Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu

Chillzee KiMo - கதை பிரியர்களுக்கான Chillzeeயின் புதிய சேவை!

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவை - 5.0 out of 5 based on 2 votes

ஒருநாள் மகளிடமே நால்வரும் சுற்றி அமர்ந்துகொண்டு பேசினோம்.

" லட்சுமி! உன்னாலே இந்தக் குடும்பத்துக்கே, ரொம்பப் பெருமை! உன் படிப்பு, உன் அழகு, உன் திறமைகள், உன் பேச்சுத்திறன், உன் நட்புவட்டாரம் எல்லாமே எங்க வாழ்க்கைத்தரத்துக்கு எட்டாதவை! ....."

" டாட்! யூ டாக் சேஸ்ட் டமில்! நீ சொல்றது கொஞ்சம் புரியுது! முழுக்கப் புரியணுன்னா, நீ கொஞ்சம் பேசற தமிழிலே.......ப்ளீஸ்!"

" சாரி! முக்கியமா நீ டாக்டருக்கு படிக்கிறது, இந்த வட்டாரத்திலேயே எல்லாரும் பெருமையா பேசறாங்க! அதெல்லாம் ஹேப்பியாயிருக்கு! ஆனா...."

" சொல்லு டாடி!"

" நீ காலேஜ் போறது, வர்றது, ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு நேரமாயிருக்கு....யார் யாரோ ஆம்பளைப்பசங்க ஸ்கூட்டரிலே, காரிலே அழைச்சிகிட்டுப்போறாங்க! தினமும் செய்திகளிலும் டி.வி.யிலும் வர நாட்டு நடப்பை கேட்கிறபோது, எங்களுக்கு ரொம்ப பயமாயிருக்கும்மா!"

" ஐ.சீ.! ஐ அண்டர்ஸ்டாண்ட்! எனக்கு புரியுது. பயப்படாதீங்க! நான் ஜாக்கிரதையாயிருக்கேன்,....."

" அதில்லே,......."

" லுக்! பாதி கிணறு தாண்டிட்டீங்க! இன்னும் நாலு வருஷம், நான் டாக்டராகி, பிராக்டீஸ் ஆரம்பிச்சு, நிறைய சம்பாதிச்சு, இந்தக் குடும்பத்தையே உயர்த்திக்காட்டறேனா, இல்லையா பாருங்க! இட் இஸ் எ பிராமிஸ்!"

அவள் பேசியபோது எனக்கு வித்தியாசமாகத் தெரிந்தது, சில விஷயங்கள்! ஒன்று, அவள் நல்ல தமிழ் பேசுகிறாள், அதாவது, அவள் எங்களிடமிருந்து பிரிந்துவிடவில்லை! இரண்டு, அவள் பேசிய தொனி, கம்பீரத்தோடு சற்று வைராக்கியமும் கலந்திருந்தது போலிருந்தது. திடீரென எனக்கு ஒரு சந்தேகம், அவள் வேஷம் போடுகிறாளோ! வேஷம் போட்டு ஏமாற்றுவது யாரை? குடும்பத்தையா, கூடப் பழகுபவர்களையா?

அவளை கண்கொட்டாமல் சில வினாடிகள் பார்த்துக்கொண்டேயிருந்தேன்!

அவளும்தான்!

திடுமென, அவள் கண்கள் குளமாகி கன்னத்தில் கண்ணீர் வழிந்தோடியது. தாவிவந்து, என் மடியில் முகம் புதைத்து, அவள் குலுங்கிக் குலுங்கி அழுதபோது, நால்வருமே கதிகலங்கினோம்!

கொஞ்சம் கொஞ்சமாக அழுகையை குறைத்துக்கொண்டு, தொண்டையை செருமிக்கொண்டு, மீண்டும் பேசினாள்.

" நீங்க நினைக்கிறமாதிரி, நான் பணத்துக்கும் போலித்தனத்துக்கும் நவநாகரிகத்துக்கும், விலை போய்விடவில்லை! நம்புங்கள்! நான் ஒரு வைராக்கியத்தோடு வேஷம் போட்டு, வெளி உலகத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கிறேன்.......இன்னும் நாலே வருஷம், நான் டாக்டராகி, நிறைய சம்பாதித்து, இந்தக் குடும்பத்தையே பணக்கார திமிர் பிடித்தவங்க, மதிக்கும்படி கொண்டுவரேன்!......"

" லட்சுமி! உன்மீது எங்களுக்கு முழு நம்பிக்கையிருக்கு! இன்னும் நாலே வருஷம். ஓடிப்போயிடும்! சாதாரண லட்சுமி, மெடர்னிடி ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் லட்சுமி ஆகிடுவா! அப்புறம், தினமும் ஆயிரக்கணக்கிலே சம்பாதிப்பே! ரொம்ப சந்தோஷமாயிருக்கு! ஆமாம், ஏதோ வெறி வந்தாற்போல பேசினியே, என்ன ஆச்சு?"

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

" சொல்றேன்! அப்பா! என்னுடன் படித்தவர்களிலே, பலபேர் நல்லவங்க, என்னை உண்மையாவே நேசிக்கிறவங்க, என் ஏழ்மை அவங்க கண்ணிலே பட்டதே கிடையாது, என் படிப்பு, என் விளையாட்டுத் திறமை, பேச்சு, பாட்டு, டான்ஸ், கராத்தேயினாலே என்னை விரும்பினவங்க! ஒருசில பேர், அதற்கு மாறாக, என்மீது பொறாமைப்பட்டவங்களும் இருந்தாங்க! சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம், என்னை என் ஏழ்மைக்காக கிண்டல் பண்ணினாங்க!"

" அப்படியா!"

" ஒருநாள், பள்ளிக்கூடத்திலே சாப்பிடறபோது, என் பக்கத்திலே அந்தத் திமிர் பிடித்தவங்க சாப்பிட்டுக்கொண்டிருந்தாங்க. அவங்க எல்லாரும் வீட்டிலிருந்து கேரியரிலே வர முழு சாப்பாடு சாப்பிடறவங்க! நான் வழக்கம்போல, சின்ன டப்பாவிலே, தயிர்சாதம் எடுத்துக்கிட்டுப்போனதை சாப்பிட்டேன். என் காதிலே விழறாமாதிரி, அவங்க பேசினாங்க:

" ஆமா, நாமெல்லாம் ஸ்பூன் யூஸ் பண்ணி மூணு அடுக்கு கேரியரிலே வந்திருக்கிற விதவிதமான சாப்பாடு சாப்பிடறோம், ஆனா, ஒரே ஒரு சின்ன டப்பாவிலே தயிர் சாதம் மட்டும் அதுவும் ஸ்பூனில்லாம யாருடீ சாப்பிடுவாங்க?"

" பிச்சைக்காரி!"

அவங்க சேர்ந்து 'கொல்'னு சிரிச்சதும், நான் பாதியிலேயே, நிறுத்திட்டு, கைகழுவிட்டு, ஒரு மூலையிலே உட்கார்ந்து, அழுதேன், அவமானம் தாங்காமல்!

எதேச்சையா, அந்தப் பக்கம் வந்த என் டீச்சர், நான் அழறதை பார்த்து, பதறிப்போய், என்னை ஆதரவா அணைச்சிண்டு, காரணத்தை கேட்டாங்க! நான் நடந்ததை கொட்டித் தீர்த்தேன். அப்ப அவங்க, எனக்கு சமாதானமும் தைரியமும் சொன்னது, இன்னமும் என் காதிலே ஒலிச்சிகிட்டேயிருக்கு, நெஞ்சிலே நிலைச்சு நின்னுடிச்சி......."

"அப்படி என்னம்மா சொன்னாங்க?"

" சொல்றேம்ப்பா! அவங்களும் நம்மை மாதிரி மத்தியதர வர்க்கந்தானாம், அவங்களையும் திமிர்பிடித்த பணக்கார பொண்ணுங்க கிண்டல் செஞ்சாங்களாம், அப்ப அவங்க மனசிலே ஒரு வைராக்கியம் பிறந்ததாம், எந்தத் தடைகள் வந்தாலும் அத்தனையும் கடந்து வாழ்க்கையிலே ஜெயித்து பணக்காரியாகிக் காட்டணும்னு போராடி ஜெயிச்சாங்களாம்......'லட்சுமி! இதிலே ஒரு யுக்தியை நாம பயன்படுத்தணும், என்னன்னா, நாம் அவங்களை லட்சியம் செய்யாதமாதிரியும், அவங்க கிண்டல் செஞ்சது நம்மை பாதிக்காத மாதிரியும் நடந்துக்கணும், அவங்களைப் போலவே, அவங்களோடவே பழகணும், அதுவும் நீ கராத்தேயிலே ப்ளாக்பெல்ட் வாங்கின சாம்பியன்! தவிர, இடுப்பிலே ஒரு சின்ன கூர்மையான கத்தி மறைச்சு வைச்சிக்க, எவனாவது எல்லை மீறினா, தைரியமா அதை பயன்படுத்து! பணக்காரியாகணுங்கிற வெறியை நெய்விட்டு அணையாம பார்த்துக்க! யாரெல்லாம் உன்னை கிண்டல் செஞ்சாங்களோ, அவங்க மத்தியிலே, காரிலே வந்து இறங்கி பங்களாவிற்குள்ளே அவங்களை பார்த்து சிரிச்சுகிட்டே நுழைந்து சோபாவிலே கால்மேல் கால் போட்டு உட்கார்! அவங்க தலை குனிஞ்சு வெட்கத்திலே குறுகி ஒடுங்கணும். மறந்துடாதே!' ன்னு சொன்னது நெஞ்சிலே திகுதிகுன்னு எரிஞ்சிகிட்டேயிருக்குப்பா! நீங்க யாரும் என்னைப் பற்றி கவலைப்படாதீங்க! நான் கட்டாயம் ஜெயித்துக் காட்டுவேன்......."

நான் எவ்வளவோ தப்பு செய்திருந்தாலும், என் மகள் தப்பு செய்யவில்லை, செய்யமாட்டாள் என்ற நம்பிக்கை என்னுள் வளர்ந்தது!

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைmadhumathi9 2019-02-04 07:43
:clap: nalla kathai.panam thaan niraiya idangalil mariyaadhai kodukkirathu. (y) :clap: (y) pengalukku idhupol niraiya nadakkirathu endru ninaikkiren. :sad: kathai miga nandraaga irunthathu. :GL: sir.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-04 09:21
உங்கள் பாராட்டு எனக்கு சந்தோஷத்தை தருகிறது. நன்றி.
நம் சமுதாயத்தில் நடக்கும் அநீதிகளை சுட்டிக்காட்டி, திருத்தப்பபடவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளை வலியுறுத்துவதே என் நோக்கம். தங்கள் ஆதரவு என்றும் தேவை
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைAdharvJo 2019-02-03 23:08
I liked the theme uncle :clap: :clap: :yes: thalai nimarndhu vazhanum!! You started the play really well (y) 9 kids, fin problems, illiteracy rate, family issues etc etc well balanced :hatsoff: Lakshmi oda will power to achieve in life is really impressive but I was little taken back with her approach...Understand it would be really offending when someone nudge us based on our status but here dad feels suspicious :Q: appadi oru matram thevaiya? Munattram irukanum we need to have self satisfaction but not competition poramai potti is not worth it. However I don't think there will be an end for such thirst sir. Correct me if I am wrong. THank you and keep rocking.

Lastly ninga knife-I vida matinga pole irukku :D :cool:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-04 06:35
Dear Jo! ஆண்கள் பெண்களை நசுக்குவதை நிறுத்தாதவரையில், நானும் கத்தியை விடமாட்டேன். கத்தி என்று சொன்னதும் ஒரு பெண்தான் பயப்படுகிறாளே தவிர, ஆண்கள் அலட்சியப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
கதாநாயகி சாதாரண பெண்களில் ஒருத்தி! அவள் மனதை கொடுமையான வார்தத்தைகளால் புண்படுத்தியதால், மூண்ட ஆவேசம். போகப்போக சரியாகிவிடும். நன்றி ஜோ!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைAbiMahesh 2019-02-03 16:59
Nice story & way of Writing Sir.. :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அறியாமற் செய்த பிழை! - ரவைRaVai 2019-02-03 21:36
Thanks, Abhimahesh!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top