Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Pin It

2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகா

Happy-New-Year-My-Love

ன்று 31-12-2018

மறுநாள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இன்றே பலரும் உற்சாகத்தில் திளைத்திருந்த நேரம் அவன் மட்டும் கவலையில் இருந்தான், தன் மனதில் காதலிக்கும் காதலிக்கு புத்தாண்டு நிகழ்வுக்கு பரிசு தர எண்ணினான். என்ன தரலாம்? ஏது தரலாம் என அன்று காலை எழுந்தது முதல் குழம்பினான். தோழியாக பழகி காதலியாக இருந்திருந்தால் அவளுக்கு எது பிடிக்கும் என தெரிந்து அதை பரிசாக தந்திருக்கலாம், ஆனால் இவள் நேரடியாக அவன் மனதில் காதலி என்ற இடத்தை பிடித்தவள், இதுவரை அவளை பார்த்ததோடு சரி, தினமும் 2 வார்த்தைகள்  பேசியதோடு சரி, அதுவும் என்ன ஹாய், ஹலோ, ஹவ்ஆர்யு, பைன், ஓகே, பை போன்ற மகத்தான வார்த்தைகளால் அளவலாவியே உள்ளம் மகிழ்ந்த காதலனுக்கு இன்று சத்திய சோதனையே ஏற்பட்டது.

இன்னும் தன் காதலை அவளிடம் சொல்லவில்லை ஆனாலும் ஒரு ஆர்வம் அவனை தூண்டிவிட்டது காரணம் அவனது நண்பர்களின் செயல்கள், காதலிக்கு புத்தாண்டில் பரிசு தந்தால் அந்த காதல் ஆழமாகவும் அழியாமலும் இருக்கும் என அசரீரி போல வந்த தகவலால் 2 நாளாக பித்தனாகிப் போனான் காதலன்.

காதலிக்கு என்ன பரிசு தரலாம் என யோசித்தான், எது தந்தால் அவளுக்கு பிடிக்கும் என 2 நாளாக பெரிய பட்டியலை தயார் செய்தான். ஒவ்வொன்றும் வாங்க எண்ணி கடைத்தெருவில் அலைந்தான், அவன் பட்டியலில் இருந்த பொருட்கள் கண்ணில் பட்டாலும் இது தன் காதலிக்கு பிடிக்குமா என நினைத்தே சந்தேகத்தில் அத்தனையும் கோட்டைவிட்டவன் இன்று மாலை 6 மணியாகியும் பரிசு வாங்காமல் கையை பிசைந்தப்படி தனது அறையில் உலாத்திக் கொண்டிருந்தான். அவன் கவலை அவனுக்கு என்பது போல் அவனது பெற்றோர்கள் கவலையடையாமல் புத்தாண்டிற்கு டிவியில் வரும் நிகழ்ச்சிகளை பற்றி விமர்ச்சித்துக் கொண்டிருந்தார்கள், அவனது கவலை காதல் என தெரிந்தால் அவர்களும் அவனுக்கு துணையாக கவலையில் மூழ்கியிருப்பார்கள் ஆனாலும் அவனுக்கு பரிசு கிடைக்காமல் போனது ஒரு கவலை என்றால் பரிசில்லாமல் எப்படி மறுநாள் காதலியின் முகத்தில் விழிப்பது என்ற கவலையே அவனது சிந்தையை குழப்பியது.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனது காதலியும் லேசுபட்டவள் அல்ல, 20 வருடங்களாக தந்தையின் நிழலில் வாழ்ந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவள் இன்று முதல் முறையாக 2 வருடமாக தன் பின்னால் அலைந்த காதலன் அவனுடைய காதலை தன்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்தது ஒரு பக்கம் என்றால் கடந்த 11 மாதமாக அவனுக்கு தெரியாமல் அவனையே காதலித்துக் கொண்டு இருந்தவளின் மனம் இன்னொரு பக்கம் ஒரு நல்ல நாளில் காதலன் தன் காதலை சொல்வான் அன்று அந்த காதலை ஏற்றுக் கொள்ளலாம் என காத்திருந்தவளின் மனதிற்குள் ஒரு புதிய திட்டம் உதயமானது, அவன் தன் காதலை சொல்ல 2 வருடம் எடுத்துக் கொண்டானே அதற்குள் நாம் நம் காதலுக்கு ஒரு அடையாளமாக புத்தாண்டு பரிசை தரலாம் என நினைத்தாள் அதற்காக அவனை விட 1 வாரகாலமாக எந்தப் பரிசு பொருள் தருவது குறித்த தேடலில் சோர்ந்துப் போனாள் காதலி.

பேர் தெரியும், அதிகமாக பேசவில்லையானாலும் பேசாத வார்த்தைகள் மனதுக்குள் பேசிக் கொண்டு பேச முடிந்த சிலவற்றை பேசிக் கொண்டு காலத்தை ஓட்டினார்களே தோழியும் அல்லாமல் காதலியும் என்றில்லாமல் எந்த உறவுக்குள்ளும் அடைக்காமல் புதிய உணர்வில் ஓடிக் கொண்டிருந்தான் அவளது காதலன். 2 வருடங்கள் பேச்சுவார்த்தையில் உருப்படியாக  அவன் பேசியது அவளது போன் நெம்பர் தரக்கோரி, கேட்ட உடனே அவளும் தந்தாள் மகிழ்வுடன், போன் நெம்பர்க்கு பதிலாக அவள் மனதை கேட்டிருந்தாலும் உடனே தந்திருப்பாள் என அவன் நினைக்கவில்லை நெம்பர் கிடைத்ததே பெரிதாக எண்ணி உள்ளம் மகிழ்ந்தாலும் ஒரு நாளும் போன் மூலம் உரையாடாமல் கண்ணியம் காத்தான்.

தன்னை அவள் இழிவாக நினைத்துவிட்டால் நட்பாக எண்ணி நெம்பர் கொடுத்ததற்கு அவன் செய்தது தரக்குறைவான செயல் என நினைத்துவிட்டால் என்ன செய்வது என அவனும் பேசவில்லை

அவளோ போன் நெம்பர் கொடுத்தாயிற்று அவசரத்தில் அவன் சொன்ன நெம்பரையும் தனது  போனில் சேர்த்தாயிற்று இனி அவனுக்கு போன் செய்து உரையாட மனம் வரவில்லை, காரணம் அவன் தன்னை இளப்பமாக நினைத்துவிட்டால் இவ்வளவுதானா இவள் என நினைத்து காதலுக்கு பதிலாக வேறு ஒன்றை அடைய நினைத்தால் என்ன செய்வது என யோசித்து அவனே போன் செய்யட்டும் என காத்திருந்தாள்

காத்திருப்பின் காலமானது 3 மாதங்களானது. இதில் இருவருக்கும் வந்த சோதனையே புத்தாண்டு

அது ஏன் வந்தது என இருவரும் நொந்துபோய்விட்டனர். வந்ததும் வந்தது காதலன் காதலை சொன்னபின் வந்திருக்ககூடாதா என அவள் நினைத்தாள் காதலனோ காதலியின் மனம் அறியாமல் அவள் விருப்பு வெறுப்பு தெரியாமல் இந்த புத்தாண்டு ஏன் வரவேண்டும் என நினைத்தான்.

காலம் அதன் வேலையை செவ்வனே செய்தது ஆனால் காதலன் காதலியோ தங்களுக்குள் ஏற்பட்ட புது உணர்வில் காலம் வேகமாக சென்றது கூட அறியாமல் புத்தாண்டை குறை கூறி முடித்தார்கள்.

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: 2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகாThenmozhi 2019-01-02 17:16
nice story Sasirekha. Thanks for sharing.

Happy new year to you too :-)
Reply | Reply with quote | Quote
# RE: 2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகாInaya 2019-01-01 23:36
Simple
Reply | Reply with quote | Quote
# RE: 2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகாmadhumathi9 2019-01-01 20:08
:clap: nice story. (y) :thnkx: :clap:
Wish u a Happy New Year
Reply | Reply with quote | Quote
# RE: 2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகாRaVai 2019-01-01 08:38
Wish you a very happy New Year 2019.
Create new records in all segments!
This story brings out well the agonising moments of lovers!
And Chillzee has promptly given its due!
Reply | Reply with quote | Quote
# RE: 2019 புத்தாண்டு சிறப்பு சிறுகதை - புத்தாண்டு பரிசு - சசிரேகாsasi 2019-01-01 07:50
சில்சி ரொம்ப நன்றி கடைசி நேரத்தில இந்த பதிவை எழுதி அனுப்பினேன் அதை இன்னிக்கே பிரசுரம் பண்ணீங்க ரொம்ப நன்றி இதை நான் எதிர்பார்க்கலை உங்களுக்கு என்னோட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சில்சி 2019 வந்துடுச்சி எல்லாத்திலயும் கலக்குங்க சில்சி :dance: :dance: :dance:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top