(Reading time: 22 - 44 minutes)

காஷ் அதுவரை ஒரு ஹாஸ்டலில் தன் நண்பன் குமாரோடு தங்கிருந்தான். திடீரென இத்திருமணம் நடைபெற்றதால் அவனால் இங்கு தங்க எந்த ஏற்பாடும் செய்ய முடியவில்லை. அதனால், நிர்மலாவுடன் தான் தங்கி இருந்த ஹாஸ்டலுக்கே சென்றான். டாக்ஸி ஹாஸ்டல் வந்தடைந்தது.

இருவரையும் பார்த்த குமாருக்கு வியப்பு. “ஹேய்... என்னடா..? பேச்சுலரா ஊருக்குப்போய்ட்டு இப்போ தம்பதியா வந்து நிக்குற..?சொல்லவேயில்லடா..?” என்றான். “நான் அதலாம் அப்புறம் தெளிவா சொல்றேன் இப்போ நாங்க தங்க ஏதாவது ஏற்பாடு செய்யனும்...” என்று ஆகாஷ் இழுக்க, “ச்சீ ..என்னடா இதுக்குப்போய் ...நான் வேற ரூம்ல தங்கிக்குறேன் நீ புது வீடு பாக்குறவரைக்கும்....” என்றான் குமார். “ தேங்க்ஸ்டா மச்சி..” குமாரிடம் சொல்லிவிட்டு நிர்மலாவுடன் ஆகாஷ் ரூமிற்குச் சென்றான்.  

காலை நிர்மலா எழும் முன்பே அவன் அலுவலகம் செல்வான். இரவில் அவள் உறங்கியப் பின்பே அவன் ரூமிற்கு வருவான். இவ்வாறாக ஒரு வாரம் கழிந்தது. ஒரு அபார்ட்மெண்டில் ஆகாஷ் வீடு பார்த்து அதில் இருவரும் குடியேரினர். ஆகாஷ் நிர்மலவைப்பற்றி கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்கத்துவங்கினான்.

இதே நிரமலா இடத்தில் வேறொருப் பெண் இருந்திருந்தால் இந்த நேரம்

“ஏன் நீங்க இப்படி இருக்கீங்க ..என்னை நல்லாப் பாத்துக்க மாட்டிங்கீறீங்க...” என்றெல்லாம் சண்டைபோட்டு பெற்றோரிடம் முறையிட்டிருப்பார்களே, ஆனால், இவளோ நம்மை நம் போக்கிலேயே விட்டுவிட்டாளே என்று யோசிக்கத்துவங்கினான்.அவள் மேல் அவனுக்கு மதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் அலுவலகத்தில் பணிபுரியும் ஆகாஷின் நண்பர்கள்,“டேய்... கல்யாணத்துக்குத்தான் இன்வைட்பண்ல...அட்லீஸ்ட் ஒரு டின்னர் பார்ட்டியாவது கொடுக்கலாம்ல..” என்றனர். “ ஓ அதுக்கென்ன தாராளமா...” என்றவனின் மனதில் போராட்டம். இரவு நிர்மலாவிடத்தில் அவன் தயங்கித்தயங்கி வந்து நின்றான்.அவன் ஏதோ அவளிடம் எதிர்பார்ப்பதை உணர்ந்த நிர்மலா, ”என்ன வேணும்..? சொல்லுங்க..” என்றாள்.

“அது..அது..ஒண்ணுமில்ல..” என்று அவன் இழுக்க...” ஓ அப்படியா சரி..” என்று அவள் நகர முயற்சிக்க, ஆகாஷ், ”இல்லை..இருக்கு...என்னோட நண்பர்கள் டின்னர் பார்ட்டி கேட்டாங்க....நான் எல்லா ஏற்பாடுகளையும் ஹோட்டெல்ல பண்ணிடறேன்..நீ..நீ...வந்தாமட்டும் போதும்..” என்றவன் மனதுக்குள், “அய்யயோ..இன்னிக்கு இவ நம்மள என்ன பாடுபடுத்தப்போறாளோ..” என்று நினைத்தான். ஆனால் அவளோ, “ஏன் ஹோடெல்ல ஏற்பாடு செய்றீங்க..?நானே எல்லாம் ரெடி பண்றேன்..உங்களுக்கு எதுவும் ப்ராப்லம் இல்லாட்டி...” என்றாள்..

ஆச்சர்யம் அடைந்த அவன், “சரி அப்போ நாளைக்கு உனக்கு ஒகேவா..? நான் லீவ் போட்டுட்டு உனக்கு உதவியா இருக்கேன்..” என்று சொல்லிவிட்டு அவள் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் மகிழ்ச்சியில் நகர்ந்தான். தன் நண்பர்கள் அனைவரையும் தொலைபேசியில் அழைத்துவிட்டுப் பின்னர் நிம்மதியாக உறங்கினான்...அவன் கொஞ்சம் கொஞ்சமாக நித்யாவின் நினைவிலிருந்து வெளிவருவதை அவனே உணரவில்லை.

றுநாள் அதிகாலையிலேயே இருவரும் எழுந்தனர். நிர்மலா இன்டர்நெட்டிலிருந்து முதல் நாள் இரவே எல்லா உணவுகளுக்கான செய்முறைகளையும் தயார்ப்படுத்தி வைத்திருந்தாள். ஆகாஷ் சமைக்கத் தேவையானவற்றை அவளுக்கு வங்கி வர, அவள் ஒவ்வொன்றாக  சமைத்துக்கொண்டிருக்கும்போது ஆகாஷ் அவளிடம் பேச்சுக்கொடுக்க முயற்சித்தான்.

“நீ..நீ..உனக்கு சமைக்கத் தெரியுமா..?

“ம்ம்..ஏதோ தெரியும்..” இருவரும் கொஞ்சம் பேசத்துவங்கினர்..

நிர்மலா எல்லாம் சமைத்துமுடிக்க,நேரம் மாலை ஐந்தைத் தொட்டது. “ சரி நீ போய் சீக்கிரம் ரெடியாகு நான் போய் பார்ட்டி ஹாலை டெகரேட் பண்ணிட்டு வரேன்..” என்று ஆகாஷ் நகர்ந்தான். சமைத்த அனைத்தையும் பார்ட்டி ஹாலுக்கு இருவருமாக கொண்டு வந்து வைத்தனர்.

நீல நிறப் புடவையில் மிகவும் எளிமையாக அழகாக தன்னைத் தயார் செய்துகொண்டாள் நிர்மலா. அவள் அழகில் கொஞ்சம் சொக்கித்தான் போனான் ஆகாஷ். அவன் நண்பர்கள் ஒவ்வொருவராக வர அவர்களை இருவருமாக வரவேற்றனர். அனைவரையும் நிர்மலாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ஆகாஷ்.

பார்ட்டி இனிதே நடந்துகொண்டிருக்கும் வேளையில் “ஹாய் ஸ்வீட்டி..” என்று யாரோ ஒருவர் நிர்மலாவைப் பின்னாலிருந்து அழைக்க திடுக்கிட்டுத் திரும்பினாள் நிர்மலா...

”நான் சுதா..ஆகாஷின் தோழி” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள். அவளுக்கு ஆகாஷ்-நித்யா விஷயம் தெரியும்.

ஆகாஷ், நிர்மலாவிடத்தில் நித்யாவைப் பற்றி நிச்சயம் சொல்லியிருப்பான் என்று நினைத்து இவள் அனைத்தையும் நிர்மலாவிடம் உளறிக்கொட்டினாள். அதிர்ந்துபோன நிர்மலா அதை வெளியே காட்டிக்கொள்ளாமல்..”இதோ ஒரு நிமிஷம் வந்துடுறேன்..” என்று அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.