(Reading time: 17 - 33 minutes)

வேலையின் பளுவை தாங்க முடியாமல் முன் இருமுறை மெல்லிய மாரடைப்பு வந்தபொழுது கூட யாரிடமும் சொல்லவில்லை அஷோக். இந்நிலையில், ஒரு நாள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருக்கும் பொழுதே மூன்றாவது முறையாக மாரடைப்பு வந்து இறந்தார்... என்றும் போல் காலையில் குளித்து அஷோக்கின் பார்வையில் கன்னம் சிவக்க காத்திருந்த சாருவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. என்றும் பௌர்ணமியாய் பிரகாசிக்கும் முகம் அன்று முதல் அம்மாவாசை போல் ஒளி இழந்தது... எங்கு திரும்பினாலும் அஷோக்கின் நினைவே வந்து தாக்க தனிமை இன்னும் பயமுடுத்தியது... உறவினர்களின் வருகையும் அவர்களின் ஆறுதலும் எந்தவித மாற்றத்தையும் தரவில்லை... தன்னை மதி என்று அழைக்க இனி அஷோக் வரபோவது இல்லையே என்று நினைக்கும் போதெல்லாம் மனம் கதறியது... சாருவின் தனிமையை ரதி புரிந்துக்கொள்ளவும் இல்லை, அதை துரத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

கல்லூரியில் சேரவிருக்கும் மகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று திக்கு தெரியாமல் சாரு குழம்பினாள். அஷோக் போட்டிருந்த காப்பிட்டு திட்டத்தின் மூலம் கொஞ்சம் பணம் வந்தது, இத்தனை நாட்கள் அசோக்கின் இரத்தத்தை உறுஞ்சிய கம்பெனியில் இருந்தும் கொஞ்சம் காசு கிடைத்தது... எல்லாவற்றையும் சேகரித்தவள் ரதியை அழைத்துக்கொண்டு சென்னை சென்றாள். வீடு, ரதிக்கு கல்லூரி என எல்லாம் சரி செய்தபின்பு தான் இனி தான் என்ன செய்வது என்ற குழப்பம் அதிகரித்தது. நாட்கள் செல்ல செல்ல அழுகையும் வெறுத்துப் போனது, வாழ்கையை கடத்த சம்பாதிக்க வேண்டும் என்று உணர்ந்தாள் சாரு. தான் சிறுவயதில் தாயிடம் கற்றுக்கொண்ட அலங்கார பொருட்கள் செய்யும் முறையை கையில் எடுத்தாள், தன்னால் முடிந்த அளவிற்கு தனிமையை துரத்தினாள், தைய்யல் களையும் தெரிந்திருக்க அதுவும் கை கொடத்தது... இவ்வாறு உளைத்தவளுக்கு தன் பெயரை நிலைநிறுத்த 2 வருடங்கள் ஆனது.. வீட்டிலேயே தையல் மிஷின்கள் வைத்து சிலருக்கு வேலை தந்தாள்... பயத்தில் குறுகிய மனம் பக்குவப்பட்டது...    

ன் தொழிலை ஒரு நிலைக்கு கொண்டு வந்துபின் ரதியை கவனித்தவளுக்கு அவளிடம் மாற்றம் இருப்பதை உணர்ந்தாள்... ரதியை சுற்றி நட்பு வட்டாரம் அதிகரித்ததெல்லாம் சாரு அறிந்ததே, எப்போதும் வாயாடிக்கொண்டே இருக்கும் மகள் தன்னை மறந்து இருப்பதை கவனித்த சாருவிற்கு சந்தேகமாக இருந்தது... அவளை சுற்றி இருந்த நட்பு வட்டாரம் குறைந்தது போல் உணர்ந்தாள்... தோழியாக அவளிடம் பேசவும் தடுமாற்றமாக இருந்தது.. என்றும் போல் தன்னை தவிர்ப்பாலோ என்று சங்கடப்பட்டு ரதியிடம் என்னவென்று கேட்கவும் தயங்கினாள்...               

ஒரு நாள் மாலை பொழுதில் வானத்தை வேடிக்கை பார்த்தவாறு அமர்ந்து இருந்தாள் சாரு... தன்னுடைய சூரியன் தன்னைவிட்டு நீங்கியதால் அழுது அழுது வான்மகளின் கண்கள் சிவந்து இருப்பதாய் தோன்றியது சாருவிற்கு...

“அம்மா...” என்று ரதி அழைக்க அந்த அழைப்பில் இருந்த சோகத்தின் சாயலில் நிகழ் காலத்திற்கு வந்தாள் சாரு.

“என்னடா?” என்று எழுந்து ரதியின் கரங்களை சாரு பற்றிக்கொள்ள... அவளின் விழிகளை பார்த்துக்கொண்டு இருந்த ரதியால் இதற்கு மேலும் தன்னால் முடியாது என்று சாருவின் மீது சாய்ந்து அழுது தீர்த்தாள்.. ரதியின் மனபாரம் குறையும் வரை அழுகட்டும் என்று அவளது தோளை தடவியவாறு அமர்ந்து இருந்தாள்... தன் மகள் முன்பு போல் இல்லை என்று அறிந்தும் அவளிடம் தாமே பேசாமல் இருந்ததற்கு அப்போது வருந்தினாள்... ஒரு வழியாக தன்பாரம் தீர அழுது முடித்தவள் இப்போது சாருவிடம் எப்படி தன் பிரச்சனையை சொல்வது என்று குழம்ப அதை பற்றி சாரு ஒருவார்த்தை கூட கேட்கவில்லை.

அவளது தடுமாற்றத்தை கவனித்தவள் “என்ன ரதி ஏதாவது சாப்பிடுறியா? வா டீ போட்டு தரேன்” என்று கேட்டவாறு அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள்ச் சென்றாள். அவள் செய்கையில் ஆச்சர்யபட்ட ரதி தன் மனதை சாருவை விட வேறு யாரும் சரியாக அறிந்துக்கொள்ள முடியாது என்பதை போகப் போக உணர்ந்தாள். கல்லூரி விடுமுறை நாட்கள் துவங்கிய நேரம் அது, வெளியே எங்கும் செல்ல பிடிக்காமல், யாருடனும் பேச விரும்பாமல் தனிமையை விரும்பினாள் ரதி.. ஆனால் சாரு அவளை தனியாக விடுவதாக இல்லை. தன் வேலைகள் நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றாள், அவ்வப்போது சமையல் கத்து தந்தாள், தான் அறிந்தவற்றை ரதியிடம் பகிர்ந்துக் கொண்டாள், நாட்கள் செல்லச் செல்ல நடப்பு விஷயங்கள், பொழுது போக்கு, அரசியல் என்று எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டனர் இருவரும். தன் தாய்க்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணி ஒதுக்கிய நாட்கள் மனதில் தோன்ற அவமானமாக கருதினாள் ரதி... சாருவின் அருகில் கவலைகளை மறந்தாள். இருவரும் சேர்ந்து செல்லாத இடம் இல்லை என்பதற்கு ஏற்ப சுற்றினர்.

“அம்மா...” சமையல் அறையில் அடுப்பு மேடையில் அமர்ந்தவாறு பேச்சை துவங்கினாள் ரதி.

“என்னடா?” என்று சமைத்துக்கொண்டே பேசினாள் சாரு.         

“நான் ஏன் அன்னைக்கு அழுதேன்னு கேட்க மாட்டிங்களா?” என்று மெதுவாக பேச்சு துவங்கியது.

சிறிது கண்கள் உயர்த்தி ரதியை பார்த்துவிட்டு மீண்டும் சமையலை தொடர்ந்தவாறு “நான் ஏன்டா கேட்கணும் உனக்கு எப்போ சொல்ல விருப்பமோ அப்போ சொல்லு” என்று புன்முறுவலோடு சொன்னார்.

அவளையே ரதியின் கண்கள் தொடர, “நான் ஒரு பையனை காதலிச்சேன்மா, அவன் எங்கிட்ட பழகும் போதெல்லாம் அப்பாவே என்கூட இருக்குற மாதிரி இருக்கும்மா.. அவனை காதலிக்க ஆரம்பிச்ச நாள்ல இருந்து என் நண்பர்களோட நெருக்கமா இருக்குறது கொறஞ்சுது, போகப் போக சுத்தமா அவங்ககிட்ட பேசுறது நின்னுப்போச்சு. அப்போவெல்லாம் அவன் மட்டும் போதும்னு தோனுச்சு அதனால மத்தது கண்ணுக்கு தெரியலை அப்பறம் ஒரு நாள்...” என்று பேச்சை நிருத்தியவளின் கண்களில் நீர் திரையிட்டது, விசும்பல் அதிகரிக்க அழுகை அதிகமானது... சாரு சமாதானம் செய்யவில்லை அவளே தன்னை கட்டுபடுத்தட்டும் என்று பார்த்திருந்தாள், சிறிது நேரம் அமைதியாக இருந்த ரதி மீண்டும் தொடர்ந்தாள். “என்னை மறந்திடு நம்ம பிரிஞ்சிடலாம்னு சொல்லிட்டு போயிட்டான்மா, நானும் பல நாள் காரணம் கேட்டுப் பார்த்தேன், ஆனால் என்னை பார்க்கவே பிடிக்கலைன்னு சொல்லிட்டு போயிட்டான். நான் காதல்னு சொன்னப்ப கிண்டல் பண்றதுக்காகக் கூடி இருந்த ஃப்ரிண்ட்ஸ் எல்லாம் கஷ்டம்னு வரப்போ இல்லைமா எனக்கு இந்த தனிமைய தாங்க முடியலை... அப்பா திரும்பி கெடச்ச மாதிரி இருந்த உணர்வு பாதியிலேயே காணாம போயிடுச்சுமா அப்பா மாதிரியே...” என்று கூறி ரதி அழுக அஷோக்கின் நினைவில் சாருவின் விழிகளிலும் நீர் திரையிட்டது... தலை தாழ்த்தி ரதி அழுக சாரு அவளின் தலையை தடவி கொடுத்தாள், மீண்டும் ரதி தொடர்ந்தாள், “அப்புறம் ஒரு நாள் அவன் இறந்துட்டான்னு கேள்வி பட்டுப்போனேன், அவனுக்கு இந்த முடிவு ஏற்கனவே தெரிஞ்சு இருக்கும்மா அதுனாலதான் என்னை ஒதுங்கி போக சொல்லி இருக்கானு அப்பத்தான் புரிஞ்சுகிட்டேன்.. அப்பா மாதிரி பாசம் காட்டுறானேன்னு நினைச்சேன், அப்பா மாதிரி பாதிலேயே விட்டுட்டு போயிட்டான்மா” என்று அவனது பிரிவின் வலி தாங்காமல் சாருவை அனைத்து அழுக ஆரம்பித்தாள்..  

சிறிது நேரம் அழுகை அடங்க சாரு சமாதானம் செய்தாள். “எந்த உறவுமே கடைசி வரைக்கும் இருக்காது ரதி.. எல்லாத்துக்கும் ஒரு இறுதி கோடு உண்டு. நம்ம மேல பாசமா இருக்கவங்க,  கூட இருக்கும் போது நம்ம வருத்தபடுரதை எப்படி தாங்க மாட்டங்களோ அதேபோல தான் அவங்க இறந்தபின்பும் நம்ம வருத்தபடுரதை அவங்க விரும்ப மாட்டாங்க. அவங்க இறந்த பிறகும் அந்த நிம்மதியை அவங்களுக்கு தராமல் இருந்தா நல்லாவா இருக்கும்? இன்னும் வாழ்க்கைல பார்க்க நிறைய இருக்கு ரதி இப்பயே ஒடஞ்சு போயிடாத. உங்க அப்பா நம்மளை விட்டு போனாலும் என்கூடவே இருக்குறதாகதான் நான் நினைச்சுக்குவேன் அதுதான் இன்னமும் எனக்கு வாழ நம்பிக்கை தருது. உனக்கு என்ன கஷ்டம்னாலும் ஒரு தோழ்... ஒரு அம்மாவா தோள்தர நான் இருக்கேன் கவலையேபடாத...” என்று அவள் கண்களை துடைத்து சிறிது நேரம் தூங்க சொன்னாள்.

சாரு பேசுவதை கேட்க கேட்க மனம் லேசாவதை உணர்ந்தாள் ரதி. ஆனால் சாரு தோழி என தொடங்கி, அதை அம்மா என்று மாற்றியதையும் கவனிக்க மறக்கவில்லை. ஒரு தோழி போல் என்று கூறகூட யோசிக்கும் அளவிற்கு தன் தாயை புண்படுத்தி உள்ளோம் என்று தோன்ற மனம் வலித்தது. தான் இப்போது கடந்து வந்த துன்பத்தை தானே தன் தாயும் கடந்து வந்திருப்பார் அதுவும் பலமடங்கு அதிகமாக, அப்போதெல்லாம் அவருக்கு ஒரு துணையாக இருக்க தவறியதை எண்ணி கவலைபட்டாள். ஒரு முடிவிற்கு வந்தவளாக சாருவிடம் சென்றாள். “அம்மா வாங்க மாடில கொஞ்ச நேரம் உட்காந்திருக்கலாம்” என்று அழைத்தாள்.. மறுப்பேதும் சொல்லாமல் சாரு சென்றார். மாடியில் நட்சத்திரங்களை வேடிக்கை பார்த்தவாறு சாருவின் மடியில் படுத்திருந்தாள் ரதி. மகளின் சோகத்தை குறைத்த நிம்மதியில் அவள் தலையை கோதியவாறு அமர்ந்து இருந்தார் சாரு.

“அம்மா...”

“ம்ம்ம்ம்”

“அப்பா நம்மை விட்டு போன சோகத்தை ஏன்ம்மா எங்கிட்ட கூட நீங்க எதுவும் பகிர்ந்துக்களை? என்ன ஒரு தோழியா நீங்க நினைக்களையா?”

“அப்படியெல்லாம் எதுவும் இல்லைடா” என்று அந்த நாட்களின் நினைவில் பேசாமல் இருந்தாள்.

“என்கிட்ட நெருங்கி பழககூட நான் உங்களை விடலையேம்மா” என்று கூறியவளின் குரலில் வருத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ச்சே அப்படியெல்லாம் சொல்லாதடா, நீ மனசறிஞ்சு எதுவும் செய்ததில்லைடா” என்று அவளது கைகளை பிடித்துகொண்டாள் சாரு.

சாருவின் அருகில் அமர்ந்த ரதி, அவளது கண்களை நோக்கி “சாரி மதி..” என்று கெஞ்சுதலாக கேட்க, சாருவின் கண்கள் ஒரு நொடி மின்னியது அசோக்கிற்கு அடுத்து தன்னை பாசமாக மதி என்று ரதி அழைப்பால் என்று ஒரு நாளும் அவள் நினைத்ததில்லை. மகிழ்ச்சியும் அதிர்ச்சியும் சேர்ந்து வர ஆச்சர்யத்தில் ரதியையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.

“ஃப்ரிண்ட்ஸ்?” என்று ரதி கை நீட்ட

மகிழ்ச்சியின் மிகுதியில் கண்கள் கலங்க ரதியை கன்னத்தோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் சாரு.. ரதி அவளது மதியின் கழுத்தோடு சேர்த்து அனைத்து friends forever என்று கூறி கன்னத்தில் இறுக ஒரு முத்தம் தந்தாள்....

மண்ணில் கால் வைக்க உயிர் தந்து தாயானவள், மனதில் உள்ள சுமை இறக்க தோள் தந்து தோழியானாள்... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.