(Reading time: 14 - 27 minutes)

வ்ளோ தூரம் எம்மேல அக்கறை எடுத்தற்கு நன்றி இமயவரம்பன், நீங்க வந்த வேலையை பார்க்கலாம்” என்று சொல்லலி திரும்பாமல்சென்றாள். நண்பர்கள் அணைவரும், செய்வதறியாது திகைத்து நின்றனர்.

காதல்…………கனவாய் கலைந்துப்போனது இமயவரம்பனுக்கு, அடங்காபிடாரி என்று, சொல்லி காதல் முறிவிற்கான காரணம் கற்பிப்பது, எளிதாயத்தான் இருக்கும் அவனுக்கு. காதல்…. கடந்த போன ஒரு பொருளாய் போனது,

கல்லாய் அவளை உறைவித்தது! தன்மானம் பெண் கொண்டால் தறுதலைத்துவமாக போனதில் சிவஸ்ரீக்கு வியப்பொன்றும் இல்லை, அப்பாவின் இறுதி சடங்கின் வாக்குவாதங்கள் தொடர்ந்தன, பிரச்சணைகளின் கிளைகள் இன்னும் விரிந்தன, பற்றி எரிந்தன. மாணிக்க மாமா தொடர்ந்து இவர்களுக்கு ஆதரவாகவே நின்றார். சமமாண படிப்பிலும், உத்யோகத்திலும் உள்ள ஒருவன்தான் தன் சுயமரியாதையைப் பேணுவான் என எண்ணியது எத்தணை தவறேன அவளுக்குப் பட்டது. மாமா கொள்ளி வைக்க தயாராக இருந்தாலும் ஊரார் சொன்ன காரணம், சிவஸ்ரீயை நெருடியது, தன் பொருட்டு மாமா அவர் குடும்பத்தினரை பகைத்து கொள்வது அவளுக்கு ஒப்பவில்லை.

ரார் அவளை கடுமையாக விமர்சித்தனர், எச்சரித்தனர் , வசைபாடினர். சிவஸ்ரீ கலங்கவும் இல்லை , களைக்கவும் இல்லை…. அவள் அம்மா வாதாடி தோற்று மயக்கமாணாள். சிவஸ்ரீ காவல்துறையில் புகார் பதிவு செய்து அப்பாவுடையது மரணம், இல்லை கொலை என்றாள்.

கொலையை கண்டிக்க தயாரையிருந்த ஊர், சிவஸ்ரீயின் கலாச்சார மீறலை ஏற்கவில்லை, சுற்றங்கள் அனைத்தும் விலகின, லீலா அத்தை மட்டும் வேறு ஊர் ஆள் என்பதால் குடும்பத்துடன் இவர்களுக்கு துணை நின்றாள். சிவஸ்ரீ குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாய் பஞ்சாயத்தில் தெரிவித்தனர்.

” தனியா ஊரையே பகச்சுக்கிட்டியே சிவா, இதுக்கு நீ மாமாவே, காரியம் பண்ண சொல்லலாம், நீ மாமாவையே கட்டிக்க உனக்கு அதான் நல்லது” என்றாள் லீலா அத்தை.

” இல்லத்தே மாமா வீட்டூ ஆளுங்க குழந்தையை காரணம் காட்டுறாங்க…. . அது மாமாக்கு நல்லதுயில்ல, அப்பா பேரசொல்லி மாமாவ ஒதுக்கறதுல எனக்கு விருப்பமில்ல, மாமாவ கட்டிக்க எனக்கு தகுதியும் இல்ல” .

இதை கேட்டு கொண்டிருந்த மாணிக்கம் வாழ்க்கையில் சிவஸ்ரீயுடன் இணையாவிட்டாலும் , அவள் மேற்கொண்ட முயற்சியில் அவளோடு இணைய உறுதி கொண்டான்.

மாணிக்க மாமாவின் ஏற்பாட்டில் ஆட்களை வரவைவத்து சிவஸ்ரீ அப்பாவின் இறுதி காரியங்களை நிறைவேற்றினாள், கொள்ளியிட்டு அவளின் சுயத்தை பறைசாற்றினாள்.

அப்பாவின் சுடலை எரிகையில் அவர் ஆன்மா ” மனச வருத்திக்காத சாமி…. . ” என சொல்வதாய் இருந்தது, தீ ஜீவாலைகள் மேல்லெழும்ப சிவஸ்ரீயின் கண்கள் ஆறாய் பெருக்கெடுத்தது. மரணித்தது அப்பா மட்டுமல்ல பவித்ரமாய் எண்ணியிருந்த அவள் பகட்டு காதலும்தான். அது வேறும் தீயாக அல்ல பெண்களை வாரிசுகளேன ஏற்காத சமூகத்தின் இருளை ஓட்ட வந்த ஆரம்ப ஜோதியாய் அவளுக்கு தோன்றியது. மனவோட்டத்தில் அணைத்தும் சுழல மயங்கி மாணிக்க மாமா கையில் விழுந்தாள் சிவஸ்ரீ. கண் விழித்ததும் சிவஸ்ரீயை கைகொடுத்து தாங்கிய மாணிக்கம் “ எல்லாமே முடிஞ்சி போச்சு” என்றவனின் குரலில் சோகம் ஆனால் முகத்தில் மலர்ச்சி……. !

This is entry #141 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - முடிவுக்கான கதை

எழுத்தாளர் - கௌரி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.