(Reading time: 14 - 27 minutes)

 "துயரம் இல்லாமல், குறை இல்லாமல், நன்றாக சாப்பிட்டு, உறங்கி, உடுத்தி, குடும்பத்தோடு குதூகலமா இருக்கிறதுதான் சந்தோஷம்!"

 " நீ சொன்னபடி நம் மூவரிலே யார் இருக்கான்னு நிதானமா யோசித்துச் சொல்லு!"

 "நானும் அப்பாவும் உன்னைப் பற்றின கவலையோட இருக்கிறோம், சந்தோஷமே இல்லை!"

 " ஆனா இந்த தீவட்டி, எதுக்கும் பயன்படாதவன், உதவாக்கரைன்னு, அப்பா ஒரு நாளைக்கு ஆயிரம் முறை வசை பாடுகிற நான் சந்தோஷமாக இருக்கிறேன், ஒப்புக்கிறியா?"

 " ஆமாம்டா, சிவா! நீ சிரிச்சிண்டே இருக்கே, கோபம் கொள்வதேயில்லை, வருந்துவதே கிடையாது, குறை எதுவுமே கிடையாது, சாந்தமாயிருக்கே, எப்படிடா?"

 " நீங்க ரெண்டு பேரும் மூணுவேளை தினமும் எந்தக் கடவுளை கும்பிடறீங்களோ, வேதம் படித்து பிறருக்கும் சொல்லித் தரீங்களோ, அந்தக் கடவுளை, நீங்க முழுவதும் நம்பவில்லை, நான் நம்புகிறேன், அதுதான் காரணம்!"

 " என்னடா உளர்றே? நாங்க கடவுளை நம்பலையா?"

 " ஆமாம், ஆமாம், ஆமாம், நூறு முறை சொல்வேன்! என்னைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படறீங்க? என்னைப் பெற்றதனாலே, என் வளர்ப்பு, படிப்பு, ஒழுக்கம், எதிர்காலம் எல்லாமே நீங்க நினைத்தபடி நடக்கணும்னு ஆசைப்படறீங்க, அந்த ஆசை நிறைவேறாதோன்னு சந்தேகம் வரும்போதெல்லாம் ஆத்திரப்படறீங்க, கோபத்திலே உங்களையே நீங்க இழந்துடறீங்க, நீங்க ஆசை ஆசையாகப் பெற்ற ஒரே பிள்ளையை உதவாக்கரைன்னு வாய் கூசாமல் வெறுக்கிறீங்க, காரணம் நீங்க நினைக்கிறபடி நான் படிக்கலை, கடவுளை கும்பிடலை, நடந்துக்கலை, வாழலைன்னு உங்களுடைய அகம்பாவம், 'தான்' எனும் ஈகோ, தவிக்குது, ஒரே ஒரு நிமிஷம் என்னிக்காவது நீங்க அந்தக் கடவுள்தான் எல்லா ஜீவராசிகளையும் படைத்து, காத்து, வளர்த்து வருகிறார். 'அவன் அன்றி ஓரணுவும் அசையாது'ன்னு ஏட்டிலே படித்தாலும், வாழ்க்கையிலே, யதார்த்தத்திலே நம்பலை!"

 "சிவா! நீ பேசற ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடியா சுளீர்னு மனசிலே விழுதுடா......"

 " அப்பாவும் நீயும் நான் நன்றாகப் படித்து அமெரிக்கா போய், கௌரவமா வாழணும்னு நினைத்து தினமும் புலம்புறீங்களே, அதுவா வாழ்க்கையின் லட்சியம்னு வேதங்களும் சாஸ்திரங்களும், சொல்லுது! ஆதிசங்கர பகவத்பாதர் தனது பஜகோவிந்தம் பாடலிலே எத்தனை படித்தாலும் அது மனிதன் கரையேற உதவாதுன்னு எழுதியிருக்கிறார்னு அப்பா தன் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறாரே தவிர, தான் நம்பவில்லை, ஆனா அதை ஓரமா இருந்து ஒட்டுக்கேட்ட நான் நம்பறேன்,...."

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.