(Reading time: 19 - 37 minutes)

 

டுத்து என்ன,  எல்லாரும் அவட்ட பேசுறதை நிறுத்திட்டாங்க. அவ சேர்மன் டாட்டர்னு தெரிஞ்சதும் க்ளாஸ்ல நடக்கிற எல்லாத்தையும் அவ வீட்ல போய் சொல்றதா இவங்களுக்கா ஒரு பயம். அதனால அவள அப்படியே ஒதுக்கிட்டாங்க கேர்ள்ஸ்.

ஏற்கனவே பாய்ஸ்ட்ட பேச மாட்டா. நானும் தான். நாங்க ரூல்ஸை கரெக்ட்டா ஃபாலோ பண்ற ஆளுங்க. அதோட பாய்ஸ்ட்ட பேசனும்னா எதாவது திருட்டுதனம் செய்தாதான் உண்டு.

எப்படியாவது கேமிரா, ப்யூன், கண்ணுல மண்ண தூவிட்டு அண்டர் கன்ஷ்ட்ரக்ஷன்ல இருக்கிற ப்ளாக்ல போய் பொண்ணுங்களும் பசங்களும் கடலை போடுறதுல இருந்து காதல் வளக்கிறது வரை எல்லாம் உண்டு.

ஆனா எங்க கேங் இது எதுக்கும் போகாது.

ஆக்க்ஷுவலி ரொம்ப கலகல டைப் அவ. எப்படித்தான் பேசாமலே க்ளாஸில் இருப்பாளோ....? ஆனா லன்சுக்கு எங்க கூட வந்துடுவா. கஷ்டமா இருக்குன்னு ஒரு நாள் புலம்பினது கிடையாது அவ. எப்பவும் சந்தோஷத்தின் மறு உரு. யாரையும் எதுக்காகவும் குற சொல்லவும் மாட்டா.

எல்லோருக்கும் உன்ன பிடிக்கலைனு தெரிஞ்சும் எப்படி உன்னால அங்க இருக்க முடியுதுன்னு நானே கேட்டுருக்கேன். “கஷ்டமா இருக்குது ஆனால் கவலையா இல்ல....பிஜி அண்ணா யுனிவர்சிடில வாங்கிடனும்...மெரிட் சீட்னா மட்டும் தான் அப்பா சந்தோஷமா அனுப்புவாங்க..”

இது வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் போச்சுது.

ந்த நேரத்துல என் க்ளாஸ்மேட் ஒரு பையன், எங்க க்ளாஸில படிக்கிற சௌமிங்கிற  பொண்ணோட எங்கயோ வெளிய போயிருக்கான். சௌமி குடும்பம் பொன்மதி வீட்டுக்கு தெரிஞ்சவங்க.

வெளிய போன எங்க க்ளாஸ் லூசு அவ வீட்ல பொன்மதி வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போயிருக்குது. சாயந்தரம் லேட் ஆனதும் சௌமி அம்மா இவளுக்கு போன் செய்து மகட்ட பேசனும்னு சொல்ல, விஷயம் எதுவும் தெரியாத இவளும் அவ இங்க இல்லையேன்னு சொல்லிட்டா.

அப்புறம் என்ன நடந்திருக்கும்? சௌமி வீட்ல அவளுக்கு ஆப்பு.

இது எதுவும் எங்க யாருக்கும் தெரியாது. என்னமோ இவதான் சௌமி அம்மாட்ட ஃபோன் செய்து போட்டு கொடுத்த மாதிரி மத்தவங்கல்லாம் கொதிச்சிருக்காங்க....சாயந்தரம் ஃபைனல் பெல். தன் திங்ஸை எடுத்துட்டு பொன்மதி எதோ உறுத்த திரும்பி பார்த்தா அவள சுத்தி 16 தடியங்க. எல்லாம் எங்க க்ளாஸ் எருமைங்க தான். அவ க்ளாஸ் மேட்ஸ் யாரும் இவள அலர்ட் பண்ணகூட செய்யாம தனியாவிட்டுட்டு  வெளிய போய்ட்டாங்க.

எங்க க்ளாஸ்ல ஒருத்தனுக்கு ப்ரச்சனைனு அத்தனை பேரும் சேர்ந்து நிக்றாங்க...ஆனா அவ க்ளாஸில் எப்படி நடந்துகிட்டாங்க பாருங்க..

க்ளாஸ் ரூம் லைட்ஸை ஒருத்தன் அணைக்க, அடுத்தவன் கதவை உள்ள லாக் செய்துட்டான்... அவ கத்துனா கூட எங்கயும் கேட்காது. அப்ப அவ க்ளாஸ் இருந்தது மாடியில லாஸ்ட் ஃப்ளோர்.

நானா இருந்தா பயத்துல மயங்கி விழுந்திருப்பேன்.

“என்னடி...உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோ...இப்போ நாங்க என்ன செய்ய முடியுமோ அதை செய்றோம்...தைரியம் இருந்தா வெளில போய் சொல்லு பார்ப்போம்...” உறுமிட்டு நாலஞ்சு நாய்ங்க அவ மேல பாய...அவ எப்ப எடுத்தான்னு தெரியலை....அவ பேக்ல எப்பவும் ஒரு நைஃப் இருக்கும் அத எடுத்து நீட்டி இருக்கா...மிரட்ட தான்.

அரை குற வெளிச்சத்திலும் அது தெளிவா மின்னிருக்குது...இந்த மாடுங்க ஒரு செகண்ட் நின்னு முழிக்க அதே நேரம் கதவுல ஓங்கி ஒரு இடி... வெளிய இருந்து விழுது. .தாழ்பாள் தெரிச்சுட்டு.

ஹீரோ என்ட்ரின்னு வச்சுகிடலாம். வினோன்னு தான் காலேஜே சொல்லும். முழு பெயர் என்னனு அப்போ எனக்கு தெரியாது. எங்க காலேஜ் ஹீரோ. தர்ட் இயர் ஸ்டூடண்ட். யாருக்கு ப்ரச்சனைனாலும் ஓடி போய் ஹெல்ப் பண்ற முத ஆள்.

கிரிக்கெட்டை விட எங்க ஊர்ல ஃபுட்பால்தான்.

வினோ ஃபுட்பால்ல கலக்குவான். ப்ரின்ஸியே அவன பார்த்தா சல்யூட் அடிப்பாரோன்னு தோணும். அப்படி எல்லாத்திலும் கெட்டி. ஆங்  ஆளும் ரொம்பவே அழகா இருப்பான்.

ஆறடி உயரமும் அவன் மீசையும்னு என் பக்கத்தில ஒரு லூசு எப்பவும் புலம்பும்.

அந்த வினோவும் அவன் ஃப்ரெண்டுன்னு காலேஜுக்கே தெரிஞ்ச மனோஜும் அன்னைக்கு பொன்மதி கிளஸில போய் நிக்காங்க.

கைக்கு எட்டுனவனை காலரபிடிச்சு தூக்கிட்டானாம் மனோஜ்.

“பொன்னி நீ கிளம்பு...” வினோ சொல்ல முகபாவம் மாறாம கைல கத்தியோட படி இறங்கி வந்தா பாருங்க. அப்ப அவள பார்த்த எனக்குமே இவ கூட சேரலாமா கூடாதான்னு தோணிச்சு.

“எ....என்ன ஆச்சு மதி...”  அவ கைய பிடிக்கேன்...அவ உடம்பு அப்படி கொதிக்குது.... ஆனா ஒரு சொட்டு கண்ணீர் விடலையே...

“என் க்ளாஸ்மேட்ஸுக்கு நான் என்ன கெடுதல் பண்ணேண்...ஏன் இப்படி விட்டுட்டு போய்ட்டாங்க....?”

இத்தனைக்கும் இந்த இன்ஸிடன்டுக்கு முன்னயும் சரி பின்னயும் சரி, ஸடடி ஹாலிடேஸ் ஆரம்பிக்கிறப்ப அவ க்ளாஸ்  கோஷ்டி ஒன்னு வந்து என்ட்ட கேட்டு அவ நோட்ஸ் காபி வாங்கிட்டு போகும்....இந்த பொன்மதி கிறுக்கும் குடுக்கும்....கேட்டா அடுத்தவங்கள படிக்க வைக்கதான  காலேஜ் நடத்துறாங்கன்னு கேன மாதிரி ஒரு பதில் சொல்லும்....

றுநாள் வரமாட்டான்னு நான் நினச்சேன். ஆனா வந்துட்டா. வீட்ல சொன்னியான்னு கேட்டேன்.

“அதான் வீட்டுக்கு தெரிஞ்சிட்டே....வினோ என் செகண்ட் கசின்....கொஞ்சம் டிஸ்டண்ட் ரிலடிவ்.....இவ்ளவுநாள் சென்னைல இருந்தான்...அவங்க அப்பா தவறவும் இங்க வந்துட்டாங்க... ”

அநேகமா எங்க ஃப்ரெண்ட்ஷிப்ல என்னை அறியாம ஒரு விலகல் ஆரம்பிச்சது இங்கதான் போல. நட்பில் இத்தனை ரகசியம் சரியா? என்ற கேட்கபடாத கேள்விதான் காரணமா?

அவள வச்சுகிட்டே வினோவ என் கேங்ல ஜொள்ளுவிட்டவங்க இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் இப்போ இவள் துரோகி மாதிரி தெரியுறா.

எங்க கேங்க் சைஸ் இப்போ மொத்தம் மூனு பேரா சுருங்கிட்டு. அவட்டயே ஏன் இத்தனை ரகசியம்னு கேட்டேன்.....என் பேக்ரவுண்ட் தெரியாத வரைக்கும்தான் நான் நானா இருக்க முடியும்னு சொன்னா.

அவ சொன்னது சரின்னு தோணினாலும்...அவ க்ளாஸ்மேட்ஸுக்கு அவள பார்த்தா வர்ற இன்செக்யூரிட்டிய என்னால என்னமோ அப்போ தெளிவா புரிஞ்சுக்க முடிஞ்சுது.

அப்புறம் தொடர்ந்த நாட்கள்ல வினோவுக்கும் இவளுக்கும் அதுக்கு முன்னவரை ஹாய் பாய் என்ற அளவில் கூட பேச்சு வார்த்தை கிடையாதுன்னு புரிஞ்சுது....அவ இடத்தில இருந்திருந்தா நான் கூட வினோவ ரிலேடிவ்னு சொல்லிகிட்டு இருந்திருக்க மாட்டேந்தான். பேசவோ பழகவோ செய்யாத ஒருத்தங்கள எப்படி சொந்தம்னு சொல்லுவோம்.....?

ஆனா இப்போ கதை மாறிட்டு. பொன்மதி அப்பாட்ட வினோ சொல்லிட்டானாம். “மாமா உள்ள அவளுக்கு ஆள் இருக்குன்னு தெரியனும்...இல்லன அவளுக்கு பாதுகாப்பு இல்ல...”

அதனால தினமும் லன்ச் டைம் அவள தேடி வந்து வினோ பேசுவான். கன்னி மாடம் வாசல்ல நின்னு இவங்க பேசுறத மொத்த காலேஜும் பார்க்கும். அத்தனை பேர் வயித்தெரிச்சலும் சேர்ந்தோ என்னமோ வினோவுக்கும் பொன்மதிக்கும் காதல் நோய் பத்திகிச்சு.

ஏற்கனவே லன்ச் டைம்ல மட்டும்தான் நான் பொன்மதிட்ட பேசமுடியும். அதுவும் இப்போ குறஞ்சுட்டு. மொத்ததுக்கு பொன்மதிக்கு இப்ப பேச இருந்த ஒரே ஆள் வினோதான். ஆனா அவன் ஒருத்தன் போதாதான்னு எனக்குமே  அப்போ தோணிச்சு.

அடுத்து பொன்மதி பேச வந்தப்பல்லாம் எனக்கு எதாவது வேலை இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.