Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவை - 5.0 out of 5 based on 1 vote

சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவை

Marriage

தம்பாக்கம் வாசுகி மாதர் சங்கத்தில், ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று, உறுப்பினர்களிடையே, பட்டிமன்றம் நடைபெறும்.

தலைப்பு வித்தியாசமானதாக இருக்கும். தொலைக்காட்சி சேனல்களிலே, நடக்கின்ற பட்டிமன்றங்கள், அரைத்த மாவையே அரைக்கின்றன, அப்படியில்லாமல், புரட்சிகரமானதாக தலைப்பு இருந்தால்தான், பேச்சாளர்கள் சுயமாக சிந்திப்பார்கள் என்பதற்காக இந்த ஏற்பாடு.

இதுவரை, விவாதிக்கப்பட்ட தலைப்புகளைப் பார்த்தால், உங்களுக்கு விளங்கும்.

குடும்பத்தின் வழிகாட்டி, தாயா, தந்தையா?

இறைவன் இருக்கிறானா, இல்லையா?

இங்கிலீஷ் வைத்தியம் நன்மையா? தீமையா?

இந்தமாதிரி ஒரு தலைப்பு, அடுத்த பட்டிமன்றத்துக்காக தேர்ந்தெடுக்க, செயற்குழு உறுப்பினர்கள் கூடியிருந்தனர்.

காரசாரமான விவாதம் நடந்தபிறகு, முடிவான தலைப்பு: 

பெண்களுக்கு திருமணம் தேவையா? வேண்டாமா?

 இதை அறிவித்ததும், உறுப்பினர்களிடையே பெருத்த உற்சாகம்.

 ஆச்சரியம் என்னவெனில், 'வேண்டாம்' என்று வாதிட, நிறையபேர் முன்வர, தேவை என்ற கட்சிக்கு ஆள் தேடவேண்டியிருந்தது!

 இறுதியாக, வாதிட முன்வந்த எட்டு பேரில் சீட்டுக் குலுக்கிப் போட்டு, 'தேவை' என்ற கட்சிக்கு நான்கு பேரையும், 'வேண்டாம்' என்ற கட்சிக்கு நான்கு பேரையும் தேர்ந்தெடுத்தார்கள்.

 'தேவை' எனப் பேசவேண்டியவர்களில் ஒருத்தி, மாளவிகா!

 திருமண வாழ்வில் மிகவும் கஷ்டப்படுகிறவளிடம், 'தேவை' எனப் பேச வற்புறுத்தினால், பாவம்!, அவள் என்ன செய்வாள்?

 விஷயத்தை தன் கணவனிடம் சொல்லி, அவனை 'பாயிண்ட்ஸ்' கேட்டாள்.

 அவன் உற்சாகமாக துள்ளி எழுந்தான்.

 " மாளு! ......."

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 "இத பாரு! இந்தக் கொஞ்சலே வேண்டாம். நீ 'மாளு'ன்னு கூப்பிடறது, 'மாடு'ன்னு காதிலே கேட்குது! என் அழகான பெயரை 'மாளவிகா'ன்னு முழுக்கச் சொல்லு! புரிஞ்சுதா?"

 " நமக்குள்ளே ஒரு சமரசம் பண்ணிப்போம், 'மாளவிகா' ன்னு நீளமான பேரும் வேண்டாம், 'மாளு'வும் வேண்டாம், 'டார்லிங்'னு கூப்பிடறேன், சரியா?"

 " இன்னும் பத்து வருஷம் கழித்து கூப்பிடுங்க, நல்லாயிருக்கும்! மூணு பெற்ற பிறகு 'டார்லிங்'கா?"

 " ஓ.கே., 'விகா'ன்னு........"

 " இத பாரு! நீ என்னை கூப்பிடவே வேண்டாம், நானே வரேன், இப்ப, விவாதம் செய்கிற 'பாயிண்ட்ஸ்' ஒண்ணொண்ணா சொல்லு, எழுதிக்கிறேன்........"

 " நீ காரியத்திலேயே குறியாயிரு! சரி சரி, முதல் பாயிண்ட், கல்யாணம் பண்ணிக்காம எப்படி குழந்தை பெற்றுக்கொள்ளமுடியும்?......."

 " நீ எந்த யுகத்திலே இருக்கே? இப்பல்லாம், 'லிவிங் டுகெதர்' முறையிலே பல வருஷம் சேர்ந்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கிறாங்க! அடுத்த பாயிண்ட் சொல்லு!"

 " வந்து, ஆங்!, லிவிங் டுகெதர் முறையிலே குழந்தைங்களுக்கு, தாய் ஒருத்தியாக இருந்தாலும், ஒவ்வொரு குழந்தைக்கு வெவ்வேறு தந்தை இருப்பாங்க! அதனாலே, தாத்தா, பாட்டி வேறவேறயா இருப்பாங்க! தந்தை பிரிந்துபோயிட்டாலும், தந்தைவழி தாத்தா, பாட்டிகளாலே தங்கள் பேரக்குழந்தைகயை பார்க்காம இருக்கமுடியாது, அதனாலே அவங்களும் அந்த வீட்டிலே நிரந்தரமா தங்கினா, கம்யூனிடி கிச்சனா ஒவ்வொரு வேளைக்கும் பத்துபேருக்கு சமைக்கவேண்டியிருக்கும், செலவு அதிகமாயிடும், ஒரு தாயின் வருமானம் போதாது, வறுமையில் குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படும். படிக்காத ஏழைகளின் எண்ணிக்கை நாட்டிலே பெருகிடும், சமுதாயம் சீரழியும், அது தீமை, அதனாலே, அப்படியெல்லாம் ஏற்படாமலிருக்க திருமணம் அவசியம்! எப்படி! சூப்பராயில்லே?"

" சூப்பராயில்லை, ஸ்லீப்பராயிருக்கு! இந்த பாயிண்ட் விளக்கிச் சொல்றதுக்குள்ளே, ஆடியன்ஸ் தூங்கிப்போயிடுவாங்க, உன்னைப் போய் கேட்டேன் பாரு, என் புத்தியை....."

" ப்ளீஸ்! செருப்பாலே அடிச்சிக்காதே, நேற்றுத்தான் வாங்கின புது செருப்பு!"

" ஜோக்கா! ஏன்யா, நீ காலேஜிலே படிக்கிறபோது, பட்டிமன்றமே கிடையாதா? நீ பேசவே மாட்டியா? ஆடியன்ஸிலே ஒருத்தனா கைதட்டிண்டு உட்கார்ந்திருப்பியா?"

" அதென்ன அப்படி சொல்லிட்டே, விகா!......."

"ஏய்.........!"

" சாரி, சாரி, ஒருமுறை என் பேச்சைக்கேட்டு பரவசப்பட்டு, ஒரு மாணவி ஓடிவந்து, எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, என்னை கட்டியணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்தா, அரங்கமே கைதட்டி அதிர்ந்தது......."

" அப்படியென்ன பேசினே?"

" எல்லா பெற்றோரும், தங்கள் மகனுடைய திருமணத்தின்போது, மணமான தம்பதிகள், முதல் ஐந்து வருஷம், ஜாலியா ஊர்சுற்ற, தேவையான பணத்தை சீரா, மணமகளிடம் கொடுக்கவேண்டும்னு சொன்னேன்......."

  •  Start 
  •  Prev 
  •  1  2  3 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைabimahesh 2019-03-28 21:51
Good Story Sir!! Maalu solra points la Super.. But apdi nadukkuma? :thnkx: :grin:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-29 06:47
நடக்கும், நடக்கணும், my dear Abhi mahesh! Thanks for your compliments
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைmadhumathi9 2019-03-28 20:32
wow fantastic story. :clap: :clap: (y) :thnkx: :GL: sir.arumai :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:54
மிக்க மகிழ்ச்சி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைJebamalar 2019-03-28 18:37
இரு மனமும் ஒரு மனதானால் கதையின் பிற்பகுதி போல் இனிக்கும்... இரு மனமும் இரு வேறு மனதானால் முற்பகுதி போல் குடும்பம் களை கட்டும் என்று அழகாக கூறியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள் sir
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:52
மிக்க நன்றி, ஜெபமலர்!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைharii k 2019-03-28 16:52
Good one sir,, Pengalai rasikamatumalla mathiakvum terindha aangalukana story :clap: :clap:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - வேண்டாம் திருமணம்! - ரவைரவை 2019-03-28 20:51
Thanks, dear Hari!
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top