(Reading time: 10 - 20 minutes)

 

மாலை ஐந்து மணிக்கு ரிப்போர்ட் வருமாம். நான்கு மணியிலிருந்தே மருத்துவமையில் தவம் கிடந்தான்.

ரிப்போர்ட்டை வாங்கியவனின் கண்கள் குளம்க்கட்டிக்கொண்டன.

இறைவா! உனக்கு ஒரு கோடி நன்றிகள்.

அவனை கவனித்து விட்டு ரஞ்சனியை அழைத்தாள் சுதா. ஒண்ணுமில்லடி உனக்கு.. உன் புருஷன்தான் பாவம் இங்கேயே ரிப்போர்ட்டுக்காக தவம் கிடந்தது வாங்கிட்டுப்போறார். பார்க்க பாவமா இருக்கு.

'இவனையா வேண்டாமென்று சொன்னேன்' மனம் அவனை பார்த்துவிட வேண்டியது.

ஒரு வாரம் கழிந்திருந்து. ஸ்ரீராமின் மனம் அவளையே சுற்றியது. அவளை அழைத்து பார்த்து விடலாமா?

ஒரு வேளை அவள் அழைப்பை ஏற்க வில்லை என்றால்.... ஏனோ அதை தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லையென்று தோன்றியது.

'எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ போ, போன்னு விரட்டினாலும் உன்னை விட்டு போக மாட்டேன்' நீதானே .சொன்னாய்.?

எப்படி போனாய் என்னை விட்டு ?

னம் அலைபாய்ந்துக்கொண்டிருக்க, கை டி.வியை திருப்பிக்கொண்டிருக்க அதில் ஒலித்தது அந்த பாடல்

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ?

இமைக்காமல் அதையே பார்த்துக்கொண்டிருந்தான் ஸ்ரீராம் .'உன்னை பார்க்கணும் போலே இருக்கு ரஞ்சனி.'

அதே நேரத்தில் டிவியை திருப்பிக்கொண்டிருந்த ரஞ்சனியின் கண்களும் அதே பாடலில் நிலைத்தது.

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்

கொஞ்ச நேரம் நீயும் காத்திரு

வரும் பாதை பார்த்திரு

புன்னகையுடன் கலந்த ஒரு பெருமூச்சு எழுந்தது அவளிடம். சீக்கிரமே உன்னை பார்க்க போறேன் ஸ்ரீ.

சரியாய் அந்த நேரத்தில் அவனது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது ஸ்ரீராமுக்கு.

பேசியவன் அவன் தம்பி கார்த்திக்.

அடுத்த வாரம் புதன் கிழமை எனக்கு நிச்சியதார்த்தம் என்றான் கார்த்திக்.

ஹேய்! கங்ராட்ஸ்.! யாரு பொண்ணு?

'பொண்ணு பேரெல்லாம் சொல்லகூடாது.'. என்றான் அவன்.

ஏன்டா? முன்னாடி காலத்திலே பொண்ணுங்கதான் புருஷன் பேரை சொல்லமாட்டங்க இப்போ நீங்க ஆரம்பிச்சிடீங்களா?

ஆமாம் புது ரூல் போட்டிருக்காங்க. நிச்சியதார்த்தம் உங்க ஊர்லதான். ஹோட்டலின் பெயரை சொன்னான்.

நீ வருவே இல்லையா ஸ்ரீராம்.? கேட்டான் கார்த்திக்.

ஏனோ தயங்கினான் ஸ்ரீராம். அங்கே போனால் இவன் கதை விவாதிக்கப்படுமென்று தோன்றியது.

பார்க்கலாம் டா. கல்யாணத்துக்கு கண்டிப்பா வரேன்.

அப்படியா? சரி. ஆக்சுவலா பொண்ணு பேர்தான் சொல்லக்கூடாது. அவங்க அக்கா பேர் சொல்லலாம். அவங்க அக்கா பேரு ஸ்ரீ..........ரன்...ஜ..னி

என்........னது? எழுந்தே விட்டான் ஸ்ரீராம்.

'வரவேண்டாம். நீ நிச்சயத்துக்கு வரவே வேண்டாம். வெச்சிடறேன்.' சிரித்தபடியே அழைப்பை துண்டித்தான் கார்த்திக்.

நம்பவே முடியவில்லை அவனால். என் தம்பிக்கும் அவள் தங்கைக்கும் நிச்சியதார்த்தமா? நிஜமாகவே எதிர்பார்க்கவில்லை அவன்.

ரு வாரத்தை பிடித்து தள்ளி நகர்த்தினான் ஸ்ரீராம். அந்த நாளும், நிச்சியதார்த்தம் நடக்க போகும் அந்த மாலையும் வந்தே விட்டது.

அவன் அப்பாவும், அம்மாவும் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்களுடன்  ஹோட்டலுக்கு போவதாக சொல்லிவிட்டிருந்தார்கள்.

தனது இரு சக்கர வாகனத்தில் கிளம்பினான் ஸ்ரீராம். இத்தனைக்கு பிறகும் அவளை எப்படி பார்ப்பது? என்ன பேசுவது? ஒரு தயக்கம் அவனை நெருடிக்கொண்டே இருக்க, அதையும் மீறி அவளை பார்த்தே ஆகவேண்டும் என்ற தவிப்பு அவனை செலுத்தியது,

காண வேண்டும் சீக்கிரம் என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ என் ஆசை காவியம்

அவன் வாகனத்தை நிறுத்திய நேரத்தில், மாடியிலிருந்த அறையிலிருந்து  அவனை பார்த்துவிட்டாள் ரஞ்சனி. மனம் நிறைந்துதான் போனது.

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா?

கண்ணாலனே நல் வாழ்த்துக்கள் என் பாட்டில் சொல்லவா

ஓடி சென்று அவன் தோள் சேர்ந்து விடவா? எப்படி? எல்லார் முன்னாலும் எப்படி?

ஏன்.? கீழே இருப்பது என் கணவன் தானே? ஏன் இவ்வளவு தயங்குகிறேன்.?

எல்லார் முன்னாலும் உன்னை பிடிக்கவில்லை என்று சொல்ல முடிந்த என்னால், இன்று உன்னை பிடித்திருக்கிறது என்று ஏன் சொல்ல முடியவில்லை.

யார் அழைத்தும் கீழே வராமல், மேலேயே யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.

மேடை களைக்கட்டியிருந்த போதிலும் மேடையின் கீழே அமர்ந்திருந்தவனின் பார்வை எங்கெங்கோ சுற்றிக்கொண்டிருந்தது.

எங்கே போனாள் இவள்? ஏன் வரவில்லை. மனம் தளர்ந்தே போனது.வரமாட்டாயா ரஞ்சனி?

கனிவாய் மலரே உயிர் வாடும் போது ஊடலென்ன பாவமல்லவா?

காத்திருந்து  பொறுமை இழந்தவனாய் மேடைக்கு சென்று அங்கே நின்றிருந்த அவள் தங்கை கவிதாவிடம் கேட்டான்.

உங்க அக்கா எங்கே கவிதா?

ஒரு நொடி அவள் புருவங்கள் உயர்ந்து இறங்க, அருகே இருந்த கார்த்திக்கின் கண் அசைவை புரிந்துக்கொண்டு சொன்னாள்

எங்கக்கா இங்கே வரவே இல்லையே. வீட்டிலேயே ரெஸ்ட் எடுத்திட்டிருக்கா.

நம்ப முடியாமல் பார்த்தான் ஸ்ரீராம் 'நிஜமாவா?'

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.