(Reading time: 10 - 20 minutes)

வன் எழுந்து தடுக்க எத்தனிக்க திவ்யா கூச்சலிட்டுக்கொண்டே ஹாலில் இருந்த சாரை தூக்கி அவன் நெஞ்சில் இடித்தாள் " என் டிரஸ் நல்லா இருக்கா ?ம்ம் " என்று கேட்டுகொண்டே அவன் நெஞ்சில் செருப்பு காலில் மிதித்தாள்.

எனக்கு வலி குறைந்தது. "திவ்யா நிறுத்துங்க!! திவ்யா நிறுத்துங்க " என்று கூவினேன்.

"செத்துட போறாங்க !" என்று எழுந்து சென்று அவளை இழுத்து விலக்கி விட்டேன். 

செல்வகணபதி "இரு இரு போலீஸ்க்கு போன் செய்றேன் " என்று சொல்லிக்கொண்டே எழுந்து நிற்க.

அவள் அவன் வயற்றில் எட்டி மிதித்து தள்ளி விட்டாள்.  இண்டக்ஷனில் சுடு தண்ணி கொதித்து கொண்டிருக்க அதை பார்த்தவள் அவன் புறமாக தள்ளி விட்டாள். 

கொதிநீர் மேல் விழுந்ததில் துடித்துடித்து போனான் அவன். 

சட்டென்று கிச்சனுள் நுழைந்தவள் வர தாமதம் ஆனது.

நான் செல்வகணபதியை எழுப்பி "ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை "என்று ஆறுதல் படுத்தி சோபாவில் அமர செய்தேன்.

அவன் பாவமாக பயத்துடன் சுற்றி பார்த்துக்கொண்டே "எங்கப்பா அந்த பொண்ணு " என்று கேட்க வலியை மீரி சிரிப்பு வந்தது.

கிச்சனிலிருந்து வெளியே வந்தவள் கையில் கரண்டியுடன் வந்தாள்.

செல்வகணபதி "ஏய் இருடி உன்ன போலிஸ்ல புடுச்சி தரேன் " என்றதும் 

அந்த சூடான கரண்டியை அவன் கைகளில் அவள் வைக்க அவன் வலியில் அலறினான்.

நான் "ஏய் ஏய் " என்று சொல்லிக்கொண்டே அவளை தள்ளி விட போனேன் அவள் அதை என் கன்னத்தில் படும் படி அருகில் கொண்டு வர நான் பயந்து ஒடுங்கினேன்.

திவ்யா "லேப்டாப் எடு!! ம்ம் " என்று மிரட்டினாள்.

அவன் மாட்டேன் என்றதும் அந்த கரண்டியை இன்னொரு கைமீது வைத்தாள். அவன் அலறினான் "எடுக்கறேன் " என்றான்.

"எடு எடுத்து எங்க ரெண்டு பேர் இல்ல இல்ல நாலு பேருக்கும் ஆப்பர் லெட்டர் அனுப்பு..ம்ம் சீக்கிரம்" என்றதும் அவன் வேகவேகமாய் வலியுடன் லேப்பில் லாகின் செய்தான்.

ஹெட் ஆபிஸிலிருந்து வந்திருந்த ஆப்பர் லெட்டெர் பார்வர்ட் செய்தான். பக்கம் அமர்ந்திருந்து பார்த்த எனக்கு புரிந்தது.வந்திருந்த இருபது பேரும் வேலைக்கு செலெக்ட் ஆகி இருந்தோம்.

அதை நான் ஸ்கூல் டீச்சரிடம் சொல்வதுபோல் "திவ்யா இருபது பேரும் செலெக்ட் திவ்யா " என்றேன்.

அப்படியா என்று அதிர்ந்து கொண்டே அவள் சூடு கரண்டியை அவன் நெஞ்சில் வைத்தாள்.

அவன் "ஆ ஆ ஆ " என்று கத்திகொண்டே பலம் கொண்டே அவளை தள்ளி விட்டான்.

எழுந்து மிதிக்க போனவனை என்னால் முடிந்த பலம் கொண்டு கையில் குத்து விட்டேன். சரமாரியாக கன்னங்களில் அறைந்தேன்.

சுதாரித்த திவ்யா "ராகவன் போதும்!போதும் " என்றாள்.

சுருண்டு விழுந்தவனை பார்த்து "உன் பொண்டாட்டியையும் இப்படி தான் எவன் கூடயோ படுக்க அனுப்பியிருக்கியோ " என்று கேட்டு அழுதாள்.

நான் அவளை சமாதானம் செய்து அவள் பைல் என் பைல் இரண்டையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

அவள் திரும்பி "இனி இப்படி செய்யாதே" என்று சொன்னாள் குழந்தை போல்.

அவளை அணைத்தப்படி வெளியே கூட்டி வந்தேன். 

அவள் "ராகவன் , இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்களேன் " என்று நம்பர் கொடுக்க செய்தேன்.

போனை பிடுங்கி "ஹலோ முருகா ? நான் திவ்யா பேசறேன், லக்ஷ்மன்பதி அபார்ட்மெண்ட் வா , ஆமாம் சைதாபேட் தான் " என்றாள் 

இருவரும் வெளியே வந்து பிளாட்பார்மில் அமர்ந்தோன். அவள் உடம்பு காய்ச்சல் வந்தது போல் கொதித்தது.

"நான் பைத்தியம் இல்லை ராகவன், " என்று சொல்லி அழுதாள்.

எனக்குள் மனதில் "நானும் பைத்தியமில்லை " என்று சொல்லிக்கொண்டேன்.

கருப்பு நிற பீ.எம்.டபுள்யு பக்கம் வந்து நின்றது. நான் டிரைவரை பார்த்து "போயா " என்றேன்.

அவன் நிறுத்தி விட்டு  திவ்யாவை நோக்கி வந்து "அம்மா போலாங்களா " என்று கேட்கவும் அதிர்தேன்.

அவளுடன் இம்முறை ஏற பயமாக இருந்தது. அவளே கைபிடித்து ஏற்றிக்கொண்டாள்.

அவள் வீட்டிற்கு சென்றோம்.அவள் தந்தை சுப்ரமணிய ராமலிங்கத்தை சந்தித்தேன். கோடீஸ்வரர் எளிமையாக தெரிந்தார்.

பெருமூச்சாக "என் பொண்ணு அப்படி தான் நியாயம் நேர்மை எனலாம் பார்த்து அவ உடம்பை கெடுத்துப்பா" என்றார்.

பாவமாக இருந்தது.

அவரிடம் "நான் மதுரையில் உங்க காலேஜில் தான் சார் எம்.பி.ஏ படித்தேன் " என்றேன் 

"உன் முகம் எனக்கு நியாபகம் இருக்குப்பா, வாலிபால் மேட்ச்ல வின் பண்ணிச்சுல உன் டீம் " என்று கேட்டார்.

"உனக்கு படிச்சிட்டோம் என்ற கர்வம் இருக்கு, மத்தப்படி நீ நல்ல பையன் தான் " என்றார்.

நான் மிரண்டேன்.

வெளிச்சம் பிறந்தது.

என்னுள் தொலைந்த ராகவன் மீண்டான்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.