(Reading time: 25 - 49 minutes)

 

ல்லை டாக்டர், இங்க அது பிரச்சனை இல்லை.  ராதாக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணி அவகிட்ட சொன்னோம்.  அவ அதுக்கு ஒத்துக்காம என்னை இப்படியே விட்டுடுங்க.  கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஒரே அடம்”. என்று கூறியப் பார்த்தாவை வெளியில் அழைத்துச் சென்ற டாக்டர் அவரிடம் தனிமையில்,

“ஏன் வேண்டாம்ன்னு, காரணம் ஏதானும் சொன்னாளா”

“ம் சின்ன வயசுலேர்ந்தே அவளுக்கு ஓவர் பக்தி டாக்டர்.  அதனால நான் இப்படியே கடவுள், பூஜைன்னே இருக்கேன். குடும்ப வாழ்க்கை வேண்டாம்ன்னு சொல்றா. “

“ஓ நீங்க அவ சொன்னதை கேக்காம கட்டாயப் படுத்தினீங்களா.  அதுதான் பொண்ணு இந்த முடிவுக்கு வந்திருக்கு.  எனக்குத் தெரிஞ்சு நீங்க ஒரு நல்ல psychiatrist பார்க்கறது நல்லதுன்னு நினைக்கிறேன்”

“என்னது எம் பொண்ணுக்கு பைத்தியம் பிடிச்சிருக்குன்னு சொல்றேளா டாக்டர். அவதான் காலேஜ் டாப்பர்.  தெரியுமா உங்களுக்கு”,உள்ளறையில் ராதவைத் தூங்க வைத்துவிட்டு வந்த அலமு ஆத்தாமையில் பொரிந்தார்.

“ஏம்மா psychiatrist பார்க்கணும்னாலே பைத்தியமா.  படிச்ச நீங்களே இப்படி பேசினா அப்புறம் படிக்காத ஜனங்களை என்ன சொல்ல.  இப்போ இருக்கற வேலை பளுல ஏகப்பட்ட மெண்டல் ஸ்ட்ரெஸ்.  அதுக்காக இந்த மாதிரி treatment போறது இப்போ சாதாரணமாப் போச்சு.  உங்க பொண்ணை இந்த முறை காப்பாத்தியாச்சு.  இனியும் முயற்சி செய்ய மாட்டான்னு என்ன நிச்சயம்.  நீங்க மன நல மருத்துவரைப் பார்த்தா அவர் கவுன்செலிங் மாதிரி கொடுத்து குணப் படுத்துவார்.  அப்போ அவ மனநிலை மாற கொஞ்சமானும் சான்செஸ் இருக்கு.  அது இல்லாம மிரட்டியோ அடிச்சோ பணிய வைக்கலாம்ன்னு நினைச்சா திரும்ப அவ இப்போ எடுத்த முடிவுக்குத்தான் போவா. எனக்கும் உங்க பொண்ணு வயசுல ஒரு பொண்ணு இருக்காமா.  உங்க கஷ்டம் எனக்குப் புரியுது. ”

“நீங்க கோவிக்காதீங்க டாக்டர். அவளுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. அதுதான் இப்படி பேசிட்டா. உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் யாரானும் இருக்காங்களா “

“ம் என்னோட MBBS படிச்ச ப்ரண்ட் மேல படிச்சுட்டு இப்போ psychiatrist இருக்கான்.  அவன் அட்ரஸ் தரேன்.  நீங்க போய்ப் பாருங்க.  நான் இன்னைக்கே அவனோட பேசறேன்.  இது அவன் கிளினிக் நம்பர்.  நீங்க போன் பண்ணி appointment வாங்கிகோங்க.”, தன் நண்பரின் விலாசம் போன் நம்பரை எழுதிக் கொடுத்து விட்டு விடை பெற்றார் டாக்டர்.

“ஏன்னா, ராதா நன்னாதானே இருக்கா.  இவர் என்னமோ அவளுக்கு பைத்தியம் பிடிசிருக்கரா மாதிரி போய் மனநல மருத்துவரை பார்க்க சொல்றாரே.  இவர் பிரண்ட்டுங்கறதால ஆள் சேர்க்கறாரோ.”, சந்தேகத்துடன் அலமு கேட்க, அவளை ஒரு முறை முறைத்த பார்த்தா,

“உன்னையத்தான் மொதல்ல அந்த டாக்டர்கிட்ட காட்டணும்.  இன்னைக்கு ராதா பண்றதை பார்த்தப்புறமும் அவர் ஏதோ வேணும்ன்னே சொல்றா மாதிரி பேசற.  எனக்குமே நாமப் போய் பாக்கறது நல்லதுன்னு தோணறது.  இந்த வாரத்துலயே  appointment கிடைக்கறதா பார்க்கறேன்.  எத்தனை சீக்கிரம் முடியறதோ அத்தனை நல்லது”, பேச்சு முடிந்தது என்று எழுந்து தன் மகளைப் பார்க்கச் சென்றார் பார்த்தா.  

வாங்க Mr. அண்ட் Mrs. பார்த்தா.  வாம்மா உன் பேருதான் ராதாவா. சிஸ்டர் நீங்க ராதாவைக் கூட்டிட்டு போய் BP  செக் பண்ணிட்டு, மத்த details  எல்லாம் கீடு எழுந்துங்க, நான் வரேன். ராதா நீ அவங்களோட போம்மா.”, நர்ஸ்ரிடம் முடிந்தவரை ராதாவிடம் பேசி நேரத்தை ஓட்டு, என்று சொல்லி அனுப்பினார்.

நர்ஸ்சுடன் ராதாவை அனுப்பி வைத்த டாக்டர் பார்த்தாவைப் பார்த்து “என்னோட ப்ரண்ட் ஓரளவு ராதா பத்தி சொன்னான்.  நீங்க இப்போ சின்ன வயதிலிருந்து அவ எப்படி நடந்துக்கறான்னு ஒரு விஷயம் விடாம சொல்லுங்க.  எனக்கு அவளைப் பத்தி முழுசாத் தெரிஞ்சாதான் ட்ரீட்மென்ட் கொடுக்க வசதியா இருக்கும்.”, என்று சொல்ல, பார்த்தாவும், அலமுவும் அவள் 3 வயதில் ஆரம்பித்து இந்த 21 வயது வரை நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினர். 

 பார்த்தாவிடம் டாக்டர், “Mr. பார்த்தா, நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.  நான் ராதாவை செக் பண்ணிட்டு வரேன்”.

ராதாவை ஆழ்மன உறக்கத்திற்கு உட்படுத்திய டாக்டர் சின்ன வயதிலிருந்து நடந்ததை அவள் வாயால் கேட்டறிந்தார்.  அதன்பின் அவளை எழுப்பி

“ராதா நீ கொஞ்ச நேரம் இந்த ரூம்ல உக்கார்ந்து உனக்கு பிடிச்ச விஷயம் என்னவோ அதைப் பண்ணு.  நான் உன் அம்மா அப்பாட்ட பேசிட்டு வரேன். சிஸ்டர் நீங்க ராதாக்கு துணையா இங்கயே இருங்க.”

“டாக்டர் அங்கிள், எனக்கு கல்யாணம் பண்ண வேண்டாம்ன்னு சொல்லுங்க.  நீங்க சொன்னா அவா கேப்பா.  என்னால ஒரு நார்மல் லைப் லீட் பண்ண முடியாது டாக்டர்”

“You don’t worry my child.  நான் அவங்களைப் பார்த்துப் பேசறேன். ” என்று அவளை விட்டுவிட்டு பார்த்தாவிடம் பேசச் சென்றார் டாக்டர்.

“Mr. பார்த்தா நீங்க சொன்னதையும், ராதாகிட்ட நான் பேசினதையும்  வச்சு பார்க்கும்போது ராதாக்கு இந்த பக்திங்கறது அவளோட ஆழ்மனசுல 3 வயசுலேர்ந்து பதிஞ்சு போய் இருக்கு.  அதை எப்படி நீங்க ஒரே நாள்ல மாத்த முடியும்ன்னு நினைச்சீங்க.  நம்ம மனசுல ஒரு விஷயம் ஆழமா பதிஞ்சு போச்சுன்னா அதுல இருந்து அத்தனை சுலபத்துல வெளி வர முடியாது. உதாரணத்துக்கு அமாவாசைனா நீங்கல்லாம் வெளில என்ன கஷ்டம்னாலும் சாப்பிட மாட்டீங்க கரெக்ட்டா. இது சின்ன வயசுலேர்ந்து உங்களுக்குள்ள பதிஞ்சு போன ஒரு விஷயம்.  இதை உடனே மாத்தி இன்னைக்கு நீங்க வெளில சாப்டே ஆகணும் அப்படின்னு சொன்னா உங்களால முடியுமா.  இந்த சின்ன விஷயத்துல நம்மளை மாத்திக்கறதே கஷ்டம்ங்கறப்போ,  பக்திங்கறது எத்தனை பெரிய விஷயம்.  அதுல எப்படி ஓவர் நைட்ல மாற்றம் ஏற்படும். “

“இப்போ என்ன சொல்றேள் டாக்டர். எம்பொண்ணு இப்படியேதான் இருப்பாளா, அவளை சரியாக்கி எல்லாரையும் மாதிரி கல்யாணம், குடும்பம்ன்னு வாழ வைக்க முடியாதா”, என்று அழுதபடியே அலமு கேட்க்க

“Emotional ஆகாதீங்க Mrs. பார்த்தா.  சின்ன வயசுலேர்ந்து உங்களுக்கு அவ மத்த குழந்தைகள் மாதிரி இல்லைன்னு தெரியும்.  எந்தக் குழந்தைக்கூடயும் விளையாடினது இல்லை, அவளுக்கு நிறைய ப்ரண்ட்ஸ் கிடையாது, டிவி பார்த்தது இல்லை, கதை புஸ்தகம் படிச்சது கிடையாது, இதை எப்படி நீங்க கவனிக்காம விட்டீங்க.  அப்போல்லாம் என் குழந்தைக்கு என்ன பக்தின்னு பூரிச்சு போய் இருந்தீங்க.  அது பின்னாடி பிரச்சனையா வரலாம் அப்படின்னு நீங்க யோசிக்கலை.  3 வயசுலேர்ந்து இந்த 21 வயசு வரை அவ கேட்டது படிச்சது பார்த்து எல்லாம் கண்ணனைப் பத்தி மட்டும்தான்.  அதனால நாமும் ஒரு மீரா மாதிரியோ, இல்லை ஆண்டாள் மாதிரியோ ஆகணும்ன்னு அவ மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு.  இப்போ அதுல நீங்க கல்யாணம்ங்கறக் கல்லைப் போட்ட உடனே, குழம்பிப் போய் என்ன பண்றதுன்னு தெரியாம இந்த முடிவுக்கு வந்துட்டா.  இதுவும் அவ பக்தி புக்கைப் பார்த்து கத்துண்டதுதான்.  நிறைய கதைகள்ல கடவுளுக்காக உயிரைக் கொடுத்தால் அவரே வந்து நம்மளை ஆட்கொள்வார்ன்னு படிச்சதால இந்த முடிவுக்கு வந்துட்டா”, என்று நீண்ட விளக்கம் கொடுத்து முடித்தார்.

“இப்போ என்ன செய்யலாம் டாக்டர்.  அவளை இப்படியே அவப் போக்குலயே விட்டுடலாமா.  இல்லை ட்ரீட்மென்ட் ஏதானும் பண்ணலாமா”, கவலையுடன் பார்த்தா கேட்க

“நீங்க உடனடியா செய்ய வேண்டிய வேலை அவளை கல்யாணத்துக்காக வற்புறுத்தாம இருக்கறதுதான்.  அதே மாதிரி அவளை மாற்ற கொஞ்ச நாள் ஆகும்.  இது தலைவலி, காய்ச்சல் மாதிரி உடனே சரியாகாது.  அவள் அதை விட்டு வர சில மாதங்கள் ஆகலாம்.  அதே மாதிரி அவள் முழுக்க வெளி வருவாள்ன்னு நான் எந்த காரண்டீயும் கொடுக்க மாட்டேன்.  80-20 சான்ஸ்தான்.  அமாவாசைக் கதைதான் இங்கும்.  உயிர் போனாலும் வெளியில் சாப்பிட மாட்டேன்னு இருந்தாலும் இருக்கலாம், இல்லை, பரவாயில்லை வெங்காயம் மட்டும் இல்லாம சாப்பிட்டுக்கறேன்னு இறங்கியும் வரலாம்.  நீங்க எல்லாத்துக்குமே தயாரா இருந்துக்கோங்க.  இப்போ சில மெடிசன்ஸ் எழுதித் தரேன்.  அதையும் கொடுங்க.  அடுத்த வாரத்துலேர்ந்து நான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கறேன்.”

“டாக்டர் அவ அடுத்த வாரம் வேலைல சேரணும்.  வேலைக்குப் போனா பரவா இல்லையா.  இல்லை முழுக்க ரெஸ்ட்ல இருக்கணுமா”

“தேவை இல்லமா.  அவப் பாட்டுக்கு போக ஆரம்பிக்கட்டும்.  நம்ம ட்ரீட்மென்ட் வீக் என்ட்ஸ்ல வச்சுக்கலாம்.  போகப் போறது கம்ப்யூட்டர் கம்பெனி அப்படிங்கறதால, conference call, project management நிறைய பேர் கூட பேச வேண்டி வரும். அவளும் நாலு பேரோடப் பழகப் பழக அவ கூட்டை விட்டு கொஞ்சமா வெளில வர சான்செஸ் இருக்கு.”

டாக்டரிடம் நன்றிக் கூறி ராதாவை அழைத்துக் கொண்டு சீக்கிரமே தன் மகள் மனம் மாறி எல்லாரைப்  போலவும் இயல்பு வாழ்க்கை வாழ்வாள்  என்ற நம்பிக்கையில் அலமுவும், பார்த்தாவும்,  “அப்பாடா, டாக்டர் அங்கிள் அப்பாம்மாகிட்ட பேசி இருப்பார், இனிமே நம்மளைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்ல மாட்டா” என்ற நிம்மதியில் ராதாவும் வீடு திரும்பினர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.