(Reading time: 12 - 24 minutes)

2017 போட்டி சிறுகதை 20 - காதலியா...,மனைவியா...! - அனிதா சங்கர்

This is entry #20 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - தலைப்பு சார்ந்த கதை - காதலியா மனைவியா

எழுத்தாளர் - அனிதா சங்கர்

Couples

ந்த பெரிய பார்கிங் ஏரியாவில் தனது காரை அதற்கு  உரிய இடத்தில்  நிறுத்தினான் அர்னவ்.

காலையிலேயே அவனக்கு ஒரே தலைவலி, எல்லாம் இந்த பாமாவால் வந்தது.காலையிலே உயிர எடுக்குறா....எதுக்குடா  கல்யாணம் பண்ணுனோம்னு நினைக்க வைக்குற ( இத, எந்த பையன்டா நினைக்கமா இருக்கிங்க...)

இன்னைக்கு பிப்ரவரி 14, சென்னையே லவர்ஸ் டே கொண்டாடுது, ஆனா, இவனுக்கு ஒரு விஷ்க்கு கூடவழி இல்லை.

தனது கேபினில் சென்று அமர்ந்தான். அவனுக்கு அவள் ஞாபகம் தான் வந்தது.

“சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ...”

அவள் அனு, அவனின் காதலி. என்னதான்  அவன் ,அவனது மனைவியையும், காதலியையும் compareபண்ண கூடாதுன்னு நினைத்தாலும்  அவனுக்கு சில மாதங்களாக அவன் அதைதான் செய்கிறான்.

அவன் கல்லூரி படித்தபொழுது அவன் ப்ரபோஸ் பண்ண முதல் வருடம் வந்த லவர்ஸ் டே க்கு அவள் மிகப்பெரிய சர்ப்ரைஸ் தந்தாள்.அவன் அன்று ஒரு tournamentக்காக வேறு ஒரு காலேஜ்க்கு சென்றிருந்தான்.

அவள்  ஒரு விளையாட்டிலும்  கலந்து கொள்ளவில்லையென்றாலும் அவனுக்காக, அந்த கல்லூரிக்கு வந்து இரவு 12.00 மணிக்கு அவன் இருந்த இடத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்து அவன் அணிந்திருக்கும் மோதிரம் அவள்தான்  அன்று போட்டுவிட்டாள்.

ஆனால், திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும் ஒரு முறை கூட பாமா விஷ் பண்ணவில்லை.

“கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே...”

அனுவிற்கு பைக்கில் வேகமாக போவதென்றால் மிகவும் பிடிக்கும், அவனுக்கும் அது மிகவும் பிடிக்கும்.

ஆனால், பாமாவுக்கோ பைக்கில் போவது பிடிக்காமல், திருமணமாகி ஒரு வருடம் கழித்து கார் வாங்கிவிட்டான்.

இதைபோல், பல விஷயங்களை கூறலாம்.

தன் எண்ணங்களிலே உழன்றவன், பிரைவேட் நம்பர்லில் இருந்து அழைப்பு வந்தது. அட்டென்ட் செய்து காதில் வைத்தவன் அப்படியே உறைந்தான்.

“ காதலியின் அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்...”

பேசியது அவனது காதலி அனு தான்.(அப்படி என்ன பேசுனாங்கனு பார்ப்போமா...)

“ஹலோ..”

“ஹலோ அர்னவ், நான் அனு பேசுறேன்...”

“……”

“ ஹலோ, அர்னவ்...”

“ சொல்லு அனு...,எதுக்கு call பண்ணி இருக்க...”

“டேய்., நான் உன் லவர் டா, எதுக்கு call பண்ணனு கேக்குற..”

“அனு உனக்கு தெரியும்ல, எனக்கு marriage  ஆகிடுச்சு தெரியும்ல..”

“ உனக்கு marriage ஆகிடுச்சுனா என்னா...,நீ என்னோட லவர் இல்லையா..”

“ஏய்..,ஏண்டி லூசு மாதிரி பேசுற நீ என்னோட லவருங்குற மதிப்ப  இழந்து மூன்று வருஷம் ஆகுது...”

“ டேய்.., அப்ப கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆனதுக்கு அப்புறம் தான் நான் உன் லவர்ங்குறது உன் நினைவில் இருந்து போய் இருக்கு...”

“ம்..,அப்படிலாம் இல்ல...”

“ சரிப்பா, cool . நான் உன்னோட லவருங்குற மதிப்ப இழந்துட்டனு  ஒத்துக்குறேன். ஆனா, அதுக்கு நீ ஒன்னு பண்ணனும், பண்ணனா நான் ஒத்துக்குறேன்...”

“ சரி, என்ன பண்ணனும்...”

“ நீ, ஒழுங்கா நம்ப எப்போதும் சந்திகுற எடத்துக்கு வா..”

“ எந்த இடம்..”

“அடப்பாவி..,கல்யாணமானதும் இப்படியா மாறுவாங்க..”

“ என்ன மாறுனாங்க..”

“அதுலாம் ஒன்னும் இல்ல.இப்படியே நாம பேசுனோம்னா..,சண்டைதான் வரும்.அதனால நான்  சொல்லுறதா நல்லா கேட்டுக்கோ...,நாம special momentல எங்க சந்திப்போமா அங்க வந்துடு. அங்க வந்த பின்னாடி நீ சொன்னத எல்லாம் சொல்லு நான் நம்புறேன்..”

“ வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் தொட்டால் உருகும்

 நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே..”        

“ எதுக்கு வரணும்..”

“ ஏனா, நம்ப லவ் பண்ண ஆரம்பிச்சு ஒன்பது வருஷம் ஆகிடுச்சு...,அதனால எதுவும் சொல்லாம வந்து சேரு. இல்ல நான் என்ன பண்ணுவனு தெரியும்ல.., ஒழுங்கா வந்து சேரு..”

“ஹலோ..” என்று அவன் பேச அந்த சைடு பதில் வரவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.