(Reading time: 9 - 17 minutes)

சிறுகதை - மாமரன்(ம்) - ரம்யா

mangoTree

ம் தினசரி வாழ்க்கை பயணம் பல விதமான உயிர்களுடன் தான் நடக்கிறது.நாம் விடும் மூச்சுக்காற்று ஆயிரம் உயிர் தொட்டு பிறகு நம்முள் புகுந்து வெளியேறி இன்னம் ஆயிரம் உயிர் தொட பயணப்படுகிறது.அத்தனை உயிர்களையும் நாம் என்றுமே நின்று கவனித்தது இல்லை.அப்படி நின்று கவனிக்க தொடங்கினால் நாம் பெரிதாய் நினைக்கும் நம் வாழ்க்கை இந்த பேரண்டத்தின் துளியிலும் துளி…ஒரு நீர்க்குமிழி போல் என்பது விளங்கும்.அந்த விளக்கத்தில் அழியும் நான் என்ற ஆணவம்.இதை போன்ற சில ஞான நிமிடங்கள் பிறப்பது பெரும்பாலும் இயற்கை மடியில் தான்.என் குடியிருப்பில் இருந்த ஒரு மாமரத்தின் நிழலில் இது போன்ற எண்ணங்கள் உதயமாகும்.அவனையே இந்த கதையின் நாயகனாக்கி நான் சந்தித்த பாதித்த இன்னொறு உயிரோடு இனணத்து ஒரு கற்பனையில் உதித்த கதை இது.

சூரியன் உச்சி தொடும் நேரம்.எங்கும் ஈரமரத்தின் வாசம்.மண் வாசம்.கழிக்கப்பட்ட மரங்களை சுமக்க அங்கு லாரிகள் இரைச்சல். என்ன சொல்ல.எத்தனை மாநாடு போட்டாலும் எத்தனை தொண்டை தண்ணீர் வற்றினாலும் மரம் அழிப்பதை இவர்கள் நிறுத்துவதாய் இல்லை. செய்வினையும் வைத்து கொண்டு வினைப்பயனையும் அனுபவித்து மடியும் அற்ப பதர்கள்.என் உள்ள குமுறல் யாரிடம் சொல்ல.கூட்டமாய் ஒரே குடும்பமாய் சிரித்து மகிழ்ந்து தழைத்து காய்த்து கனிந்து வளர்ந்து வந்தோம்.இப்படி என் உற்றாறை சூறையாடி அறுத்து இந்த லாரியில் மரண ஊர்வலம் நடத்த வந்து விட்டார்கள். கோடாலியினும் கொடிய இராட்சத இயந்திரம் கொண்டு எங்களை அறுக்கும் நேரம்…அஅப்ப்பா அந்த ஓலம் என்னை உலுக்குகிறது.நூற்றாண்டு கூட தொட முடியாத இவர்கள் முண்ணூறு ஆண்டு வரை கூட பயன் தரும் எங்களை ஆள்வதா.இது என்ன ஆணவத்தின் உச்சம்.

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அய்யோ அதோ வருகிறது அந்த இயந்திரம்.என் உடலையும் கூறு போட வருகிறது. என்ன செய்வேன்.என்னை அழிக்காதே மனிதா..உன் சமூகமும் அழியக்கூடும்.ஆஆஆ என் ஒரு கிளையை கிள்ளி எறிந்துவிட்டான்.என் அம்மூ நீ எங்கே…நீயிருந்தால் இது நடக்குமா?அவளை ஒருமுறை பார்க்கும் வரை யேனும் என்னை விட்டு வையுங்களேன். யாரது

“நிறுத்து..இந்த மரம் மட்டும் இருக்கட்டும்.நல்ல சென்டர்ல இருக்கு லெண்ட்ஸ்கேபிங் பாயிண்டா இருக்கும்”நெட்டை ஆசாமி சொல்ல

“சரிங்க….வாங்கப்பா இதை வெட்டாதீங்க”மற்ற ஆசாமிகள் வழிமொழிய நான் பிழைத்தேன்.இன்று வரை பிழைத்திருக்கிறேன்.

நான் ஒரு மாமரம். நாற்பது வருடமாக இந்த இடத்தில் இருக்கேன்.என்னை நட்டு வளர்த்தது என் அம்மூ.விளையாட்டாக மயானத்திலிருந்து பிடுங்கி வந்து நட்டு வைத்ததாக அவள் அம்மா சொல்லுவாள்.என்னுடனே வளர்ந்த என் அம்மூ எனக்கு தினமும் தண்ணீர் ஊற்றி ஒரு தளிர் வந்தாலும் சந்தோஷ கூத்தாடி மகிழ்வாள்.அந்த தோப்பு அவள் இராஜ்ஜியம் இருந்தாலும் நான் மட்டுமே அவள் சொந்தம்.என்னை சொக்கம் என்று கூப்பிடுவாள்.அழுகையோ ஆனந்தமோ என்னை கட்டிக்கொண்டு புலம்புவாள்.அவளை தொலைத்தே இருபது வருஷம் ஆச்சு.

அவளை கடைசியாக பார்த்தது கூட ஞாபகம் இருக்கு.இங்க இருந்த தோப்பு மரங்கள் எல்லாம் தடவி தழுவி அழுது..என்னை கட்டிக்கொண்டு சொக்கா சொக்கா என்று தேம்பி கொண்டே தான் போனாள்.திரும்ப வருவாள் என்று தான் காத்திருக்கிறேன்.அவள் போன சில மாதங்களில் தான் அந்த தோப்பு அழிப்பு நடந்ததது.என்னை தவிர எல்லா மரத்தையும் வெட்டி சாய்ச்சு அங்கு பல விதமான இயந்திரங்கள் இறக்கி பெரிய பெரிய கட்டிடங்கள் எழுப்பிட்டாங்க.இருந்த தோப்பு அழிச்சிட்டு கட்டிடத்த சுத்தி வரப்பு கட்டி மண் கொட்டி சின்ன சின்ன செடிகளா நட்டு வச்சு  அதுக்கு தண்ணீர் ஊற்ற பாதுகாக்கன்னு ஆட்கள்.என்ன விந்தை.

நாட்கள் நகர்ந்தது.மக்கள் கூட்டமாக குடியேறத்தொடங்கினர்.நான் அவளை தேடி நிற்கிறேன்.என் மீது கல் எறிந்து காய் வென்ற சிறுவர்கள்..தவறாமல் என் கிளையில் கூடுகட்டி குஞ்சு பொறிக்கும் காக்கை….என் இலை பறித்து விளையாடும் இளம் கைகள்..கூடு கட்ட எத்தனித்து கூண்டோடு அழிந்த தேனீக்கூட்டம்..என்னை சுற்றி அமர்ந்து கொண்டு நடந்த வம்புகள் வழக்குகள்,காதல் தருணங்கள் இன்னம் எவ்வளவோ.இதை எல்லாம் என் அம்மூவிடம் சொல்ல காத்திருக்கிறேன்.

இப்படி காத்திருந்த ஒரு காலை வேளை ….எப்போது பார்ப்பேன் என்று ஏங்கிய கனம்..அவள் வந்தாள்.மெல்லிய தேகம்,கதர் சீலை,சற்று நரைத்த முடி உடலும் உள்ளமும் சோர்ந்த ஒரு உருவம்.என் அம்மூ வா இது.அம்மூ அம்மூ நீதானா.என்னை பார்க்க வந்தியா?குறுகுறுக்கும் உன் பார்வை எங்கே?கொலுசு கொஞ்ச நீ நடக்கும் நடை எங்கே?தாவணி தாண்டி தெரியும் உன் வனப்பு எங்கே?இதழை பிரியாத புன்னகை எங்கே?எழில் தேவதை நீ போனதெங்கே?

“அம்மூ நீயா என்னடி அதிசயம் இந்த ஊர்பக்கம்….இருபது வருஷம் இருக்குமா நீ இங்க வந்து?போன மாசம் நான் உன் ஊருக்கு வந்தேன் வருவதா சொல்லலியே?”பொன்னி அக்கா

“ஆமாக்கா இருவது வருஷம் இருக்கும்.திடீரென தான் வந்தேன் கா.இந்த இடமே மாறிப்போச்சே கா….இப்படி கட்டிடமா இருக்கே…”அம்மூ

“ஆமா ஆமா ஊரு முழுக்க இது தான்.எப்படி இருந்த இடம்.இந்த தோப்புக்குள்ள எப்படி விளையாடுவோம்.அந்த ஏரி தண்ணி அள்ளி குடிப்போம் இப்ப பாரு ஏரி முழுக்க சாக்கடை…கலி காலம் தான் போ”

“அக்கா இது சொக்கன் தான”

“ஆமா அம்மூ எப்படி நினைவு வச்சிருக்க…எப்படியோ இது மட்டும் தப்பிச்சு வளர்ந்து நிக்குது”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.