(Reading time: 14 - 27 minutes)

 " அம்மா! அடுப்பிலே குக்கர் விசில் அடித்து உன்னை கூப்பிடறது, அதற்கு பதில் சொல்லிட்டு வாம்மா! நான் கடைக்குப் போய், கறிகாய் வாங்கிண்டு வரேன்!"

 கையில் பையுடன், சிவா எனும் சிவானந்தம் வெளியே சென்றான்.

 " இதப் பாருங்கோ, உங்களுக்கு வர வர புத்தியே இல்லை....நாம பெற்ற பிள்ளையை இப்படியா நாலுபேர் நடுவிலே திட்டுவது? ........"

 " பத்மா! நான் மட்டும் சந்தோஷமாகவா அவனை திட்டறேன்? மனசு வெதும்பி வார்த்தை வெடிக்குதுடீ!"

 " சரி சரி, அவன் பத்தாவது பாஸ் பண்ணிட்டான்,, மேற்கொண்டு அவனை படிக்கவைக்கப் போறீங்களா, இல்லே, அவனுக்கு படிப்பு வரலைன்னு வேலைக்கு அனுப்பப் போறீங்களா?"

 " பத்மா! ஏன்டி என் வயிற்றெரிச்சலை கிளப்பறே? இந்தப் பத்தாம் க்ளாஸ் பாஸ் பண்ணவே, ரெண்டு வருஷமா படையெடுத்தான், எதை நம்பி இவனை காலேஜிலே சேர்க்கிறது? ஏதாவது கோடாரி அடிக்கிற வேலைக்குத்தான் அனுப்பணும், அதுக்குக்கூட, பயிற்சி வேணும், இல்லேன்னா தன் காலிலேயே போட்டுண்டு நொண்டிண்டு வந்து நிப்பான், நம்ம முன்னாடி! அந்த கண்றாவியை வேற பார்க்கணுமா......."

 பத்மா 'சிவசிவா'என்று காதைப் பொத்திக்கொண்டாள்.

 " பத்மா! நாம பூர்வஜென்மத்திலே செய்த பாவம்டீ! இப்படியொரு புள்ளே பொறக்கணும்னு தவம் கிடந்ததை நினைச்சா, தூக்குப் போட்டுக்கலாம் போல இருக்குடீ......!"

 " சரி சரி, அவன் கடைக்குப் போய்ட்டு திரும்பிவர நேரமாயிடுத்து, சத்தம் போட்டு பேசாதீங்கோ, அவன் மனசு வேதனைப்படும்........"

 " சொன்னாலும் சொன்னே, இப்படியொரு கற்பனையை! என்னிக்காவது அவன் இதுவரையிலும் யாரிடமாவது கோபம் கொண்டோ, வருத்தப்பட்டோ, ஆத்திரப்பட்டோ, பார்த்திருக்கியா, இந்த இருபது வருஷத்திலே!"

 " ஆமாங்க, யார் எது பேசினாலும், திட்டினாலும், கோபம் கொண்டாலும், சிவா சிரிச்சிண்டே நகர்ந்துடுவானே தவிர, பாதிக்கப்பட்டதை நான் பார்த்ததே இல்லீங்க! அதிசயமா இருக்குங்க!"

 " பைத்தியம்! பைத்தியம்! எதிராளி பேசறதை புரிஞ்சிக்க அவனுக்கு நேரமாகும்டீ, புரிஞ்சபிறகுதானே, வருத்தமோ, கோபமோ படமுடியும்! இவனை விட்டாலும், நமக்கு வேற வாரிசில்லை! இதெல்லாம் நினைச்சா, வேதம் ஓதுவது, சொல்லிக் கொடுப்பது, கடவுளை கும்பிடறது, எல்லாத்தையுமே, விட்டு ஒழிச்சிடலாம்னு தோணுதுடி!"

 " என் பிள்ளைக்கும் ஒரு காலம் வரும், அவனும் எல்லாரையும் போல, கௌரவமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.