(Reading time: 22 - 44 minutes)

தோ பார் ஆகாஷ், நான் நேரடியா விசயத்துக்கே வரேன்...நீ ஏன் இத்தன வருசமா கல்யாணத்தை தள்ளிப்போட்டுட்டே வரேன்னு எனக்குத் தெரியல...காரணம் எதுவாவேனும்னாலும் இருந்துட்டுப்போகட்டும் அது எனக்குத் தேவையில்ல.எங்க கடமைய நாங்க முடிச்சே ஆகணும்.எனக்கு இருக்குறது ஒரே மகன்.அவனும் வெளிநாட்டுல தனியா இத்தன வருஷம் கஷ்டப்படுறது எங்களுக்குப்பிடிக்கல. எங்க காலத்துக்குப்பிறகு உனக்குன்னு ஒரு சொந்தம் வேண்டாமா? அப்பா அவரோட நண்பர் பெண்ணை உனக்கு பாத்து வைச்சுருக்காங்க...நீ நாளைக்கு எங்ககூடவந்து அந்த பெண்ணை பாக்குற அவ்வளவுதான். இந்த தடவ நீ இதுக்கு ஒத்துக்காம இருந்தா அடுத்த தடவ அப்பா சொன்ன பொய் நிஜமாவே நடக்கும்.இந்தா இந்த கவர்ல பொண்ணு போட்டோ இருக்கு..”, என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆகாஷ் அதிர்ந்துபோய் நின்றான். தன் விருப்பத்திற்குமாறாக எதையுமே இன்றுவரை செய்யாத அம்மாவா இவ்வாறு பேசிச்செல்வது என்ற அதிர்ச்சி. ஏனோ அந்த போட்டோவை பார்க்க விரும்பவில்லை அவன்.

மறுநாள் விடிந்தது. கண் திறக்கும்போதே இன்றைய நாளை எப்படியாவது தன் வாழ்விலிருந்து வெட்டி எடுத்துவிட முடியாதா? என்ற ஏக்கம் அவனுள்ளே. “இன்று மாலை பெண் பார்க்கச்செல்ல வேண்டும்...நினைவில் வைத்துக்கொள்...” என்று காபியுடன் வந்தது அதட்டல் குரல்.

“அம்மா... நான் சுரேசுடன் சென்று கொஞ்சம் பர்சேஸ் பண்ணிவிட்டு ரெண்டுபேரும் மதியம் லன்ச்க்கு வரோம்..” என்றான் ஆகாஷ்..மறுக்கவில்லை அம்மா.நண்பர்கள் இருவரும் வண்டியைக் கிளப்பிக்கொண்டு ஒரு துணிக்கடையை நோக்கிச்சென்றனர். அங்கே நான்கு பெண்கள் கடையில் ஒருவரைக்கூட விடாமல் கமெண்ட் செய்து சிரித்துப்பேசி கேலி செய்துகொண்டிருந்தனர்.

அதில் ஒரு பெண் ஆகாஷை நோக்கி.. “இங்கே பாருங்கடி சீரியஸ் மாஸ்டர்.. போட்டோக்கு போஸ்கொடுக்கக்கூட இவர் வாழ்நாள்ல சிரிச்சிருக்கமாடார் போல..” என்று அவன் காதில் விழும்படி நக்கல் செய்து சிரித்தாள். அவ்வளவுதான் கோபம் தலைகேறியது அவனுக்கு. விறுவிறுவென அவள் அருகே சென்ற அவன்,கோபத்தில் என்ன வார்த்தைகள் பேசுகிறோம் என்று கூடத் தெரியாதபடி அவளைத் திட்டிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.. “ சரியான ராட்சசிடா அவ...” என்று சுரேஷிடம் கத்தினான்.

”ஆமாம்டா..ஆமாம்.....அழகான உன் ராட்சசி...கல்யாணத்துக்கு முன்னாடியே அவள நீ இப்படி மிரட்டி விரட்ரியே...? கல்யாணம் ஆச்சுனா என்ன பாடு படுத்துவ?” என்றான் கேலியாக. அதிர்ந்தான் ஆகாஷ்.

“என்னடா லூசுமாதிரி உளறிட்டு இருக்கே?..” என்றான்.

“நீதான் லூசு...உங்க அப்பா அம்மா உனக்காக பாத்து வச்ச பொண்ணு போட்டோவைக்கூட நீ பாக்கலைய..?” என்றான் அவன்.

ஆகாஷிற்கு கோபம் தலைக்கேற, ”இவளை மட்டும் திருமணம் செய்ய ஒத்துக்கிட்டா நாம செத்தோம்..”,என்று தன் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

“உன் முகத்தைக் கொஞ்சம் கண்ணாடில பாரு,,, ரொம்ப கேவலமா இருக்கு.. நீ என்னை கேலிபண்றியா..” என்ற ஆகாஷின் வார்த்தைகள் அவளை ஏனோ காயப்படுத்தியது. கோபத்தில் வீடு திரும்பிய நிர்மலா, ”அம்மா ஒரு கப் காபி..” என்று கத்திவிட்டுத் தன் அறைக்குள் சென்றாள். காபியுடன் வந்த அம்மா, நிர்மலாவின் முகவாட்டத்தைக் கண்டு “ என்னாச்சுடா ..? ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கே..?”, என்று கேட்க, நிம்மி நடந்த அனைத்தையும் கூற அம்மா சிரித்தார். “ இன்னும் நல்லா சிரி..” என்று நிம்மி கத்தினாள்.

“இங்கே பாரு நிம்மி உன்மேலதான் தப்பு இருக்கு. நீ போய் அந்த பிள்ளைகிட்ட வம்பு பண்ணாம இருந்திருந்தா அந்த பிள்ளை தன் வேலையப்பார்த்துட்டு போயிருக்கும். நீதான் தேவையில்லாம வாயைக்கொடுத்து வங்கிக்கட்டிகிட்ட...சரி அதலாம் விடு..கொஞ்சம் தூங்கி பிரெஷ் ஆகு..” என்றார் அம்மா. “ஏம்மா இப்போ அசிங்கமா இருக்கேனா?..எல்லாம் நல்லாத்தான் இருக்கேன்..” என்று நிம்மி எதிர்த்துப்பேசினாள்.

“அதுக்கில்லைடி ஈவ்னிங் உன்னை....உன்னை...பொண்ணு பார்க்க வராங்க...” என்று தயங்கித் தயங்கி அம்மாவிடமிருந்து வார்த்தைகள் வர திடுக்கிட்டாள் நிம்மி. “உங்க அப்பா நண்பரோட பையன். வெளிநாட்ல வேலையாம்...தங்கமான பையனாம்டி...முதலிலேயே சொல்லிருந்தா நீ இன்னைக்கு வீட்டுப்பக்கமே வந்திருக்கமாட்டன்னுதான் சொல்லல..சாரி..” என்றார் அம்மா.

மாதவன்-புஷ்பா தம்பதியின் ஒரே மகள் நிர்மலா. பொறியியல் படிப்பை முடித்துவிட்டு மேலும் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுபவள். எப்பொழுதும் நண்பர்களுடன் கேலியும் கிண்டலுமாகத் தன் பொழுதைக் கழிக்கும் சுட்டிப்பெண். தன் சிறுவயதிலிருந்தே மிகவும் செல்லமாக வளர்ந்தவள்.

“என்னை வீட்டைவிட்டுத் துரத்த ரெண்டுபேரும் முடிவு பண்ணிட்டீங்கள்ல...பார்ப்போம் இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு..”

“நீ முதல்ல மாப்பிள்ளைய பாரு அப்புறமா எல்லாம் பேசிக்கலாம்..”

“எல்லாம் என் தலையெழுத்து..” மனதில் நொந்துகொண்டாள் நிம்மி.

மாலை மணி நான்கு. நிம்மி தன் அறையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. “நிம்மி நீ இன்னுமா தூங்குற? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க! சீக்கிரம் எழுந்து ரெடி ஆறவழியப்பாறு..” அம்மா சத்தம் போட்டார். ”ச்சே! என்னதான் பெண் பார்ப்பதோ! இதே நம்மள மாப்பிள்ளை பார்க்க வர சொல்லிருந்த ஒரு டூர் மாதிரி போய் என்ஜாய் பண்ணிருக்கலாம்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.