(Reading time: 10 - 19 minutes)

சிறுகதை - வேரிற் பழுத்த பலா! - ரவை

ங்கரன் தன் சைக்கிளை சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில், "ஐயா!" என்ற குரல் கேட்டது!

 தலை நிமிர்ந்து பார்த்த சங்கரன், அந்தப் பெண்ணின் எழிலில் மயங்கி வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

  " ஐயா!"

  "சொல்லும்மா! யாரை பார்க்கணும்? என்ன வேணும்?"

  " ஒரு வேலை வேணும், சிபாரிசு செய்யமுடியுமா?"

சங்கரன் திடுக்கிட்டு, " வேலையா? என்ன வேலை?"

  " எந்த வேலையானாலும் பரவாயில்லே, பிழைக்க வழி யில்லே...."

 " ஒரு நிமிஷம்!" என்று சொல்லி அரை நிமிஷத்தில் சைக்கிளை ஓரமாக நிறுத்தி விட்டு, அவளை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

 " உள்ளே வாங்க! உட்காருங்க! விவரமா சொல்லுங்க!"

அவள் பேசுமுன், மீண்டும், 'ஒரு நிமிஷம்' என்று அவளிடம் கூறிவிட்டு, 'வாணி!' என உள்ளே பார்த்து குரல் கொடுத்தான்.

  வாணியும் வந்து சேர்ந்து கொண்டாள். " வாணி! இந்தப் பெண் வேலை கேட்டு வந்திருக்கா, விவரம் கேட்டேன், சொல்லுவா, நீயும் கேளு!"

  வாணி அமர்ந்தாள். " நான் வெளியூரிலிருந்து வந்து, இந்த ஊரிலே மூணு வருஷமா வேலை செய்து சம்பாதித்து, அந்தப் பணத்திலே ஊரிலிருக்கிற குடும்பம் பசியாற, தேவையான பணத்தை அனுப்பிவிட்டு, மிச்சத்திலே நானும் இங்கே வாழ்ந்தேன், திடீர்னுநான் வேலை செய்த கடையை, இந்த ஊரடங்கு சட்டத்தினாலே மூடிட்டாங்க! எப்போ திறக்கப் போறாங்கன்னு தெரியலே! பிழைக்க வேலை வேணும்!......."

 " என்ன கடையிலே வேலை செய்தே? எவ்வளவு, மாத சம்பளம்?"

   " நகைக்கடையிலே! முதலாளியின் சொந்த ஊர் விருதுநகர்! நானும் அந்த ஊர் பெண்! என் குடும்பத்தை முதலாளிக்கு தெரியும்...... அதனாலே, எனக்கு தங்க, இடம் கொடுத்து, சம்பளம் பதினைந்தாயிரம் தந்தார்!

    நான் நாள் முழுதும் கடையிலே வேலை செய்வேன், ஏன்னா, வேலை நேரத்திலே, அப்பப்போ, பசி தீர்க்க, ஏதாவது கொடுப்பாங்க!"

   " என்ன படிச்சிருக்கே?"

   " பன்னிரண்டாம் வகுப்புவரை படித்தேன், மேலே படிக்க வசதியில்லே.."

 " அது சரி, இப்ப ஏன் வேலை தேடறே? முதலாளி சம்பளம் தரமாட்டாரா?"

 " கடையை மூடி வருமானம் கிடைக்காதபோது வேலை செய்கிறவங்களுக்கு சம்பளம் தர

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.