(Reading time: 11 - 22 minutes)
Couple

சிறுகதை - இப்படித்தான் வாழ்கிறோம்! - ரவை

ன்று 'மனைவிகள் தினம்'!

என் கணவர் இன்று என்ன பரிசு வாங்கிவரப் போகிறார் என ஆவலாயிருக்கிறது!

இந்த நாளை வாழ்வில் முதல் முறையாக சந்திக்கிறேன்!

ஓராண்டு முன்புதான், என் கழுத்தில் தாலி ஏறியது!

என் கணவர் பிரவீண் ரொம்ப ரொம்ப நல்லவர்!

இந்த ஓராண்டாகத்தான் அவருடன் பழக்கம் என்றாலும், 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல, அவர் திருமணப் பேச்சு நடக்கும்போதே, அவருடைய நல்ல குணம் எனக்கு புரிந்துவிட்டது!

என்னையும் என் குடும்பத்தினரையும் முதன்முறையாக சந்தித்தபோதே, அவர் உறுதியாகச் சொன்ன விஷயங்கள்:

1.சம்பிரதாயங்கள் முக்கியமல்ல, மனப் பொருத்தம் இருந்தால் போதும்.

2.அரைநாளில் திருமணத்தை முடித்துவிடலாம்.

3.என்ன செலவாகிறதோ, அதில் பாதியை நான் ஏற்கிறேன்.

4.மணப்பெண்ணின் மனப்பூர்வமான சம்மதம் அவசியம்.

இப்படிப்பட்டவரும் அவருக்கு ஆதரவாக உள்ள அவர் குடும்பத்தினரும், நல்லவர்களா இல்லையா?

பிரவீண் படிப்பிலும் வேலைத் திறனிலும் மிகவும் சூட்டிகையென ஊரே அவரை பாராட்டுகிறது.

இல்லையா பின்னே! இருபத்தாறு வயதிலே, ஒரு கன்சல்டன்ஸி கம்பெனியை திறமையாக நடத்தி லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்!

அவர் எம்.பி.ஏ. படித்தது மட்டுமல்ல, கம்ப்யூடர் பயிற்சியிலும் சிறந்தவர்!

பெரிய பெரிய கம்பெனிகள் எல்லாம், அவரிடம் வந்து ஆலோசனை கேட்டு பயனடைகின்றன, அதற்குத் தகுந்த சன்மானமும் தருகின்றன.

காலையில் லைட்டாக கார்ன்ஃபிளேக்ஸோ, பிரெடோ சாப்பிட்டுவிட்டு கிளம்பினால், இரவு ஒன்பது அல்லது பத்து மணியாகிவிடும்!

மதியம் சாப்பாட்டை நான் கொடுத்தனுப்புவேன், அதை சிலநாட்கள் முழுக்க சாப்பிடுவார், சில நாட்கள் மிச்சம் வைத்திருப்பார், இன்னும் சில நாட்கள் தொடாமலேயே திரும்பி வரும்!

எனக்கொரு ஏக்கம் உண்டு, ஒரு நாளாவது "வினிதா! உன் கைப்பக்குவம் பிரமாதம்!" என்று பாராட்டுமாட்டாரா என்பதே!

ஆனால், இரவு அவர் வீடு திரும்பும்போது அவர் முகத்தைப் பார்க்கவேண்டுமே! அத்தனை களைப்புடன் வருவார். தன் பிரீஃப் கேஸை சோபாவில் பொத்தென போட்டுவிட்டு, பெருமூச்சு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.