(Reading time: 16 - 32 minutes)

 

சில நொடிகள் கழித்து மெல்ல நிமிர்ந்து சஹானாவை பார்த்தவர்  டி...... சஹானா...  'அந்த கண்ணன் நோக்கு நல்ல வழிக்காட்டிட்டான்டி' என்றபடியே அந்த காகித துண்டை மதுவிடம் நீட்டினார் மாமி.

அவன் கண்கள் மெல்ல மெல்ல விரிய, அவள் கண்கள் குளம்க்கட்டிக்கொண்டன.

அந்த காகித துண்டுகள் எல்லாவற்றிலும் இந்த வரியே இருந்தது.

மதுசூதனன் வந்தென்னை கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி நான்

அந்த கண்ணனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் இன்று எல்லாருக்கும் தெரிந்து விட்டிருந்தது.

மாமி மெல்ல அவள் அருகில் வந்தார். 'இல்லை. மாமி நான் கிளம்பணும். என்றாள் சஹானா.

கிளம்பு. கிளம்பி நேரே கீழே நம்மாத்துக்கு வந்திடு.

இல்லை நான் ஹாஸ்டலுக்கு....  அவள் கண்கள் தளும்பின.

என்கிட்டே திட்டுதானே வாங்கியிருக்கே அடி வாங்கினதில்லையே நீ? அறைஞ்சுடுவேன் உன்னை.

'இ..ல்லை இல்....லை மாமி...' அவள் குரல் தடுமாறியது. 'நா... நான் வ...ரேன் மாமி ' அவள் நகர துவங்க...

இதுதான். ஆரம்பத்திலிருந்து இதுதான். பெரியவா பேச்சை கேட்கறதே இல்லை. உங்க அப்பா பேச்சைத்தான் கேட்கலை நீ. இந்த அம்மா பேச்சையாவது கேளேன்.....

அந்த வார்த்தையில் அப்படியே நின்றேவிட்டாள் சஹானா. கண்களில் நீர் சேர சிலையாய் நின்றிருந்தான் மது.

மாமி அவள் அருகில் வந்து மதுவின் கையை பிடித்து சஹானாவின் கையில் கொடுத்தார்... 'இந்தா என் குழந்தையை உன் கையிலே பிடிச்சு கொடுத்திட்டேன். நீ தான் இனிமே அவனுக்கு எல்லாம். அவனுக்கு எதிலேயாவது குறை வெச்சியோ தொலைச்சிட்டேன் உன்னை.....'

இதெல்லாம் சரியானு எனக்கு.... வார்த்தைகள் தடுமாறியது. அவளுக்கு. அவன் மனதின் ஓரத்திலும் அதே கேள்வி

சரிதான் சஹானா. கண்டிப்பா சரிதான். அந்த சின்ன குருவி நேக்கு கத்துக்கொடுத்த பாடமிது. ஒரு கூடு உடைஞ்சு போச்சுன்னு அது தளர்ந்து போகலியே. வாழறதுக்கு இன்னொரு சந்தர்ப்பம் தேடிண்டுடுதே. அதே மாதிரிதான் மனுஷ வாழ்கையும்.

அவன் கையை கெட்டியா பிடிச்சுக்கோ சஹானா. வேறே எதையுமே யோசிக்காதே. எல்லாம் நல்லபடியா நடக்கும் புருஷாளா இருந்தாலும் சரி, பொம்மனாட்டியா  இருந்தாலும் சரி, வாழ்க்கையிலே ஒரு பிடிப்பு வேணும். அப்போதான் நாம வாழறதிலே ஒரு அர்த்தம் இருக்கும். இனிமே நோக்கு எல்லாமே அவன்தான் அவனுக்கு எல்லாமே நீதான்.

இமைக்காமல் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.

ஏன்டா? ஏன்டா? ரெண்டு பேரும் அப்படி பார்க்கறேள்? ரெண்டு பேரும் ஆசை ஆசையாத்தான் முதல் தடவை கூடு கட்டினேள். மழையிலே அது உடைஞ்சு விழுந்திடுத்து. இப்போ இன்னொரு சந்தர்ப்பம். அந்த கண்ணன் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சிருக்கான் ரெண்டு பெரும் சேர்ந்து கூடு கட்டுங்கோ சந்தோஷமா இருப்பேள். இந்த அம்மா சொல்றேண்டா சந்தோஷமா இருப்பேள்.

அந்த வார்த்தையில் அப்படியே கரைந்து போனவளாய் தன்னையும் அறியாமல் மாமியின் தோளில் சாய்ந்துக்கொண்டு குலங்கி குலுங்கி அழத்தொடங்கினாள் சஹானா.

Manathai Thotta ragangal - 04 - Ilancholai pooththatha

{kunena_discuss:748}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.