(Reading time: 12 - 24 minutes)

அன்று ஏனோ பொழுது நன்றாக விடிந்தது.பொதுவாக என் விழிப்பின் அலாரம் என் விஜயா குரல் தான்.

“எப்பவும் என்ன தூக்கம்.வயசு பையன மாதிரி நைட் டிவி காலையில குறட்ட.உம்புல இடம் போட்டு உக்காந்திருக்கு சுகர்..ஒரு வாக்கிங் போலாம் இல…உங்கத்தான் எழுந்திருங்க..மணி ஏழு ஆகுது”

இது நடு ஸ்வரம்.ஒரு சில நாட்களில் உச்சஸ்வரத்தில் கூட பள்ளியெழுச்சி நடக்கும்.இது எல்லாம் இல்லாமல் இன்று வீடே அமைதியாய் இருந்தது.கண்விழிக்க பயம் கூட இருந்தது.ஒரு வேலை இது கனவாக இருந்தாவ்.இந்த அமைதி கலைந்துவிடுமே.இந்த நாக்கு தான் ஒத்துழைக்கவில்லை.காபி வேண்டும் என்று அடம் பிடித்தது.ஒரு வழியாக எழுந்து கால கடன்கள் முடித்துவிட்டு நுரைக்கும் காபி தேடி அடுப்படி ஓடினேன்.

அங்கே நான் கண்ட  காட்சி.இது  நிச்சயம் கனவு தான் என்று எண்ணிக்கொண்டு கையை கிள்ளினேன்.வலித்தது.கையில் கோப்பை நிறம்ப காப்பியுடன் புன்சிரிப்புடன் விஜயா.ஒரு நிமிடம் உறைந்து போனேன்.

“இந்தாங்க..என்ன முழிக்கறீங்க”

பேசாமல் வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்து சாப்பாடு மேஜையில் அமர்ந்து அவளை பார்த்து கொண்டிருந்தேன்.காபியின் சுவையினும் இன்று அவள் நடவடிக்கைகள் ஸ்வாரஸ்யமாக இருந்தது.பொதுவாக சமையலில் அவள் புலி என்றாலும் ஏதோ அலுப்பு ஏனோ ஒரு வெறுப்புடன் சமையல் முடிப்பாள்.இடையே கருவேப்பிலையுடன் என்னையும தாளிப்பாள்.அவள் குரல் கேட்காமல் எனக கு ஒரு நிமிடம் நகர்ந்ததாக நினைவில் இல்லை.இன்று இந்த அமைதி என்னை ஏதோ செய்தது.ஒரு வேளை அவளுக்கு அம்நீசியா அல்சைம்ஸ் ஏதாவது வந்திருக்குமோ.என்னை மறந்திருப்பாளோ.அச்சம் என்னை சூழ

“விஜயா”என்றேன்

“ம்ம்ம்”என்றாள்.எனககு சந்தேகம் முற்றியது.

“விஜயா”சற்று உரக்க சொன்னேன்.

“எதுக்கு கத்தறீங்க .இங்க தான இருக்கேன்.என்ன விஷயம்”அவள் வழக்கமான ஸ்வரம்.சற்று நிம்மதியாக இருந்தது.

“ஏன் ஏதோ போல இருக்க.உடம்பு சரியில்லையா…”

“என்ன பார்த்தா அப்படியா தெரியுது.அது சரி இருந்தா மட்டும் என்ன.போங்க போய் தக்காளி வாங்கிட்டு வாங்க.கூடவே இஞ்சி எலுமிச்சை யும் வாங்கிட்டு வாங்க.சீக்கிரம். வெயில்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.