(Reading time: 13 - 25 minutes)

"அதுக்குக் காரணம் நீ தான்!" என்றார் ராம்.

"உன்னாலும் தான் நம்ம ஹோட்டல்ல நஷ்டம் அம்ருதா!"

"என்ன தான் நம்ம ஹோட்டல்னாலும் நாம காசு கொடுத்துத் தான் வாங்கினோம். இன்னொரு ப்ளேட் வாங்கிருந்தால் ஓட்டலுக்கு லாபம் தானே..நீ அதே ப்ளேட்ல அஸ்வினை சாப்பிட வச்சிட்டு!"

"ராம்! நீங்க சொல்றது சரியில்ல!என்ன தான் நம்ம தியேட்டர்னாலும் நீங்க அங்கே கார் ரேஸ் விளையாடலாமா?" "நான் பண்ணதில அர்த்தம் இருக்கு! எத்தனை பேர் உழைப்பு வீணாகுது.. நான் சொன்னதை கேட்டா லாபம் தான். நஷ்டம் இல்ல!"

"இப்பவும் நீ சொன்ன பேச்சைத் தான் கேட்டோம்! "நீ தானே ஒண்ணா படம் பார்க்கணும்னு அங்கே கூட்டிட்டுப் போன. படம் பிடிக்கலன்னு சொன்னோம். அதான் கார் ரேஸ் ஆபரேட்டர் ரூம்ல விளையாடினோம்!"

"என்னைப் பார்த்தவுடன் ஒளிஞ்சுக்க வேற செய்யறீங்களா? அங்கேயே பார்த்துட்டேன் உங்க ரெண்டு பேரையும். திரைக்குக் கீழ் கால் மறையல. "

"ராம் எல்லாம் நீங்க கொடுக்குற செல்லம். இன்னியோட கடைசி. இனிமே வீடியோ கேம்ஸ் இரண்டு பேரும் விளையாடுறதப் பார்த்தேன். அவ்ளோ தான்.!" உள்ளே அம்ருதா சென்றுவிட்டாள்.

ரவு மணி பதினொன்று

"அஸ்வின், ராம் இந்த கார் ரேசை நிறுத்திட்டுத் தூங்குங்க. இது தான் கடைசி தடவை! அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிடுவேன்!"

சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றாள் அம்ருதா.

"ஏன் அப்பா? அம்மா இந்த சின்ன விஷயத்துக்கு இவ்ளோ கோபப்படுறாங்க?"

"அம்மாகிட்டயே கேளு அஸ்வின்!"

"அம்மா, அம்மா!" அழைத்தவாறே உள்ளே சென்றான் அஸ்வின்.

படுக்கையில் தலையைப் பிடித்தவாறே அமர்ந்திருந்தாள் அம்ருதா.

“அம்மா. உங்களை எதிர்த்துப் பேசிட்டேன்னு கோபமா இருக்கீங்களா. சாரிம்மா!”.

"அஸ்வின் இப்படி வா. அம்மாக்கு கோபமில்ல. உன்னை சரியாய் நானா வளர்க்கலையோன்னு கவலையா இருக்கு!"

"ஏம்மா அப்படிச் சொல்றீங்க?!"

"பாட்டி உன்னை எப்படிக் கூப்பிடுவாங்க?'

"அழகப்பன்னு கூப்பிடுவாங்க. தாத்தாவோட பேரு தானே அம்மா!"

"ஆமா அஸ்வின். தாத்தாவோட உழைப்புல தான் நம்ம ஹோட்டல், தியேட்டர்,கம்பெனி, இந்த பெரிய வீடு எல்லாமே வந்தது. அழகப்பன் தாத்தாவின் ஒவ்வொரு வேர்வைத்துளி சிந்திய  உழைப்பு தான் இன்னிக்கு நமக்கு இருக்கிற சொத்து வசதி எல்லாம். தாத்தா உருவாக்கினதுல உழைக்கிறவங்க தான் நாம வசதியா வாழரதுக்குக் காரணம். அவங்க உழைப்பை நாம அலட்சியம் பண்ணக்கூடாது!"

"சரிம்மா!"

"ஹோட்டல்ல மசாலா தோசையை வீணாக்கப் பார்த்தியே. அது எப்படித் தயாராகுது தெரியுமா?"

"தெரியுமே சமையல் மாஸ்டர் பெரிய தோசைக்கல்லில் தோசை ஊத்துவாங்க!"

"அதற்கும் முன்னாடி எவ்வளவு உழைப்பு இருக்கு தெரியுமா அஸ்வின். ஒரு விவசாயி கஷ்டப்பட்டு உழைச்சு நெல்லை விளைவிக்கிறார். அந்த விவசாயத்தில் எத்தனை பேரு வேலைப்பார்ப்பாங்க. நிலத்தை உழுகிறவங்க, நாற்று நடுறவங்க, நீர் பாய்ச்சி, உரம் போட்டு, களை பறிச்சு, கதிரை அறுவடை செஞ்சு, அப்புறம் அந்த நெல்லை அவிச்சு, அரிசி எடுத்து, சுத்தப்படுத்தி, தருவாங்க. இதை மாதிரி உளுந்து பயிர் பண்றவங்க, காய்கள் பயிர் பண்றவங்க உழைப்பெல்லாம் சேர்ந்து, அதை அரைச்சு மாவாக்கி நம்ம தட்டுல தோசையா வர்ற வரைக்கும் பலரோட உழைப்பு இருக்கு. நீ சாப்பிடற தோசைக்கு நாம கொடுக்குற காசில அப்பாவோட, என்னோட உழைப்பு மட்டுமில்ல தாத்தாவோட உழைப்பு, நம்ம கம்பெனில வேலை பார்க்கிறவங்க உழைப்பு இருக்கு, இப்போ புரியுதா நான் ஏன் உன்னை அந்த தோசையை வீண் பண்ணாம சாப்பிடச் சொன்னேன்னு.!”

“புரிஞ்சதுமா!” என்று தலையசைத்தான் அஸ்வின்.

இது மாதிரி ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாடி நம்ம கண்ணுக்குத் தெரியாத பலரின் உழைப்பு இருக்கு. நிறைய காசு போட்டு படம் எடுத்து தியேட்டர்ல போடுறாங்க. அதைப் பார்க்க வர்றவங்கள தொந்திரவு பண்றது தப்புதானே?”

“தப்புதான் அம்மா!.நான் புரிஞ்சுகிட்டேன். இனிமேல்யாரின் உழைப்பையும் வீணாக்க மாட்டேன்.வீடியோ கேம்ஸ் ஒருத்தரின் உழைப்பு தானே. நான் விளையாடாவிட்டால் அவங்களோட உழைப்பு வீணாகிடுமே?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.