(Reading time: 12 - 24 minutes)

“என்ன சொல்ல வரீங்க…நான் அவளை எதிர்த்து கூட பேசறது இல்லை. சொல்லப்போனா நான் அவக்கூட சரியா பேசறதை இல்ல”

“அதையே தான் சொல்றேன் ராகவன்.பொதுவா திருமணம் ஆனப்பிறகு அவங்க உலகம் நம்மை மட்டும் சுந்நி இருக்கு.நம்ம மனசுல இடம் பிடிக்கனும் ஒரு உறவு வளர்க்கனும்னு அவங்க நான் மெனக்கெடுவாங்க.அப்போ அத நாம் அனுபவிப்போம் இரசிப்போம்.ஒரு குழந்தை வந்த பிறகு அது கொஞ்சம் மாறும்”

“ஆமாங்க…”

“அப்புறம் அவங்க குழந்தைக்காக தான் வாழ்க்கைன்னு ஆகிடுவாங்க.நம்மை அவங்க கூட கூட்டாளி ஆக்கிடுவாங்க.நமக்குள்ள அழற குழந்தை அவங்களுக்கு புரியாது.ஏன் நமக்கே தெரியாது.அதனால என்ன பண்றோம்…நமக்குன்னு ஒரு வழி பண்ணிட்டு அதுல பயணிக்கறோம்.பசங்க செட்டில் ஆனதும் நமக்கு அவங்க அவங்களுக்கு நான்னு வரும் போது எங்க ஆரம்பிக்கன்னு தெரியலை.அதனால தான் உரசல்கள் சலசலப்புகள் ..சண டைன்னு ஏதாவது இருக்கா சொல்லுங்க”

“சண டை எல்லாம் இல்ல.இத்தனை வருஷம் அப்புறம் இப்போ என்ன இருக்கு சண்டைக்கு.பசங்க அவங்க வழி பார்த்துகறாங்க.நமக்கு நம்மாள முடிஞ்சத பண்ணிட்டு அமைதியா இருக்க வேண்டியது தான்”

“சரியா சொன்னீங்க ராகவன். ஆனா அவங்க உலகம் இவ்வளவு சிம்பிள் இல்ல.பசங்களுக்கு வாழ்ந்த பிறகு இப்போ தனக்குன்னு வாழ நேரம் வந்திருக்கு அதுல நம்மை இணைக்க ஆசை படறாங்க.பாதை மாறி போச்சு தான் ஆனா பயணம் ஒரு இடம் நோக்கி தானே.நாம நம் உலகம் விட்டு வந்தே மறுபடி உனக்கு நான் இருக்கேன்னு அவங்க கூட நிற்கனும்.சின்ன சின்ன சந்தோஷங்கள் சின்னசின்ன செல்ல சண்டைகள்  எல்லாம் நிறம்பி மறுபடி ஒரு வாழ்க்கை நமக்காக மட்டும் வாழனும்.நினைவுகள் பகிர்ந்து கிட்டு அன்பு பரிமாறி சின்ன இடைவெளி விட்டு ஒரு நல்ல நண்பனா புருஷனா பயணிக்கனும்.இதை விட என்ன இருக்கு சொல்லுங்க.”

நிஜ உறக்கத்திலிருந்து எழுப்புவதாக இருந்தது அவர் வார்த்தைகள்.விஜயா..அவள் என வாழ்வில் நுழைந்து எவ்வளவோ செம்மை படுத்தி இருக்கிறாள்.உண்மையில் அவள் ஆசைகள் எல்லாம் மறைத்துக்கொண்டு தன் குடும்பத்திற்காக கனவுகள் பல கலைத்திருக்கிறாள்.அவளை என்றுமே நான் உதாசீனப்படுத்தியது இல்லை ஆனால் அவளை நெருங்கியதும் இல்லை.எனக்காக இவ்வளவு நாள் கொடுத்த அவளுக்காக இனி இருக்கும் நாட்கள் நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.