(Reading time: 24 - 48 minutes)

ன்று மதியம் தமிழ்ரஞ்சனை வீட்டுக்கு அழைத்து போக மீண்டும் பள்ளிக்கு வந்தாள் பார்கவி. தமிழ் ரஞ்சன் “அம்மா” என்றபடி ஓடி வர பவியின் கண்களோ காவியாவைத் தேடின. பார்கவியை பார்த்துக் கொண்டே வந்த காவியாவும், திடீரென “அப்பா” என்று அழைக்க, பார்கவிக்கு சிலிர்த்து போனது.

“ என் நண்பன்..! எனக்கென எப்போதுமே இருந்த என் பள்ளித் தோழன் இங்கு வந்திருக்கிறானா?” காவியா குரல் போன திசையை பார்த்துக் கொண்டே “ ரவீன்” என்று பார்கவி அழைக்க அவனும் ஆர்வமாய் அவள் பக்கம் திரும்பினான்.

இத்தனை நாட்கள் பேசாத வார்த்தைகள் அனைத்துமே இன்று முகத்தில் நவரசமாய்  பிரதிபலித்தன. அதற்குள் ரவீனின் மனைவி, ஹாரன் ஒலியை எழுப்பிட, “கமிங் ஹனி”என்றான் அவன். பார்கவியை நோக்கி வந்தவன்,

“ எப்படி இருக்க பவி?” என்று கேட்டான்.

“ நலம்” என்று சொல்லக் கூட வாய்வராமல் தலையசைத்தாள் பார்கவி.

“வைஃப் வெயிட் பண்ணுறா.. லேட்டா போனா சண்டை வரும்.. பார்க்கலாம்..”என்று விடைப்பெறும் தொனியில் சொல்லிவிட்டு அவன் நகர,

“ம்ம்”என்றவள் மனதிற்குள் அவ்வளவுதானா? என்று எண்ணிக் கொண்டாள்! இவ்வளவுதானா நம் நட்பு? வாழ்க்கை எனும் விசை உன்னையும் என்னையும் திசைமாற வைத்து விட்டதா?

சட்டென பொங்கிய ஏமாற்றத்தை அவள் மறைக்க முயல,

“பவி .. உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது?” என்று அன்று தான் தவறாக சொன்ன வசனத்தை பேசிக் காட்டிவிட்டு புன்னகையுடன் கை அசைத்தான் ரவீன்.

அவ்வளவுதான்! இது போதுமே அவளுக்கு. அன்று ரவீன் தவறாக படித்த வசனத்தை பலமுறை ரவீனிடம் சுட்டிகாட்டி சிரிப்பாள் பார்கவி. அவனுக்குமே அவள் சொல்லிக்காட்டும் விதத்தில்  சிரிப்புத்தான் வரும்.

இத்தனை ஆண்டுகள் கடந்தும், தன் நண்பன் அதை மறக்கவில்லை என்பதற்கு அர்த்தம் தங்களது நட்பையும் அவன் மறக்கவில்லை என்பதுதானே? இதயம் லேசாகிட, நண்பனுக்கு கை அசைத்து வழியனுப்பியவள், தமிழ்ரஞ்சனுடன் தன் வழியை நோக்கி பயணத்தை ஆரம்பித்தாள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்திருந்தால்

சொத்தில் பங்கு கேட்டிருப்பாய்!

நீயோ நட்பெனும் தாயின் மடி சேர்ந்து

எனக்கே மாபெரும் சொத்தாக மாறினாய்!

கர்வம், கோபம் இதன் அர்த்தம் புரியாமல்

என்னை அரவணைத்த ஒரே நட்பு நீதான்!

இன்று நண்பர்களை தேர்ந்தெடுக்கவும், சில தகுதிகள் தேவையாம்!

நீ எதைக் கண்டு என்னை உன் தோழியாக்கினாய்?

காலம் என்றும் புயல் உன்னையும் என்னையும்

பிரித்து பார்த்தது!

நமது நட்பெனும் மரத்தை அசைத்து பார்த்தது!

பல நாள் பார்க்காமல் போனோம்!

பேசாமல் போனோம்! ஆனால் நினைக்க மறக்கவில்லை!

ஆயிரம் உறவுகள் வந்தாலும்,

மனதில் ஆணிவேராய் நின்றவனே,

நீயும் நானும் வேறல்ல..!

எனதருமை நண்பனே!

தொடரட்டும் நம் நட்பு

நம் வாரிசுகளின் மூலம்!

மனதில் தோன்றிய புது உற்சாகத்தோடு பார்கவி பயணிக்க, நாமும் விடைபெருவோமா?

ஹாய் ப்ரண்ட்ஸ். “ நட்பு மற்று பள்ளி வாழ்க்கை” என்ற பிரிவில் இக்கதையை எழுதியுள்ளேன்! இந்த கதையில் வந்த கடந்த கால நினைவுகள் முற்றிலும் உண்மை. அந்த பார்கவி மேடம் அடியேன்தான். இடைநிலை கல்வி படிக்கும்போது நானும் என் நண்பனும் வெவ்வேறு பள்ளியில் படிக்க ஆரம்பித்தோம். பல வருட பிரிவுக்குப் பின் மீண்டும் பேச ஆரம்பித்தோம். என் நண்பன் எனக்கு கடைசியாக அனுப்பிய தீபாவளி வாழ்த்து அட்டையை ஃபோட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பினேன். “பதினொரு வருடங்கள் கழித்தும் உன் வாழ்த்து அட்டையை பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன் பார்” என்று சொன்னேன்.  “சூப்பர்” என்று ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது. “அவ்வளவுதான் நமது நட்பா?”என்று நான் வருத்தப்படும்போதே, “ உங்கள் முகம் ஏன் வட்டமாக உள்ளது?” என்ற வசனத்தை என் நண்பன் அனுப்பியதும் ஒரே சந்தோஷம்.

பொதுவாக ஆண்கள் நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவில் வைத்திருப்பது கொஞ்சம் கஷ்டம். அது உளவியல் ரீதியாகவே ஆண்களின் இயல்பு. இருப்பினும், நம்ம நண்பனின் நினைவில் இந்த வசனம் இருக்கிறதே என்ற சந்தோஷம்தான் இந்த கதைக்கு காரணம். என்னை சிலிர்க்க வைத்த நட்புக்கும் நண்பனுக்கு இந்த கதை சமர்ப்பணம்.

 

This is entry #143 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - கரு சார்ந்த கதை - பள்ளி / கல்லூரி நாட்கள்

எழுத்தாளர் - புவனேஸ்வரி கலைசெல்வி

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.