(Reading time: 9 - 18 minutes)

அவன் யூணிபார்ம் போட்டுவிட்டு வெளியில் அழைத்து வந்தான்.

" இன்னைக்கு பிளாக் சாக்ஸ் போடணும், வைட் போட்ருக்கீங்க.மாத்திவிடுங்க , பெல்ட் , ஐ டி கார்டலாம் போடுங்க "

" முதல்லயே சொல்லமாட்டியா என்று சளித்தவாறே, அதை மாற்றினான் , ஆள் சைஸ விட ஐட்டம் நம்பர் அதிகமா இருக்கு "என்று புலம்பியவாறே

ஷூ மாட்டிட எத்தனித்தபொழுது, "அப்பா! நீங்க ஷூவை செக் செய்யவே இல்ல. அதுல ஏதாச்சும் இன்செக்ட் இருக்கும்னு அம்மா சொல்வாங்க " என்றான் குழந்தை.

இந்த வ்யாக்யானம்லாம் நல்லா வருது,என்று செக் செய்து போட்டுவிட்டான் .

அனன்யாவும் தயாராகி நின்றிருந்தாள்.

" வாடா போகலாம் " என்றவுடன் 

" அப்பா ! எனக்கு அர்ஜெண்டா டூ டாய்லெட் வருதுப்பா" என்றான் குழந்தை.

" ஏண்டா முன்னாடியே சொல்ல மாட்டியா? பஸ் வர டைம் ஆயிருச்சு, திரும்ப எல்லாம் கழட்டி,நீ போய்," என்று பல்லைக் கடித்தவாறே திட்டினான் .

" விடுங்க,நீங்க பாப்பாவை கூட்டிட்டு போங்க,பஸ் வந்தா நிறுத்தி வைங்க .நான் இவன ரெடி பண்ணி கூட்டிட்டு வரேன் , நிக்க சொன்னா கேவலமா முறைப்பாங்க , முணருவாங்கதான் , ￰டென்சன் ஆகாதீங்க " என்று கூறி அனுப்பி வைத்தாள், செய்ய வேண்டியதை செய்து கொண்டே.

இருவரையும் அனுப்பிவிட்டு, அவளும் தன் தோழியின் வீட்டிற்குச் சென்றுவிட்டு மாலையில் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு, ராஜ வாழக்கையை இன்னைக்கு ஒரு நாளாச்சும் என்ஜோய் பண்ணுங்க என்று சிரித்தவாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.

அவனும் அப்பாடா! இனிமேல் ஜாலிதான் என்று எண்ணியவாறே,தொப்பென்று வந்து சோபாவில் அமர்ந்தான்.

" என்ன ரொம்ப டையர்டா இருக்கு. அட,நம்ம இன்னும் காபி கூட குடிக்கல " என்று சென்று ஆறிப்போயிருந்த காபியை சூடு செய்து குடித்தான்.

" நல்லாவே இல்ல,எல்லாமே கரெக்ட்டாதான் இருக்கு,ஆனா ஏன் காபி நல்லா இல்ல " என்று எண்ணியவாறே குடித்து முடித்தான்.

" என்ன இப்டி தூக்கம் வருது, கொஞ்ச நேரம் தூங்கலாமா " என்று எண்ணியவனுக்கு, ரணகளமாய்க் கிடந்த சமையலறை நினைவு வரவே, அதை சுத்தப்படுத்திவிட்டு தூங்கலாம் என்று எண்ணினான்.

அதற்குள் அழுக்குத் துணியைப் பார்த்தவன், அதை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு , அதில் ஆயிரம் குழப்பம் வந்து,அதற்கும் அவளை போன் செய்து கேட்டு செட் செய்துவிட்டு சமையலறையை சுத்தம் செய்தான்.

" இந்த தயிர் பாத்திரம் விளக்குறது என்ன இவ்ளோ கஷ்டமா இருக்கு, போகவே மாட்டேங்குதே" என்று புலம்பியவாறே பாத்திரம் கழுவினான். களைத்துப் போய்விட்டான்.

வீடு முழுக்க குப்பைகள் கும்மி அடித்துக் கொண்டிருந்தன. பெருக்கினான். பெருக்கும் பொழுது இடுப்பு கடுகடுத்து கடுப்பேற்றியது.

" இதெல்லாம் ஒரு வேலையானு நெனச்சா, இப்டி வச்சு செய்யுதே நம்மள, ஆத்தாடி " என்று மைண்ட் வாய்ஸ் போட்டபடியே பெருக்கி முடித்தான்.

" நாம இன்னும் சாப்பிடவே இல்லையே,அதான் ஏதோ மறந்தா மாதிரியே இருந்துது போல " என்று தோசை வார்க்கப் போனான்.

" ரெண்டு தோசை சேர்ந்தமாதிரி தட்டத்துல வச்சாலே அவளைத் திட்டுவேன். இ்ப்போ மொத்தமா சுட்டு சாப்பட்றதா இருக்கு. கடைசி தோசை சுட்றதுக்குள்ள முதல் தோசை ஆறிடும் போலயே" என்று மைண்ட் வாய்ஸ் போட்டுக்கொண்டே சுட்டு உண்டு முடித்தான்.(இதெல்லாம் சவால் விட்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் )

சாப்பிடும்போது டிவி பார்க்கலாம் என்று போட்டால், கேபிள் வரவில்லை. அதற்கு போன் செய்து கேட்டால், மதியம் வந்து பார்ப்பதாகக் கூறினர். ( அந்தோ பரிதாபம் )

உண்ட மயக்கம் தலைக்கேற, சிறிது நேரம் தூங்கலாம் என்று போனான்.வாஷிங் மெஷின் அலறியது.( தூங்கறதுக்கு முன்னாடியே அலாரமா)

" ஷப்பா! சரி, பத்து நிமிஷத்துல காயப்போட்டுட்டு வந்து படுப்போம்."

அடித்த காற்றில் துணியைக் காயவைத்து கிளிப் மாட்டி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது அவனுக்கு ( வருண பகவான் வச்சு செஞ்சுட்டாரா )

அயர்வுடன் உறங்கச் சென்றான்.பிரிந்திருந்து கண்ட மனைவியைக் கட்டிகொள்ளத் துடிக்கும் கணவன் போல் கண்கள் நித்திரையைத் தழுவ எத்தனித்த மிகச் சரியான கணத்தில் , டொக் டொக்,டொக் டொக், கதவு தட்டப்பட்டது .( யார் அந்த கரடி)

கொலை வெறியுடன் போய் கதவு திறந்தால், தண்ணீர் கேன். வாங்கி வைத்துவிட்டு, மீண்டும் வெறி கொண்ட வேங்கையாய், நித்திரைக்குள் செல்ல எத்தனித்தான்.

அதே போன்றதொரு சரியான தருணத்தில் மீண்டும் டொக் டொக்.

கடுப்புடன் கதவு திறந்தால், கூரியர் ,

" சார், செந்தில்நாதன் நீங்கதானே . "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.