(Reading time: 25 - 49 minutes)

சரி.  நானும் அம்மாவும் சேர்ந்து உனக்கு கல்யாணம் பண்ணிடலாம்ன்னு முடிவு பண்ணி இருக்கோம் ராதா”

“என்னப்பா இது இப்படி சடார்ன்னு சொல்றேள், எனக்கு கல்யாணத்துல எல்லாம் இஷ்டம் இல்லைப்பா.  என்னை இப்படியே விட்டுடுங்கோ.  Infact எனக்கு வேலைக்குக் கூடப் போக வேண்டாம்.  நான் ஆத்துலேயே பூஜை பண்ணிண்டு உங்க கூடவே இருக்கேனே. அம்மாகிட்ட காம்பஸ் வந்த உடனேயே சொன்னேன்.  அம்மாதான் இல்லை வேலைக்கு போய்த்தான் ஆகணும்.  நீ போனாதான் அப்பாக்கு கொஞ்சமானும் ரெஸ்ட் கிடைக்கும்ன்னு சொன்னா.  அந்த ஒரே விஷயத்துக்காகத்தான் வேலைக்கே ஒத்துண்டேன்.  மத்தபடி எனக்கு இது எதுலயுமே இன்ட்ரெஸ்ட் இல்லைப்பா, ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்கோ”, தன்னை விளக்கி விட்டதாக நினைத்து ராதா பேச.

“என்னடி நினைச்சுண்டு இருக்கே உன் மனசுல பெரிய மீராபாய்னா, சதா சர்வ காலமும் ஸ்வாமியையே  கட்டிண்டு அழுதுண்டு, மரியாதையா அப்பா சொல்றதைக் கேட்டுக் கல்யாணத்துக்கு ஒத்துக்கோ, இல்ல நடக்கறதே வேற.  ஏதோ நான் சும்மா உன்னை மிரட்டறதா நினைச்சுக்காதே. “

“அம்மா என்னைப் புரிஞ்சுக்கோம்மா, என்னால யாரையும் கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதும்மா.  சின்னக் குழந்தைலேர்ந்து எனக்கு தெரிஞ்சதெல்லாம் ஸ்வாமி மட்டும்தான்.  மொதல்ல என்னை பண்ணிக்கறவரும் பாவம். என்னால கல்யாணம் பண்ணிண்டு புருஷன், குழந்தைன்னு சராசரியா இருக்க முடியாது.  கல்யாணம் ஆன ரெண்டாம் நாளே என்னை அவாத்துலேர்ந்து அனுப்பிடுவா”

“ஒரு அறை விட்டா தானா சரியாப் போவேடி  நீ.  ஒரே பொண்ணாச்சேன்னு செல்லம் கொடுத்தது இப்போ எங்களுக்கே ஏழரையா வந்திருக்கு.  இங்க பாரு நீ ஒத்துண்டாலும் ஒத்துக்காட்டாலும் உனக்கு கல்யாணம் பண்றதா தீர்மானம் எடுத்தது எடுத்ததுதான். அதுல எந்த மாத்தமும் இல்லை.  அதனால கன்னா பின்னான்னு பெனாத்தாம சொன்ன பேச்சை கேட்டுண்டு இரு”

அம்மாவிடம் தன் பேச்சிற்கு ஒரு மதிப்பும் இல்லை என்றவுடன் அப்பாவிடம் சென்று, “அப்பா, அம்மாக்குத்தான் புரியலை,  நீங்களானும் சொல்லுங்கோப்பா. என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாதுப்பா.  ப்ளீஸ்ப்பா.  நான் இப்படியே இருக்கேனே. “

“அதெல்லாம் சரி வராது ராதா. நாலு பேர் நாலு விதமா பேசுவா.  மத்தவாளை விடு, உனக்கு ஒரு நல்லது பண்ணாம எங்களால நிம்மதியா இருக்க முடியுமா சொல்லு.  நீ ஒரு அம்மாவா இருந்தா உன் பொண்ணு அப்படியே நிக்கட்டும்ன்னு இருப்பியா சொல்லு.  புரிஞ்சுக்கோமா”, தன்னால் முடிந்தவரை ராதாவை கன்வின்ஸ் பண்ண ஆரம்பித்தார் பார்த்தா.

“எனக்கு உங்க வருத்தம் புரியாம இல்லைப்பா. ஆனால் என்னால மத்தவா மாதிரி இருக்க முடியலையே நான் என்ன பண்றது.   உங்களுக்கு இப்போ அடுத்தவா என்ன சொல்வான்னுதானே கவலை.  நான் வேணா பக்கத்துல எங்கயாவது ஒரு ஆசரமத்துல சேர்ந்துக்கறேன்.  யாரானும் கேட்டா USல வேலை கிடைச்சு போயிட்டான்னு சொல்லிடுங்கோ. உங்களுக்கும் அப்போ கெட்ட பேர் வராது.  சரியாப்பா”, மிகப் சரியான  தீர்வென்று நினைத்து ராதா சொல்ல கடுப்பான அலமு,

“சனியனே வாயை மூடு, துக்கிரித்தனமாவே பேசணும்ன்னு முடிவு பண்ணி இருக்கியா.  இவகிட்ட என்னன்னா பேச்சு.  கொஞ்சி கொஞ்சி பேசிண்டு இருந்தா அவ, அவ எடுத்த முடிவிலதான் இருப்பா.  இங்க பாரு ராதா, இத்தனை நாள் உன்னை உன் போக்குல விட்டாச்சு.  இனியும் அப்படி இருக்கறதா இல்லை.  நீ பெரிய பக்த மீராவாவோ, இல்லை ஆண்டாளாவோ ஆகணும்ன்னு ஆசை எல்லாம் எங்களுக்கு இல்லை.  நீ எங்க பொண்ணு ராதாவாவே கடைசி வரை இருந்தாப் போறும்.  அதனால சொல்றதைக்  கேட்டுண்டு யாரைக் சொல்றோமோ அவனைக் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரு.  அதை விட்டுட்டு சன்யாசியாப் போறேன், ஆசரமத்துல சேரறேன்னு ஏதானும் பெனாத்திண்டு அலையாதே. “

“என்ன அலமு இது, குழந்தைகிட்ட கத்திண்டு.  இன்னைக்குத்தானே அவளுக்கு விஷயம் சொல்லி இருக்கோம், அவளுக்கும் அதை ஜீரணிக்க கொஞ்சம் அவகாசம் கொடு அலமு”

“நீங்க சும்மா இருங்கோன்னா, இவ இன்னும் 20 வருஷம் ஆனாலும் இதையேதான் சொல்லிண்டு இருப்பா.  அதெல்லாம் சரிப்பட்டு வராது.  இன்னும் ஒண்ணு கேட்டுக்கோ ராதா.  நீ சரி சொன்னாலும், இல்லாட்டாலும் உன் கல்யாணம் நடக்கும்.  இப்படியே ஏதானும் பேசி டிமிக்கி கொடுக்கலாம்ன்னு நினைக்காதே, சொல்லிட்டேன். நீங்க இன்னைக்கே பக்கத்தாத்து மாமி சொன்ன தரகரைப் போய்ப் பாருங்கோ.  இவளுக்கு ஏத்தா மாதிரி ஏதானும் ஜாதகம் இருக்கான்னு பாருங்கோ.  இவக்கிட்ட பேசி நேரத்தை வீணாக்காம உருப்படியா வேலைய பார்க்கலாம்”

தன் பேச்சு அப்பா அம்மா இருவரிடமும் எடுபடாததை நினைத்து வருத்தப்பட்ட ராதா, அடுத்து என்ன செய்வது என்று கவலையுடன் யோசிக்க ஆரம்பித்தாள்.  ஒன்றும் தோன்றாததால், அந்த கண்ணனையே கேட்ப்போம் என்று எப்பொழுதும் போல் பூஜை அறையை தஞ்சம் அடைந்தாள்.

10 நாட்களுக்குப் பிறகு

“இங்கப் பாரு ராதா, நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு.  பையன் உன்னை மாதிரியே BE படிச்சிருக்கான். உனக்கு வேலை கிடைச்சிருக்கற அதே கம்ப்யூட்டர் கம்பெனிலதான் வேலை செய்யறான்.  ரெண்டு பேர் ஜாதகமும் நன்னாப் பொருந்தி இருக்கு.  நீ அடுத்த வாரத்துல வேலைல சேரணும்ங்கறதால இந்த வாரமே அவாளை பொண்ணு பார்க்க வரச்சொல்லி அப்பா சொல்லிட்டா. அதனால எந்த மொரண்டும் பண்ணாம ஒழுங்கா வரவாளுக்கு நேரா நடந்துக்கோ.  உன்னோட பூஜையைப் பத்தியும் முழுக்க இல்லாட்டாலும் ஓரளவுக்கு சொல்லி இருக்கோம்.  அவாளும், இந்தக் காலத்துல இப்படி பக்தி ஸ்ரத்தையா பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.  எங்களுக்கு அவ பூஜை பண்றதுல ஒரு ஆட்சேபனையும் இல்லைன்னு சொல்லிட்டா.  இதைவிட அட்ஜஸ்ட் பண்ணிண்டு இருக்கறவா யாரும் கிடைக்கமாட்டா.  அவாத்துல எல்லாரும்  அத்தனை நல்லவாளா இருக்கா”, என்று ஒரே மூச்சில் ஒப்பித்துவிட்டு ராதா அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கும்போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அலமு.

ஐயோ இது என்ன எல்லாமே இத்தனை வேகமா நடக்கறது.  கண்ணா இப்போ நான் என்ன பண்ணுவேன்.  என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்கறாளே, என்ற ஆதங்கத்தில் தன் ஆஸ்தான இடமான பூஜை அறைக்குள் நுழைந்து அழ ஆரம்பித்தாள் ராதா.

வீட்டிற்குள் நுழைந்த பார்த்தா பதறிப் போய் அவளை சமாதானப் படுத்தப் போக உள்ளே இருந்து வெளியில் வந்த அலமு அவரை தடுத்து காரியத்தைக் கெடுக்க வேண்டாம், அவளை இந்த மாதிரி கிடுக்கிப் பிடி போடாவிட்டால் ஒத்துக் கொள்ள வைக்க முடியாது என்று சொல்ல, அவள் சொல்வதும் சரியே என்று ராதாவை மனவேதனையுடன் பார்த்தவாறே உள்ளறைக்குச் சென்றார்.

“ஏண்டி அலமு, ரெண்டு நாளா குழந்தை அழுதுண்டே இருக்காளே, பேசாம இன்னும் கொஞ்ச நாள் விட்டுப் பிடிப்போமா.  எனக்கு அவளை இப்படி பார்க்கக் கஷ்டமா இருக்கு”

“எனக்கு மட்டும் ரொம்ப ஆசையா, அவளை அழவிடணும்ன்னு.  அவகிட்ட கொஞ்சம் கண்டிப்பா இருந்தாதான், வேலைக்கு ஆகும்.  இல்லைன்னா அவ பிடிச்ச பிடிலையே நிப்பா”.  இருவரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தபோது ஏதோ சத்தம் கேட்க இருவரும் படுக்கை அறையை விட்டு கூடத்திற்கு வந்தார்கள்.

“கண்ணா அம்மா அப்பா என்னை புரிஞ்சுக்கவே இல்லையே.  என்னை இப்படி கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கட்டாயப் படுத்தறாளே.  நான் என்ன செய்வேன்.  பக்த மீராக்கும், பாசுரம் பாடின ஆண்டாளுக்கும் உதவின நீ ஏன் எனக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டேங்கற.  என் அம்மா அப்பாவின் மனசை மாத்தறது உனக்கு அத்தனை கஷ்டமா.  இனிமே நீ எனக்கு உதவுவேன்னு நான் உக்கார்ந்து இருந்தா அப்பறம் நான்தான் ஏமாந்து போவேன்.  நீ உன்கிட்ட என்னைக் கூப்பிட்டுப்பேன்னு காத்துண்டு இருக்கறதை விட நானே உன்கிட்ட வந்துடறேன். “, அலமுவும், பார்த்தாவும்  என்ன நடக்கிறது என்று அருகில் வந்து பார்ப்பதற்குள் பழம் நறுக்கும் கத்தியை எடுத்து கிருஷ்ணா வந்துட்டேன் என்றபடியே கையை அறுத்துக் கொண்டாள் ராதா.

“ஐயோ இப்படி பண்ணிட்டியேடி கடங்காரி.  நான் என்ன பண்ணுவேன்.  தெரு மூலைல இருக்கற டாக்டர் ஆத்துல இருக்காரா பாருங்கோன்னா. அவர் இருந்தா உடனே அழைச்சுண்டு வாங்கோ, அப்படி இல்லைனா ஆட்டோவை கூட்டிண்டு வாங்கோ உடனே பக்கத்துல இருக்கற ஆஸ்பத்திரிக்கு போலாம்.”,ராதாவின் கையை ரத்தம் வந்த இடத்திற்கு மேலாக அழுத்திப் பிடித்த படியே கதற ஆரம்பித்தாள் அலமு.

இவர்களின் நல்ல நேரமாக டாக்டர் வீட்டிலேயே இருக்க அவர் உடனே வந்து ரத்தப் போக்கை நிறுத்தி பார்த்தாவைப் பார்த்து, “நல்ல வேளை  கொஞ்சம் தள்ளி வெட்டி இருக்கு.  நரம்பு வர இடத்துல இல்லை.  அதனால பிரச்சனை இல்லை.  இல்லைனா hospital கூட்டிப் போய் இருக்கணும்.  காயம் கொஞ்சம் ஆழமா இருக்கறதால ஒரு TT மட்டும் போட்டு விடறேன், தையல் எதுவும் போட வேண்டாம்.  ஒரு ரெண்டு நாள் கொஞ்சம் கவனமா பார்த்துக்கோங்க.  என்னமா ராதா உன்னை நல்ல பொண்ணுன்னு நினைச்சேனே.  இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்ட.  என்ன லவ் failure?  இந்தக் காலத்துப் பசங்களுக்கு கொஞ்சம் கூட ஏமாற்றத்தைத் தாங்கும் மனப் பக்குவம் இல்லை.  எதுக் கெடுத்தாலும் தற்கொலைதான் தீர்வு மார்திரி செயல்படறாங்க.”, தானாகவே ஒரு முடிவுக்கு வந்து பேசிக் கொண்டே போனார் டாக்டர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.