்சது தப்பு போலயே "

" y y y y?"

" 3 மாசம் பேசாமயே கொன்ன.இப்போ பேசியே கொல்வ போலயே "

அதோடமுழு அர்த்தம் புரிஞ்சு பொண்ணு பயங்கரமா வெட்கப்பட்டுச்சு ....

இவங்க புல் பார்ம்க்கு வந்துட்டாங்க .அவங்களா விரட்றதுக்கு முன்னாடி ,நம்மளே all the best சொல்லி ஓடிறலாம் வாங்க ப்ரண்ட்ஸ் . not the end....its beggining.....

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.