(Reading time: 8 - 15 minutes)

 

காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை

காதல் நெஞ்சம்  என்றும் மறப்பதில்லை

இறைவன் விளையாடிய லீலை

இதை இவர்கள் அறியவில்லை(30)

 

அண்ணன் மகனையே மருமகனாய்

ஆக்கிக் கொள்ளவதே என் விருப்பம்

அனைவருக்கும்  பிடித்தம் இந்த சம்பந்தம்

அன்று மணநாளில் வேண்டும் உன் நடனம்(31)

 

துடித்துப் போனாள் தன் குரு சொன்னது மெய் தானோ

தவித்து நின்றாள் மாப்பிள்ளை அவன்தானோ

தன்னிலை மறந்து தள்ளாட

தரணியே சுழன்று அவள் மயங்க(32)

 

சோதித்து பலவீனம் என்றார் மருத்துவர்

சில காலம் கடின அசைவுகள் தவிர்ப்பது நலம்

சத்துள்ள ஆகாரம் ஓய்வு தரும் இவளுக்கு பலம் (33)

 

உணவு மறுத்தது  உடல்

உறங்க மாட்டேன் என்றது  உயிர்

ஊஞ்சலாடியது அவள் உணர்வு

உள்ளம் முழுதும் அவன் நினைவு (34)

 

முக்காலமும் அவளையே  நினைத்திருந்தான்  

மேற்படிப்பு முடித்து தொழிலிலும் நிலைத்திருந்தான்

தாய் நாடு வரும் நாளை எதிர்ப்பார்த்திருந்தான்

துள்ளியது  மனம் அவன் அதை ரசித்திருந்தான்(35)

 

னைவரிடமும் கோரினான் மன்னிப்பு

அத்தை மகளும் எனக்கு உடன் பிறப்பு

உறவுக்குள் வேண்டாமே மணமுடிச்சு

உகந்தது அல்ல என்பது  மருத்துவக் கூற்று (36)

 

கேளுங்கள்!! இனி சொல்லி விடுதல் உத்தமம்

குடியிருக்கிறாள் என் இதயத்தில் ஒரு சித்திரம்

அத்தையின் அன்பு மாணவி சித்ராங்கி

அவளே என் வாழ்வின் உயிர் நாடி(37)

 

மாணவி அல்ல; அவளும் என் மகளே!!

மனம் நிறைந்த ஆசிகள் உங்கள் இருவருக்குமே

உடல் நலக்குறைவென்று வேறிடம் சென்றனர்

உற்றார் உறவினர் எவரேனும் தகவல் சொல்லுவர்(38)

 

அத்தைக்கு நன்றி கூறி காற்றென பறந்தான்

அந்தோ!! ஒருவரும் அறியவில்லை

அவள் இருக்கும் இடம் தெரியாமல் தவித்தான்(39)

 

மாற்றம் வேண்டுமென அவள் சென்றது  மாமல்லபுரம்

முதன் முதலில் அவனைப் பார்த்த நினைவிடம்

நிருத்யாலயம் நிறுவி நாட்டியம் பயிற்றுவித்தாள்

நெஞ்சம் துடிக்கும் வரை அவன் நினைவில் என்றாள் (40)

 

கேட்டறிந்தான் அத்தையிடம்

நடந்ததென்ன அந்நாள்

தெரிவிப்பேன் என் அன்பை

நாடி அவளே வருவாள் (41)

 

தாய்நாட்டைப் பிரிந்து சென்றான் அயல்நாடு

தொழிலில் கொண்டான் முழு ஈடுபாடு

சித்திரக்கூடு அமைத்து சிறார்க்கு ஓவியம் கற்பித்தான்

சுவாசம் நிற்கும் வரை அவளே உயிர் என்றான்(42)

 

ந்திய பாரம்பரியத்தை உணர்த்தும்

இணையில்லா பொக்கிஷம்

அகிலமே வாசித்தது பாராட்டுப் பத்திரம்

அவன்  வரைந்த  நிருத்ய சித்திரம்(43)

 

பத்திரிக்கைகள் தொலைகாட்சிகள் நேர்காணல்

பார் வியந்த ஓவியம்  மன்றத்தில் கொலுவேற்றல்

மறைக்காது உரைத்தான்; சித்திர மங்கை தன்

மனதைக் கொள்ளைக் கொண்ட தேவதை (44)

 

ருக்கே தெரிந்து போனது  உறவு

உடையவளுக்கு எட்டவில்லையோ

அவள் பெற்றோர் உண்மை தெரிந்து அவனை அணுகினர்

அவன் அன்பினில் அமைதியும் ஆனந்தமும் கொண்டனர் (45)

 

தர வேண்டும் என்னவளுக்கு செல்லத் தண்டனை

திட்டம் இதுவே உங்கள் ஒத்துழைப்பு தேவை

சொல்ல வேண்டாம் அவளிடம்

சந்தித்தோம் நாம் என்ற விவரம் (46)

 

டற்கரை கோலாகலம் பூண்டது

கோடைத் திருவிழா கரை புரண்டது

நிருத்யாலயம் சிறார்கள் நாட்டிய நாடகம்

நடனத்தில் சித்தரித்தனர்  ஓர் காதல் காவியம் (47)

 

கண்ணன் மனநிலையே தங்கமே தங்கம்

கண்டு வரவேண்டுமடி!! யாரிடம் சொன்னாள் தூது

தூற்றி நகர்முரசு சாற்றுவனென்றே சொல்லி வருவையடி

தன்னவனை சாடினாள் இனி பொறுக்க இயலாது  (48)

 

நாடகம் இறுதி கட்டம்

நான் அமைத்தது இதுவல்லவே

நடந்ததைக்  கண்டவள் இன்ப அதிர்ச்சி- அது

நிருத்யன் கொண்ட காதலின் அத்தாட்சி (49)

 

அவளின் சித்திரம் பின்திரையில்

அதனை வரைந்தவன் கண்ணெதிரில் (50)

 

மடலேறியஓவியம்;அரங்கேறியநாட்டியம்

மனதில் பூத்த  நேசம்  உரக்கச் சொல்ல என்ன தயக்கம்

காதல் கொண்ட பின் வேண்டும் நெஞ்சில் தைரியம் (51)

 

ணநாள் மூழ்கியது மகிழ்ச்சி வெள்ளத்தில்  

மாலை மறைந்த இரவின் தனிமையில்

கோலம் வரைந்தான் காட்சியில் இரு பிம்பம்

கண்டவள்  கொண்டாள் ஆசையுடன் பொய்க்கோபம்(52)   

 

ஏய்! இது நான்

என்னை ஏன் வரைந்தாய்

அருகே வந்தவளை  இழுத்து அணைத்தான்

என்னவளை நான்  தீட்டினேன் நீ

ஏன் சிலுப்பிக் கொள்கிறாய்(53)

 

தப்புத் தப்பாய் வரைகிறாய்

தப்பியதைத் திருத்தித் தீட்டுங்கள்  தேவி – நீயும்

பிழையாய் அபிநயம் பிடிக்கிறாய்

பிறழ்ந்தால் பதம் வைத்து ஆடுங்கள் ராஜா(54)

 

சித்திரத்தின் மீதே  சித்திரம் தீட்டும் பாக்கியம்

நிருத்யத்துடன் நித்தம் நடனமாடும் வரம்

காதல் கனிய கலைகள் வளர

கண்கவரும் வர்ணதாளம் (55)

 

என் கவிதை சிறுகதைகளுக்கு அங்கீகாரம் தந்த chillzee மற்றும் அன்புத் தோழிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். வானவில் வண்ணங்களாய் என் வாழ்வில் ஜாலங்கள் செய்யும் அன்பு உள்ளங்களுக்கு நன்றி!!! இந்த கவிதை சிறுகதையை விரைவில் எழுத தூண்டுகோலாய் இருந்து நல்ல கருத்துக்களைக் கூறி வழிகாட்டிய தோழி வத்சலாவிற்கு நன்றி! நன்றி!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.