(Reading time: 22 - 44 minutes)

சாப்பாட்டு நேரம் முடிந்து விட்டதற்கான மணி அடிக்கவே தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள் கண்ணம்மா.லேய்...மணி தயாரிச்ச அணுகுண்டெய்யெல்லாம் பெட்டில அடுக்கி குடோனுக்கு கொண்டி வையி...அந்தப் பிரிவுக்கான சூப்பர்வைசர் மாணிக்கவேலுவின் குரல் கேட்கவும்..இதோ சார்..எழுந்து கொண்டான் மணி.சின்ன குன்று போல் குவிந்து கிடந்த அணுகுண்டை பெட்டிகளில் அடுக்கத்த் தொடங்கினான். ஒன்று இரண்டு மூன்று.. பத்து பெட்டிகள் தள்ளு வண்டியில் ஏற்றப்பட பதினோறாவது பெட்டியில் வெடிகள் நிரப்பப்ட்டு வண்டிக்கு எடுத்துச் செல்லப் பட்ட போது கை நழுவி கீழே விழ..அணுகுண்டுகள் ஒன்றோடொன்று உரச..அடுத்த னொடி டமால் என்ற பெருஞ்சத்தத்துடன் வெடிக்க ஆரம்பிக்க..அங்கே வைக்கப் பட்டிருந்த வெடி மருந்து மூட்டைகளும் தீப்பிடிக்க சில வினாடிக்குள் அந்தக் கட்டிடமே இடிந்து விழுந்து தரையோடு தரையாயிற்று.பாவம் மகளையே நினைத்து அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த கண்ணம்மா இரண்டு கால்கள் மட்டும் வெளியே தெரிய மீதி உடல் கட்டிட இடிபாடுகளுக்கிடையே மாட்டிக்கொள்ள உயிரை விட்டிருந்தாள்.

ஊய்..ஊய்..ஊய்..ஊய்..ஆம்புலன்ஸ்களின் அலறலும்...கிணி..கிணி..கிணி என்று மணியடிகும் தீயணைப்பு வண்டிகளின் சத்தமும் மீட்புப் பணியினரின் பரபரப்பும் உறவுக்காரர்களின் அழுகையும் அலறலுமாக அந்த இடமே அல்லோல கல்லோலப்பட்டது.

வசந்தியின் பள்ளிக்கு தகவல் அனுப்பப்பட்டு அவளும் வந்து தாயின் உடலைப் பார்த்து கதறிக்கொண்டிருதாள்.அவளைச் சமாதானம் செய்ய உறவுக்காரர்கள் செய்தி அறிந்து இன்னும் வராத நிலையில் வீட்டு அக்கம்பக்கத்தினரும் தெரிந்தவர்களும் அவளைச் சமாதானம் செய்ய படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள். இந்த கோர சம்பவத்தையும் ம்னைவி இறந்ததையும் புரிந்து கொள்ளும் நிதானத்தில் இல்லாமல் குடித்துவிட்டு விழுந்து கிடந்தான் குடிகாரக் கணவன்.இறந்த கண்ணம்மாவின்   உடல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

தனக்கு தகவல் தெரிவிக்க பட்டதுமே அவ்விடத்துக்கு அழுது புறண்டு ஓடிவந்த வசந்தா..தன் தந்தையும் அண்ணனும் அங்கு இல்லாமல் இருந்தது கண்டு தவித்துப்போனாள்.

அண்ணன் குமரேஷின் செல்லுக்கு போன் செய்தபோது ரிங் போய்க்கொண்டே இருந்து நின்று போனது.மீண்டும்  மீண்டும் செய்தபோதும் இதே கதைதான்.

ரெண்டாயிரம் பணத்தோடும் மகிழ்ச்சியோடும் சென்ற குமரேஷ் தன் அபிமான நடிகரின் கட்-அவுட் வைக்கவும் மாலை போடவும் பால் மற்றும் பீர் அபிஷேகம் செய்யவும் சூடம் காட்டவும் வந்தவர்களுக்கெல்லாம் இனிப்பு வழங்கவும் ஓடி ஓடி வேலை செய்தான்.ஊரெல்லாம் ரசிகர்மன்றத்தின் ஒரு பிரிவு நோட்டீஸ் ஒட்டியது.

முதல் நாள் முதல் ஷோ தலைவரு படத்த பாக்குறதே ஒரு கிக்குதாண்டா..கொடுத்து வெச்சிருக்கணும்டா...நல்ல வேள நாம ரசிகர் மன்ற உறுப்பினருங்க...இல்லாட்டி இவ்வளவு சுளுவா டிக்கெட்டு கெடைக்குமா.?அதுவும் முதல் மூணு ஷோக்கு.ஏதோ இவர்களை ஃப்ரீயா பார்க்க அனுமதித்தமாதிரி பேசிக்கொண்டார்கள் குமரேஷின் சேக்காளிகள்.

முதல் காட்சி ஆரம்பமாயிற்று.அபிமான நடிகர் திரையில் தோன்றும் வரை அமைதியாய் இருந்தவர்கள் அபிமான நடிகர் டிரைனிலிருந்து இறங்குவது போல் காட்சி வரவும்..விஷ்..விஷ்.. உய்..உய்..என்று விசில் சப்தம் தியேட்டரை அதிரவைத்தது.கை தட்டலும் ஹோ..ஹோ..என்ற ஆரவாரமும் கிடுகிடுத்தது..திரையை னோக்கி பூக்க்கள் வீசப்பட்டன.வண்ண வண்ணமாய் ஜிகினா தாள் துணுக்குகளை பாப்ஷூட்டர்கள் கக்கின.இந்த ஆரவாரத்தில் நடிகர் பேசும் வசனம் அடிபட்டுப் போயிற்று.

கொஞ்சம் ஆரவாரம் அடங்க படம் தொடர்ந்தது.படத்தோடு ஒன்றிப்போனான் குமரேஷ்.சில இடங்களில் உணர்ச்சி வசப்பட்டான்..சில இடங்களில் சிரித்தான்..சில இடங்களில் பஞ்ச் டயலாக் அபிமான நடிகர் பேசும் போது எழுந்து நின்று கை தட்டினான்.

பேண்ட் பாக்கெட்டிலிருந்த செல் ரிங்கானது.எடுத்துப் பார்த்தான் குமரேஷ்.தங்கை வசந்தியிடமிருந்து.ஆமா... இவுளுக்கு வேலயில்ல...வூட்டுக்கு வரப் போரியா இல்லியானுவா...

ஆஃப் செய்தான்..மறுபடியும் அழைப்பு ஆஃப் செய்தான்.கதானாயக அபிமான நடிகரின் தாய் வில்லன்களிடம் மாட்டிக் கொள்கிறார் படத்தில்.அவரின் அருகே வெடி குண்டு வைக்கப் படுகிறது.

தாயைக் காப்பாற்ற படாதபாடு படுகிறார் கதானாயக நடிகர்.வில்லன்களோடு பயங்கரமாக மோதுகிறார்.இன்னும் இரண்டே நொடி பாம் வெடிக்க..வில்லன்களை வீழ்த்திவிட்டு தாயைத் தூக்கிக்கொண்டு அப்படியே உருளுகிறார்.ஒரு பள்ளத்தில் வந்து வெகு பத்திரமாய் விழுகிறார்கள் தாயும் மகனும்.விழுந்த வேகத்தில் எழுந்து வீரவசனம் பேசுகிறார் கதானாயகன்.கையைக் காலை ஆட்டி வில்லன்களைப் பார்த்து பன்ச் டயலாக் பேசும் அவரைப் பார்த்து ரசிகர்கள் பட்டாளம் கூக்குரலிடுகிறது.குமரேஷின் குரல் முந்தி இருக்கிறது.அடுத்தது க்ளைமாக்ஸ்..மீண்டும் ரிங்கானது குமரேஷின் செல்போன். எடுத்துப்பார்த்தான்.வசந்தியிடமிருந்து..கொரங்கு நல்ல நேரத்துல் கூப்பிடுது பாரு..சனியன்..திரையைவிட்டுக் கண்களை எடுக்காமலேயே ஸ்விச் ஆஃப் செய்தான் செல்லை. 

ல்லாம் முடிந்து விட்டது கண்ணம்மா இறந்துபோய் ஒரு மாதம் ஆகிவிட்டது.அரசாங்கம் ஏதோ கொஞ்சம் பணம் கொடுத்தது.காரணமே இல்லாமல் குடித்த தந்தை இப்போது மனைவியின் இறப்பைக் காரணம் காட்டி முழு நேரக் குடிகாரனானார்.கொஞ்சமே கொஞ்சமாவது அம்மாவின் அதட்டலுக்குப் பயந்திருந்த குமரேஷ் இப்போது அங்குவார் அடக்குவாரின்றிப் போனான. ஜேப்படியும் வழிப்பறியும் அவனது தொழிலாய் ஆகிப் போக அடிக்கடி ஜெயிலுக்கு விருந்தாளியாகப் போய்வந்தான்.

பாவம் வசந்தி திக்கு தெரியாத காட்டில் தனியாய் விடப்பட்டவள் போல் தடுமாறினாள் ஆனாலும் தாயின் ஆசையை ..நிறைவேற்ற துயரத்தைச் சுமந்தபடியே நன்கு படித்து ப்ளஸ்டூ வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றாள்.தன்னை ஒரு டிகிரி வாங்கும் அளவுக்குப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்த தாயின் ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என நினைத்த வசந்தி அதற்கான உறுதியோடு இருந்தாள்.தொலை தூரக் கல்வி முறை மூலம் டிகிரி வாங்க அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்ட வசந்தி..இதோ கிளம்பி விட்டாள் அம்பிகா ஃப்யர் ஓர்க்ஸ் என்ற தீப்பெட்டி மற்றும் வெடி தயாரிக்கும் நிறுவனத்தில் பணி செய்ய.ஆம்  வானதி ஃப்யர் ஒர்க்ஸ்  இல்லாவிட்டால் அம்பிகா ஃபயர் ஒர்க்ஸ்...சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைக்கா பஞ்சம்?நிச்சயம் வசந்தி படித்து டிகிரி வாங்குவாள் தாயின் ஆசைப்படி நல்ல வேலைக்குப் போவாள்.படித்து முடித்து ஒரு டிகிரி வாங்கும் வரைதான் இந்த தீப்பெட்டி தொழிர்சாலை வேலை.

அவளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.நல்ல வாழ்க்கை அமையும்.அவளின் தாய் கண்ணம்மாவின் ஆசியும் அன்பும் அவளோடு கூடவே இருக்கும். அவை இருக்கும் வரை அவளுக்கு இனி எந்தக் குறையும் வராது.தாயில்லாவிடில் தகப்பனும் தாயாதிதான்.தமையனும் தள்ளி நிற்கும் உறவுதான்.

இது எல்லோருக்கும் பொருந்தாதுதான்.ஆனாலும் வசந்திக்கு அப்படித்தானே வாய்த்திருக்கிறது.

ஆனாலும் வசந்தி மனதில் உறுதியோடு வாழ்ந்து காட்டுவாள்.அவள் கண்ணம்மாவின் மகள்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.