(Reading time: 22 - 44 minutes)

வர்களில் ஒருத்தியாய் வேலை செய்து கொண்டிருந்த கண்ணம்மாவுக்கு முதுகு இடுப்பு முழங்கைகள் விரல்கள் அனைத்துமே வலித்தது.சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு வெகு நேரமாய் வேலைசெய்வதால் கால்கள் மரத்துப் போயின.கைகளிலெல்லாம் வெடி மருந்து அப்பி இருந்தது.ஏதோ வெள்ளியை அறைத்து பூசினாற் போல் பளபளத்தது.

கண்ணம்மா தானாக எதையோ பேசிக்கொண்டாள் பாவம் வசந்தி..நம்ம வவுத்துல பொறந்து என்ன சொகத்த கண்டிச்சி..கூடப் படிக்கிற பொண்ணுக்களப் போல ..நல்ல துணிதான் உடுத்த முடியுதா? நல்ல சாப்பாடுதான் சாப்புட முடியுதா..?பளிச்சின்னு காதுக்கு கழுத்துக்கு பவுனு நக போட முடியுதா? பாவம் அது.அம்மா படுர கஷ்டத்த பாத்து வாயத் தொறந்து ஒண்ணு கேக்கரதில்ல. தீவாளிக்கு இன்னும் ஒருவாரம்தானிருக்கு.கம்பேனில நேத்திக்கே போனசு கொடுத்திட்டாங்க.தொலையாத தொக இல்லதான் ஆனாலும் ரெண்டாயிரம் வந்திருக்கில்ல..அத்தோட சிறுகச் சிறுக சேத்து சீட்டுப் போட்டு வெச்சிருக்குற கொஞ்சம் பணத்தையும் போட்டு ஒரு ரெண்டு கிராமுக்காவது வசந்தியின் காதுக்கு தோடு வாங்கிப் போடனும்.இன்னிக்கு சாயந்திரம் சீட்டுக்காரி கனகாம்பரம் சீட்டுப் பணத்த தர்ரதா சொல்லிருக்கா.சாயந்தரம் அவளப் போய் பாத்து பணத்த வாங்கணும்.போனசு பணத்த அரிசி வாளில போட்டு அதுமேல அரிசியை கொட்டி பணத்த பத்திரப் படுத்தி வைத்திருப்பது நினைவுக்கு வந்தது கண்ணம்மாவுக்கு.மகளிடம் கூட இது பற்றிக் கூறவில்லை.சட்டுனு தோடு வாங்கிக்கிட்டு போயி வசந்திட்ட குடுத்து அவ மொகம் சந்தோஷப்படுறத பாக்கணும்.ஆசைப்பட்டது தாயின் மனசு.

ண்ணம்மாவும் வசந்தியும் வெளியே சென்ற பிறகு குடிக்க காசு கிடைகாம்ல் போன ஆத்திரத்தில் மூலையில் கிடந்த மரப் பெட்டியை நோண்ட உடம்பெங்கும் அடிவாங்கி நசுங்கிப் போயிருந்த பித்தளைச் செம்பு ஒன்று கிடைக்க இன்றைக்குக் குடிக்க காசுக்கு வழி பிறந்தது என்ற மகிழ்ச்சியில் செம்பைத் துண்டுக்குள் மறைத்து எடுத்துக்கொண்டு வெளியேறினான் கண்ணம்மாவின் குடிகாரக் கணவன்.

வீட்டில் தனியாளாய் குமரேஷ்.மனம் அலைபாய்தபடி.இப்போது அவனது பிரர்ச்சனை ரெண்டாயிரம் ரூபாய் பணம்.இருக்காதா பின்னே?நாளை அவனது அபிமான ..நடிகரின் புதிய படம் வெளியாக இருக்க அவனுக்கு செலவு இருக்காதா?பல தடைகளையும் தாண்டி அந்த நடிகரின் படம் னாளை வெளியாகிறது.அதுவே அந்த படத்தின் மீது பெரிய  எதிர்பார்ப்பை பெரும்பாலான மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் போது அவரின் தீவிர ரசிகனும் அந்த நடிகரின் ரசிகர் மன்ற உறுப்பினருமான குமரேஷ்க்கு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருப்பதில் என்ன வியப்பு?டிவி யில் அந்த நடிகரின் படப் பாடல் வெளியீட்டு விழாவையும் படத்தின் டீஸரையும் பார்த்ததிலிருந்து குமரேஷும் அவனது கூட்டாளிகளும் கிறங்கித்தான் போயிருந்தார்கள்.

படம் ..நல்ல படியாக வெளியானால் மொட்டை போடுவதாக வேறு நேர்ந்து கொண்டார்கள்.சாதாரணமானவர்களைப் போல் தியேட்டருக்கு வந்தோமா டிக்கெட் வாங்கினோமா படம் பார்த்தோமா வீட்டுக்குப் போனோமா என்று இருந்துவிட முடியுமா?தீவிர ரசிகனும் ரசிகர் மன்ற உறுப்பினருமாயிறே..அம்பிமான நடிகரின் படம் வெளியாகுமன்று ..நடிகருக்கு அறுபதடியில் கட்-அவுட் வெக்கணும் ஆளுயர மாலை போடனும் கலர்கலரா தோரணம் கட்டணும் ஊரெல்லாம் படத்தின் போஸ்டர் ஒட்டணும் படம் பாக்க வரவங்களுக்கெல்லாம் இனிப்பு கொடுக்கணும் முதல் மூணு காட்சிகளையும்  ஒவ்வொரு காட்சிக்கும் நானூறு ரூவா கொடுத்து டிக்கெட் வாங்கி பாக்கணும் தியேட்டருக்குள்ளே படம் பாக்கையில் நடிகர் முதல் முதலாய் திரையில் தோன்றும் போது பூக்களவீசனும் அதென்ன கையால முறுக்கினா கலர்கலரா ஜிகினா பேப்பர் கொட்டுமே அத வாங்கணும்..இத்தனயையும் வெறும் கைய வெச்சுக்கிட்டா செய்ய முடியும்?அதுனால சேக்காளிகள் மத்தியில் ஆளுக்கு ரெண்டாயிர ரூபாய் கொண்டுவர வேண்டும் என்று முடிவாயிற்று.ரெண்டாயிரமா?என்னடா சொல்லுர சேகர்... கூட்டாளி ஒருவனிடம்  குமரேஷ் கேட்க..

ஆமாண்டா தலைவரு படம்னா சுமாவா?..

அவ்வளவு தொகைக்கு என்னடா பண்ணுறது?..குமரேஷ் கேட்க...

இதுக்கெல்லாம் அப்பன் ஆத்தாட்ட கேட்டா குடுக்கமட்டாங்கடா..வூட்டுலயே கைய வெக்கவெண்டிதுதான்..

வூட்டுல கைய வெச்சா இருவது ரூவா கூட தேராது ரெண்டாயிரமா..மனதிற்குள் நினைத்துக் கொண்டான் குமரேஷ்.

என்னாடா யோசிக்குற பொம்பளைங்க அரிசிப் பானையிலயும் அஞ்சறைப் பொட்டியிலயும்தான் பணத்த ஒளிச்சி வெப்பாங்க என்று கூடுதலாகவும் சேகர் சொன்னது நினைவுக்கு வந்தது குமரேஷ்க்கு.

ஒரு சின்ன தடுப்புதான் சமையல் அறை.ப்ளாஸ்டிக் வாளியில்தான் அரிசி வைகப்பட்டிருக்கும் என்பது குமரேஷுக்கு தெரியும் என்பதால் அரிசி வாளியைத் திறந்தான்.அரிசி .நிரம்பி இருந்தது.

ரேஷன் அரிசி.கையை விட்டுத் துழாவிப் பார்த்தான்.ஒன்றும் கிடைக்கவில்லை.அஞ்சறைப்பெட்டி டப்பாக்கள் என்று ஒவ்வொன்றாய் திறந்து பார்க்க ஏமாற்றம்மே மிஞ்சியது.ஆற்றாமையும் கோபமுமாய் வந்தது குமரேஷுக்கு.பணம் கிடைக்க வில்லையே என்றஆத்திரத்தோடு செய்வது பாவம் என்று சிந்திக்காது அரிசி வாளியை ஓஓஓஓஓஓஓங்கி ஒரு உதை விட வாளி உருண்டு  உருண்டு ஓடியது உருளும் ஒவ்வொரு முறையும் பக் பக் என்று அரிசி வெளியே கொட்டியது.

ரப்பர் பேண்ட் போடப்பட்ட உள்ளங்கை அளவுள்ள பாலிதின் பை ஒன்று அரிசியோடு வந்து வெளியே விழுந்தது.சட்டென குமரேஷின் பார்வை அதில் பதிய ஒரு பரபரப்போடு அதை எடுத்தான். 

சுற்றப்பட்டிருந்த ரப்பர் பாண்டை எடுத்துவிட்டு பையின் உள்ளே பார்த்தபோது அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை...நான்கு பச்சை நிற ஐந்னூறு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

துள்ளிக்குதித்தான் குமரேஷ்.அவனுக்குத் தேவயான தொகை.வேகமாய் விசிலடித்தான்.அடுத்த நிமிடம் கீழே கொட்டிக் கிடந்த அரிசியை அள்ளிவைகக் கூடத் தோன்றாமல் வாசல் கதவை வெறுமே சாத்திவிட்டு நடயைக் கட்டினான்.அந்த பணத்தைத் தன் தாய்தான் பத்திரமாய் வைத்திருப்பாள்..அதை எவ்வளவு கஷ்டப் பட்டு சம்பாதித்திருப்பாள் தாயின் வியர்வைத் துளியால் வந்த அந்த பணத்தை சினிமாவில் நடித்துக் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ஒரு நடிகனுக்காக செலவு செய்கிறோமே என்ற எண்ணம் சிறிதும் தோன்றாமல் வழக்கமாய் கூட்டாளிகள் சந்திக்குமிடத்தை நோக்கி அபிமான நடிகரின் படப் பாடலொன்றை ஹம் செய்தவாறு வேகமாக நடந்தான் குமரேஷ். பாவம் கண்ணம்மா.

தியம் உணவு இடைவேளை.கொண்டுவந்திருந்த தோசை வரண்டு போயிருந்தது.ஏற்கனவே ஜுரத்தால் நாக்கு கசந்து போயிருந்ததால் கண்ணம்மாவுக்கு சாப்பிடப் பிடிக்கவில்லை.பாட்டிலில் கொண்டு வந்திருந்த ஆறிய வென்னீரைக் குடித்து விட்டு கால்களைக் கொஞ்சம் நீட்டிக்கொண்டு உடார்ந்திருந்தாள் கண்ணம்மா.உடம்பு வலி தாங்க முடியவில்லை.ஆனாலு மாலையில் தன் மகளுக்கு வாங்கப் போகும் காது ஸ்டட்டைப் பற்றியே அவளின் மனது சுற்றிவந்தது.அந்த மாலாப் பொண்ணு போட்டுக்கிட்டு இருந்திச்சே அதுமாறி வாங்கலாமா இல்லாட்டி சுந்தரி மவ ராசாத்தி போட்டுக்கிட்டு இருந்திச்சே அதுமாறி வாங்கலாமா..? எப்பிடியும் பாத்துப் பாத்து அழகா வாங்கணும் எம் மவளுக்கு...கண்களை மூடி தன் மகளைப் புதுத் தோட்டோடு கற்பனை செய்து பார்த்தாள் அந்தத் தாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.