(Reading time: 21 - 41 minutes)

ள்ளி கால நினைவுகளில் மனம் கனிந்தவராக சாமிகண்ணு “அவர எப்படி மறக்கமுடியு ராமு?”

“அவரு அப்ப சொல்லிகுடுத்த பாடம் இப்போதா எனக்கு புரிஞ்சது”

வியப்படைந்த சாமிகண்ணு தன் இடபுறமாக நடந்து கொண்டிருந்த ராமுவின் முகத்தை ஏறிட்டார்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு

குறளை சொன்ன ராமு மேலும் தொடர்ந்தார், “பள்ளிகூட போகும்போது புரியாத இந்த குறள், எனக்கு இப்போதா புரிஞ்சது.  உனக்கு ஒரு கஷ்டம்னு தெரிஞ்சது என்னால் சும்மாயிருக்க முடியல உனக்காக நானிருக்கேன்னு சொல்லனும்னு தோனிச்சு… உடனே இங்க ஓடி வந்தேண்டா சாமி” 

நெகிழ்ந்துப்போனவராய் ராமுவை அணைத்து கொண்டார் சாமிகண்ணு.

“அன்னைக்கு எங்க நான் விவசாய பண்ணாம தொழிலுன்னு சொல்லிக்கிட்டு உறுப்படியில்லாம போயிருவேனோன்னு நீ பயந்த… என்னோட நண்பனா என்னை வழிநடத்த உனக்கு எல்லா உரிமையு அன்னிக்கு இருந்தது இன்னிக்கு இருக்கு.  ஆனா என்ன… இத புரிஞ்சிக்க இத்தன வருச ஆயிருச்சு”

“எம்மனசுல என்ன இருந்ததுன்னு சரியா புரிஞ்சிக்கிட்டடா ராமு.  அன்னிக்கு உன்ன பெத்தவங்களு அழ நீ வேற நெலத்த வித்துட்டங்கிற கோவத்துல கைநீட்டிட்டே.  அத நெனச்சு நா வருத்தபடாத நாளேயில்லடா.  அதையெல்லா மறந்து எங்கிட்ட வந்துட்டியே… இதுவே போது… ரொம்ப பெருமையா இருக்கு ராமு நா உன்னோட நண்பன்னு சொல்லிக்க”

“நிலம் வித்த பணத்தோட சென்னைக்கு போயி இரும்பு பொருள வச்சு தொழில் பண்ண ஆரம்பிச்சே.  இன்னைக்கு எந்த குறையுமில்லாம தொழில் நல்லா நடந்திட்டிருக்கு.  அது சம்மந்தமா ஒருத்தர பாக்கதா இன்னைக்கு தஞ்சைக்கு வந்த.  அதுவும் நல்லதா போச்சு இல்லனா நாம சேர்ந்திருக்க முடியாமலே போயிருக்கு.  பேங்க் வாசல்ல உங்கிட்ட பேசாம போயிருந்தாலு உன்னை பார்த்ததுல மனசுக்கு ஒரு சந்தோஷம்.  அது என்னன்னு யோசிச்ச போதுதா நீ என்னோட நல்லதுக்காக செஞ்சதெல்லா எனக்கு புரிஞ்சது.  உடனே உன்னை தேடி வராம என்னால இருக்க முடிலடா சாமி”

ஒருவரையொருவர் அணைத்து சிறிது நேரம் மனமார அழுதனர்.  எத்தனையோ வருடங்கள் கழித்து ஒன்று சேர்ந்த நண்பர்களுக்கு அதன் பிறகு பேசி கொள்ள நிறைய விஷயங்களிருந்தது.

சாமிகண்ணுவின் அன்பு கட்டளையின்படி ராமமூர்த்தி அவருக்கு நேரடியாக எந்த உதவியும் செய்ய முடியாமல் போனது.  வேறு வழியின்றி வங்கி கடனை பெற்று தந்தார்.  அந்த வங்கி அதிகாரியை தன் நண்பனிடம் மன்னிப்பு கோற வைத்ததோடல்லாமல் அவரின் இழிவான செயலுக்கு தண்டனையும் கிடைக்க செய்தார்.

பயிர்களின் உயிரூற்றாய் நீரும் சாமிகண்ணுவின் உயிரூற்றாய் ராமமூர்த்தியின் நட்புமானது.

தினம் தினம் எத்தனையோ விவசாயிகள் மாரடைப்பாலும் தற்கொலை செய்து கொண்டும் மடிகின்றனர்.  இயற்கை அவர்களை ஏமாற்றியதில் மனமுடைந்து இருப்பவர்களுக்கு நம்மாலான உதவியை செய்ய வேண்டும்.  இப்படி நாமிழந்து கொண்டிருக்கும் விவசாயிகளை எல்லாம் என்னால் காப்பாற்ற முடியவில்லை.  ஆனால் சாமிகண்ணுவை ராமமூர்த்தி என்ற நட்பின் மூலம் காப்பாற்ற முடிந்தது என்னுடைய பாக்கியம்.  ஏதாவது அதிசயம் நிகழ்ந்து எல்லா விவசாயிகளுக்கும் ராமமூர்த்தி போன்ற ஒரு உதவி கரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் என்னுள் எழுகிறது.  என்னுடன் சேர்ந்து நீங்களும் இயற்கை அன்னையிடன் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுகிறேன்.  விவசாயிகளின் நலனுக்காக பயிரின் விளைச்சலுக்கேற்ப பஞ்ச பூதங்களும் உதவ வேண்டும் என்பதுதான் அது. 

உங்களின் கோரிக்கை இயற்கை அன்னையை அடைந்திருக்கும் என்று நம்புகிறேன்! நன்றி!!

விவசாயித்தை பற்றிய விவரங்களை கூகிலிலிருந்து (Google) எடுத்து இக்கதையில் பயன்படுத்தியிருக்கிறேன்.  தவறுகளிருந்தால் மன்னியுங்கள்.

 

This is entry #73 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை − நட்பு

எழுத்தாளர் - தமிழ்தென்றல்

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.