(Reading time: 13 - 25 minutes)

2017 போட்டி சிறுகதை 27 - காற்று போன பலூன் - வத்சலா

This is entry #27 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலை கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - வத்சலா

Beauty

ழைய மாணவர்கள் தினத்தை ஆர்ப்பாட்டத்துடன் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களிடையே திடீரென ஒரு அமைதி... அந்த விசாலமான அறையின் வாசலின் நின்ற உருவத்தின் வசீகரமும், கம்பீரமும் அவர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது...

மெல்ல அமைதியை கிழித்துக் கொண்டு ஒரு குரல் ஒலித்தது...

"இது யாருன்னு தெரியலையா? எண்ணெய் வச்சு சப்புன்னு வாரின முடியோட, நீள மூக்கோட இருந்த ...."

'நம்ம லாவண்யா!!!'

'லாவண்யாவா??? அங்கே ஒரு சேர ஒலித்த சில குரல்களில் கலந்திருந்தது ஆச்சர்யம் மட்டுமே!!! 'லாவண்யாவா இப்படி மாறிப்போயிட்டா???'

அந்த அறையின் கதவில் சாய்ந்துகொண்டு அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவர் மீதும் பார்வையை சுழல விட்டபடி கம்பீரமாக நின்றிருந்தாள் லாவண்யா.

'ஆம் மாறித்தான் போய்விட்டாள் லாவண்யா!!!' உறக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது லாவண்யாவுக்கு.

ஆனால் மாற்றம் தோற்றத்தளவில் என்று சொல்வதை விட உள்ளத்தளவில் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்!!! அதனாலேயே அவளிடம் சேர்ந்திருக்கிறது  இந்த கம்பீரம்.

அங்கே அமர்ந்திருந்தவர்களிலிருந்து எழுந்தான் மனோஜ் அவள் அருகில் வந்து புருவங்கள் உயர புன்னகைத்தான்.

'ஹேய்... உன்னை பார்த்து பத்து வருஷம் இருக்குமா??? எப்படி உன்கிட்டே இப்படி ஒரு சேஞ்??? லுகிங் குட் யார்...'

அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல் இதழ்களில் ஓடிய கமபீரமான புன்னகையுடன் அவனை ஏற இறங்க பார்த்தாள் லாவண்யா.

அது ஆண்கள் பெண்கள் என இருவரும் படிக்கும் கோ எட் கல்லூரி அது. பத்து வருடங்களுக்கு முன் அவளுக்கு அந்த கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பட்டப்பெயர்.....

'காற்று போன பலூன்'

'சரி இதற்கெல்லாம் கோப பட முடியுமா??? கேலிகளும் கிண்டல்களும் கல்லூரி வாழ்வின் ஒரு அங்கம் தானே????' என்று பலமுறை தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டாலும் அவளது மனம் துவண்டு போய் நின்ற தருணங்கள்தான் நிறைய.

'இந்த உலகின் இலக்கணப்படி, இந்த உலகத்து மக்களின் பார்வையின் அளவுகோலின் படி அவள் அழகானவள் இல்லை!!! அதை அவளுக்கு மறுபடியும் மறுபடியும் உணர்த்தியவர்கள் பலர். தோலின் நிறமும், பருக்களின் வடுக்களும், சிறுவயதில் ஏற்பட்ட தீக்காயத்தின் வடுக்களும் நிறைந்த முகமும் இதோ இப்போது சொன்னார்களே அந்த நீள மூக்கும்.... இவை எல்லாமே இந்த உலகத்தின் அழகு இலக்கணத்தில் இடம் பெறாத பகுதிகள்.

எத்தனையோ அழகு சாதன க்ரீம்கள் வீட்டு வைத்தியங்கள் எதுவுமே இவளுக்கு துணை வந்ததில்லை. இவள் வாழ்க்கையில் மிகவும் வெறுத்த ஒரு விஷயம் புகைப்படம் எடுத்துக்கொள்வதும் அதை பார்ப்பதுவும். இவள் வயது பெண்கள் கண்ணாடி முன்னால் பல மணி நேரங்கள் செலவழித்த வயதில் இவள் கண்ணாடி முன்னால் நிற்பதை தவிர்த்து ஓடிய நாட்கள் பல.

அவளது தங்கை சுகன்யா. அவள் இதோ இப்போது சொன்ன அந்த அழகியில் இலக்கணங்களுக்கு உட்பட்டு பிறந்தவள். அவள் தெருவில் நடந்து சென்றால் எல்லாரும் ஒரு முறை நின்று அவளை திரும்பி பார்த்துவிட்டு செல்வார்கள் என அவளே சொல்லிக்கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

'இவளை புதிதாக பார்ப்பவர்கள் ஏன் உங்க முகம் இப்படி இருக்கு. தீக்காயமா??? என விசாரித்து உச்சு கொட்டிவிட்டு செல்வார்கள். சுள்சுள்ளென வலிக்கும் இவளுக்கு.

இவளுக்கும் சுகன்யாவுக்கும் இரண்டே வயது வித்தியாசம். பெரிய வசதிகள் இல்லாத குடும்பம் என்பதால் அம்மா, அப்பா இருவருக்குமே வேலை பார்த்து பொருள் ஈட்ட வேண்டிய கட்டாயம். அவர்களுக்கு இவள் மனநிலையை கவனிக்க தெரியவில்லை.

'ஏன் கா உனக்கு உங்க காலேஜ்லே பாய்ஸ் யாரவது ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா???' கேட்பாள் தங்கை.

'அப்படி யாரும் இல்லையே ஏன்???'

'இல்லை எவனாவது உன் முகத்தை கிட்டே பார்த்து பேசுவானான்னு ஒரு டௌட். ம்ஹூம்..... உனக்கு எப்படி கல்யாணம் நடக்கப்போகுதோ. உனக்கு ஆகி அதுக்கு அப்புறம் என் லைன் க்ளியர் ஆகி.... இவளிடம் நேரடியாகவே தங்கை அலுத்துக்கொண்ட நாட்களும் உண்டு.'

அவள் சொல்வது உண்மையோ என்று கூட பல நேரங்களில் தோன்றும். ஆண்கள் யாரும் அவளிடம் வந்து தாங்களாகவே பேசியதாக நினைவில்லை இவளுக்கு. இவளிடம் அப்படி யாராவது வந்து பேசிவிட்டால்..

.'என்னடா லவ்வா... உன் மூஞ்சிக்கு லாவண்யாதான் செட் ஆகும்'  என நண்பர்களின் கேலிக்கு ஆளாக வேண்டி இருக்கும் அவர்கள். அதற்கு பயந்தே இவள் அருகில் யாரும் வரமாட்டார்கள். அப்போதெல்லாம் மனதின் அடி ஆழத்தில் ஒரு வலி பரவுவதை அவளால் தவிர்க்கவே முடிந்ததில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.