(Reading time: 49 - 98 minutes)

தீவரவாதிகளின் உடல்களைக் கைப்பற்றியிருந்த பாதுகாப்புப் படையினர் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். நிம்மதிப் பெருமூச்சோடு ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஜாஃபரும் ஆர்யாவும் கை கால்களில் ஏற்பட்டிருந்த காயங்களின் வலியை மறந்து ஆரத்தழுவியிருந்தார்கள். காயமடைந்தவர்களை மருத்துவக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல இராணுவ வாகனம் தயார் நிலையில் இருந்தது. மற்றவர்களுடன் ஜாஃபரும் ஆர்யாவும் அதில் ஏறியிருந்தார்கள். அடுத்த சில மணி நேரங்களில் இந்த செய்தி நாடு முழுவதிலும் உள்ள மீடியாக்களில் ப்ரேக்கிங் நியூஸ் ஆக ஓடிக்கொண்டிருந்தது.

ன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மாவின் போலீஸ் ஜீப் அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஹுசைனிவாலா காவல் நிலையத்தை வந்தடைந்தது. அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கிய அவர், அங்கே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள்களின் சல்யூட்டை ஏற்றுக்கொண்டு வேக வேகமாக உள்ளே சென்றார். உள்ளே பதற்றமான முகங்களுடன் ஒரு நான்கைந்து பேர், கம்ப்யூட்டர் திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மாவைப் பார்த்ததும்,

“குட் மார்னிங் சார்...! நாங்க உங்களுக்காகத் தான் வெயிட்பண்ணிட்டு இருக்கோம்... ” என்று அந்த கும்பலில் இருந்து வெளிப்பட்டார் சப் இன்ஸ்பெக்டர் குர்தாஸ் சிங்.

“குட் மார்னிங் குர்தாஸ்... இதுவரைக்கும் எதாச்சும் க்ளு கெடைச்சுதா...?”

“இல்ல சார்... அதுக்குத்தான் ட்ரை பண்ணிட்டு இருக்கோம்...”

“ஹ்ம்ம்... ஓகே... அந்த கம்ப்ளைன்ட் குடுத்த ஆள் எங்க...? ”

“சார்... இவர் தான் அந்த செல்போன் டவர் இன்ஜினீயர் சிவ்ராம்ஜி... ” என்று பக்கத்தில் நின்றிருந்தவனை அடையாளம் காட்டினார் குர்தாஸ் சிங்.

“ம்.. சிவ்ராம்ஜி... உங்களுக்கு எப்படி இந்த ஆடியோ ஆதாரம் கெடைச்சுது..?”

“சார்... நான் ஏர்டாக் மொபைல் நெட்வொர்க்ஸ்ங்கற ஒரு தனியார் கம்பெனியில டவர் இன்ஜினீயரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். மாதத்துக்கு ஒரு முறை வந்து ஹுசைனிவாலா எல்லைக்குப் பக்கத்தில இருக்கிற எங்க கம்பெனி டவர்ல, RADIATION AND FREQUENCY செக் பண்ணுவேன். என்னோட மொபைல் நம்பர, டவர்ல CONFIGURE பண்ணி கால் DETAILS ரெகார்ட் பண்ணி செக் பண்றது தான் சார் வழக்கம். 

இன்னிக்கும் அதே மாதிரி செக் பண்ணும்போது தான் சார், எனக்கு இந்த CROSS TALK கால் ரீசிவ் ஆச்சு. யாரோ ரெண்டு பேரோட குரல், இதுல தெளிவா பதிவாயிருக்கு . அவங்க பேசுன விஷயங்கள் கொஞ்சம் விபரீதமா இருந்ததால, அதை ரெகார்ட் பண்ணி கொண்டு வந்துட்டேன் சார்... ” என்று முடித்தான்.

அவன் சொல்வதைத் தெளிவாகக் கேட்ட இன்ஸ்பெக்டர் விகாஷ் சர்மா,

“ஓகே… குர்தாஸ்... நான் அந்த ஆடியோவ கேக்கணும்... சீக்கிரம் PLAY பண்ணி காட்டுங்க... ” என்றார் விகாஷ் ஷர்மா..

“எஸ்... சார்...” என்ற குர்தாஸ் சிங் மேசையில் மேல் வைக்கப் பட்டிருந்த கம்ப்யூட்டரில் சில பட்டன்களைத் தட்டினார்.

கம்ப்யூட்டர் திரையில் அந்த ஆடியோவின் சப்த அதிர்வுக் கோடுகள் ஏறி இறங்கியவண்ணம் இருந்தது. ரெகார்ட் செய்யப்பட்ட அந்த ஆடியோ ஆதாரம் PLAY ஆக ஆரம்பித்தது. 

“நம்ம திட்டம் எப்படி போயிட்டு இருக்கு...?” என்ற ஒரு ஆணின் கரகரப்பான குரல், ஒரு முனையில் தெளிவாகக் கேட்டது.

"இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல... எல்லாம் தயார் நிலையில் இருக்கு..." என்று மறுமுனையில் இருந்த மற்றொரு ஆண் குரல் பேச ஆரம்பித்தது.

"அப்ப, இந்தியப் பிரதமருக்கான கடைசிநாள் குறிச்சாச்சு... சரியா...?? 

“ஆமாம்...! உறுதியாக... ”

“போன தடவ மாதிரி மிஸ் ஆயிராதே...?"

"இல்ல.. இந்த தடவ மிஸ்ஸே ஆகாது. செப்டம்பர்-28, இந்தியப் பிரதமரோட கடைசி நாள். பயங்கரவாதத்திற்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளுக்கு பரிசா, அவரை நாம் சொர்க்கத்திற்கே அனுப்ப போற நாள்... ஹா...ஹா .... " என்று சிரித்தது மறுமுனையில் இருந்த குரல்.

ஒரு நிமிட மௌனத்திற்குப் பிறகு,

"ஹ்ம்ம்... இப்ப நீ எங்க இருக்க..? இருக்கிற இடம் SAFE தானே ...?"

"நான், நம்ம இடத்துல இருந்து தான் பேசிட்டு இருக்கிறேன். இதுவரைக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை ... SAFE தான்... "

"போலீஸ் கெடுபுடி ரொம்ப அதிகமா இருக்கிற மாதிரி தெரியுதே...???"

"அவங்களால நம்ம இடத்தை கண்டு பிடிக்க முடியாது. கவலைய விடுங்க." என்றது மறுமுனையில் இருந்த குரல்.

"ஹ்ம்ம்...எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. எந்த நேரத்திலும் அவுங்க உங்கள ஸ்மெல் பண்ணலாம்..."

"ம்... கண்டிப்பா... அத நான் பாத்துக்கறேன்... "

“குட் லக்... காரியத்த வெற்றிகரமா முடிக்க வாழ்த்துக்கள்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.