Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவை

happy

ம்மிலே ரொம்ப பேருக்கு இன்னமும் இந்த நாட்டு மக்களை ஏழ்மை எப்படி பாதிக்கிறது, என்று தெரியவேயில்லை.

 பொதுவாக, நாம் நமக்கு மேலே வசதியாக வாழ்கிறவங்களை பார்க்கிறோமே தவிர, நம்மைவிட மோசமான நிலைமையில் வாடுபவர்களைப்பற்றி சிந்திப்பதேயில்லை.

 " என்னம்மா! ரொம்ப யோசனையிலே இருக்கீங்க!........."

 அப்போதுதான், நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு, நிமிர்ந்து பார்த்தேன். என் வீட்டில் வேலை செய்யும் லச்சுமி!

 அவளுக்கு லக்ஷ்மி என்று அழகான பெயரைத்தான் வைத்திருப்பார்கள். ஆனால், பழக்கத்தில், அது திரிந்து, சிதைந்து, லச்சுமி ஆகிவிட்டது.

 அவளுக்கு அதைப்பற்றியெல்லாம், சிறிதும் கவலையேயில்லை. 

 " எப்படிக் கூப்பிட்டா என்னம்மா? பெயரிலே என்னம்மா இருக்கு? 'ஏய்'னு கூப்பிட்டாக்கூட ஓடிவருவேன்........"

 அவளைப் பார்த்தால், எனக்கு மலைப்பாக இருக்கும். அவளைப்பற்றி விவரங்கள் சொன்னால், உங்களுக்கும்கூட அப்படி இருக்கும்!

 அவ புருஷனுக்கு ஒரு கண்ணில் பார்வையில்லை! அதனால் படிப்பில்லை, அதனால் வருமானம் அதிகம் இல்லை, அவனை கல்யாணம் செய்துகொள்ள எந்தப் பெண்ணும் தயாராயில்லை!

 லச்சுமி எப்படி அவனை கணவனாக ஏற்றுக்கொண்டாள் என்று கேட்கிறீர்களா?

 அதை, அவளையே சொல்லச் சொல்கிறேன், கேளுங்கள்!

 " என்னைப் பெத்துப் போட்டுட்டு எங்கம்மா செத்துப்போயிடிச்சி, எங்கப்பன் எனக்கு ரெண்டு வயசிலே, ஓடிப்பூடிச்சி, என்னை வளர்த்தது, என் பாட்டியும் தாத்தாவும்!

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

 அவங்க பிழைப்பை எப்படி நடத்தினாங்கன்னு கேட்கிறீங்களா? பிச்சையெடுத்துத்தான்! ஏன்னா தாத்தாவுக்கு ரெண்டு கண்ணும் குருடு! பாட்டிக்கு இடுப்புக்கு கீழே சொரணை கிடையாது!

 வடபழனி முருகன் கோவில் வாசல்தான் அவங்க இருக்கிற, பிழைக்கிற, சாப்பிடற, தூங்கற இடம்! 

 அவங்க என்னை எப்படி வளர்த்தாங்கன்னு கேட்கிறீங்களா? அவங்களோட, என்னையும் குந்தவைச்சுப்பாங்க, " ஐயா சாமி! தர்மம் பண்ணுங்க!" ன்னு குரல் கொடுத்து பிச்சையெடுக்க கத்துக்கொடுத்தாங்க.

 ஆறு,ஏழு வயசுவரையிலும் அவங்ககூடத்தான் இருந்தேன். அவங்கதான் சொன்னாங்க, " அக்கம்பக்கத்து வீடுகளிலே போய் வீட்டுவேலை செய்யறேன், சாப்பாடு போட்டா போதும்னு சொல்லு! நிச்சயமா வேலை கிடைக்கும், போகப்போக, துணிமணி எடுத்துக் கொடுப்பாங்க, அவங்க வீட்டில தங்க இடம் தருவாங்க, பிழைச்சுக்கப் போ!"

 அப்படி வளர்ந்தவ நான். நான் வேலை செஞ்ச இடங்களிலே நல்லவங்க, கெட்டவங்க ரெண்டுபேருமே இருந்தாங்க, நான் வயசுக்கு வர்றதுக்கு முன்னியே, என்னை கெடுத்த மகராசன்கள் உண்டு, அதே சமயம் என்னை பெத்த மவ போல கவனிச்சிக்கிட்டவங்களும் உண்டு!

 ஏம்மா! எங்களை மாதிரி அனாதைங்களுக்கு என்னம்மா தெரியும்? சொன்ன வேலையை செய்வோம், கொடுத்ததை திம்போம், கிடச்ச இடத்துல படுத்து உருளுவோம், அப்படி படுத்திருக்கிறபோது எது நடந்தாலும் ஏத்துக்க வேண்டியதுதான்!

 கட்டிக்கிட்டேன் அவரைன்னு சொன்னா, என்னமோ, உங்க வீட்டிலே எல்லாம் நடக்குமே, மண்டபத்திலே மக்களைக் கூட்டி, ஐயரு மந்திரம் சொல்லி, தாலி கட்டறாப்போல இல்லே, தெருவோரமா இருட்டிலே சேர்ந்துக்குவோம், ரெண்டுபேரும் எப்பவும் ஒண்ணா இருப்போம், அதுதான் எங்க கல்யாணம், கூட இருந்தவன் ஓடிப்பூட்டான்னா, கிடைச்சவனை சேர்த்துப்போம், அப்படி சேர்த்துக்கிட்டவன்தாங்க இப்பவும் கூட இருக்கிற அந்த ஒத்தைக் கண்ணன்!"

 " சேர்த்துக்கிறவனை ரெண்டு கண்ணும் பார்வை உள்ளவனா பார்க்கிறதுதானே?"

 " ரெண்டு கண்ணும் உள்ளவன் என்மேல ஒரு கண்ணுதானே வைச்சிருப்பான், இன்னொரு கண்ணு ஊர் மேயும், என்னிக்கு வேணும்னாலும் காணாமல் பூடுவான், அதனால தான் ஒத்தக் கண்ணனை பிடிச்சேன், இப்ப அவன்தான் நான் அவனை விட்டுப் போயிடுவேனோன்னு பயப்படணும், இல்லீங்களா?"

 அவளுடைய லாஜிக் புரிந்தாலும், இப்படிப்பட்ட வாழ்க்கையில் எப்படி அவளால் எப்போதும் சிரித்துக்கொண்டிருக்க முடிகிறது?

 நான் அவளைப்பற்றி வியக்கையில், அவள் எனக்கு அதிர்ச்சி தந்தாள்.

 " அம்மா! எத்தனையோ பேரை பார்க்கிறபோது, சாமி என்னை எத்தனை நல்லா வச்சிருக்காருன்னு பிரமிப்பா இருக்கும்மா!"

 " உன்னை நல்லா வச்சிருக்காரா! என்னடீ சொல்றே?"

 "ஆமாம்மா! என்னை சேர்த்துக்கிட்ட ஒத்தைக்கண்ணனுக்கு அண்ணன் இருக்காரு, அவருக்கு, பாவம்மா!, காதும் கேட்காது, வாயும் ஊமைம்மா! ..........."

 " அடப் பாவமே!"

 " இதுக்கே வாயை பிளந்துட்டீங்களே, அவனை ஒரு பொம்பளை தன்னோட சேர்த்துக்கிட்டு வீட்டுவேலை செய்து காப்பாத்தறாம்மா! ........."

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

---

Like to read stories? Now you can read full novels at Chillzee KiMo. No wait time,  No ads, No restrictions!!!

Add comment

Comments  
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைhari k 2019-04-08 16:12
Fact one sir....
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-08 17:29
Grateful, Hari!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-08 05:47
Dear Adharva Jo!
First thing this morning, I received your message. What more do I need to feel absolutely fit and kicking? Your sincere best wishes and the right way of boosting the sagging morale of an old man would stand me in good stead! Thanks a lot!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 19:36
Quoting ரவை:
Thanks. I am not cent per cent fit
Age-related problems!
Story-writing and reading reviews of my good friends like you make me forget the woes!
Find out some ways to lessen the office work
Indha fitness oldness ellathayum thooki podunga uncle...unga stories mathiri youthfull ah feel panunga ungala parthu unga sickness kuda odi pogum. (odi pogumn ninaikiren :P ) take care and get some rest too!! :hatsoff: to all your efforts!!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-07 16:09
Dear AdharvaJo!
Greatly relieved to see your name! I have been missing it for a few days.
Comparison is never a virtue, I totally agree! However if it helps you to get rid of mental agony it is excusable!
Happiness is not connected to material wealth is the main theme of the story!
I love your elaborate comments. Thanks.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 16:13
Quoting ரவை:
Dear AdharvaJo!
Greatly relieved to see your name! I have been missing it for a few days..
office work summa bendu kazhandu pogaru alavuk irukku uncle facepalm

trust all is well with you. Happy Sunday.
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-07 17:53
Thanks. I am not cent per cent fit
Age-related problems!
Story-writing and reading reviews of my good friends like you make me forget the woes!
Find out some ways to lessen the office work
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைAdharvJo 2019-04-07 14:56
No idea what to say uncle :Q: very well narrated :clap: :clap:

Ethukku mele irukuravangala parthu vesana padanum kila irukuravangala parthu sandhosha padanum, uncle??Is it like, to see how they struggle and sacrifice to earn and live a luxury life?? or kizha irukuravanga irukuradha vachi sandhoshama vazhurangan sandhosha padanuma :Q: I would not want to compare with anyone is most of the cases because every person will have his/her own challenges in life to over come...we will try to see the other person only from our point of view adhuvum enakku ethu missing-o adha mattum than parpen we will not try to see what he/she is missing in life. :yes: However I would agree each one as their own way of keeping their life happy.


Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைkarna 2019-04-05 21:54
சந்தோஷம் என்பது அவரவர் மனதையும் பார்க்கும் பார்வையையும் பொறுத்தது.அருமை யான சிந்தனை அய்யா.சந்தோஷம் உள்ளில் இருக்க அதை வெளியே தேடுவது முட்டாள்தனம்
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-06 06:31
மிக்க நன்றி, கர்ணா! நான் உங்கள் விசிறி!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைmadhumathi9 2019-04-05 20:08
:hatsoff: sir.100 kku 100 unmaithaan.sila per panathin pinnaalum,sila per padhavi pinnaalum alainthu kondu irukkiraargal. :clap: arumaiyaana kathai. (y) :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-05 21:37
Dear Madhumathimma! Happy you liked it., immensely!
Due to the support I receive from all of you, i am able to bring out useful stories. Thanks, ma!
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைShanthi S 2019-04-05 19:54
honestly I don't know what to say :-)

I think I need sometime to digest and think about it.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - அவ ரொம்ப பாவம்மா! - ரவைரவை 2019-04-05 21:39
Dear Shanthimma! Much pleased to see you are simply taken over by the theme and presentation of the story! Thanks. Continue to support.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top