(Reading time: 8 - 16 minutes)

ர்ஜுனுக்கு வலித்தது! நா ஏன் உன்ன விட்டு போனேன்னு சொன்னா தாங்கமாட்டடி நீ! உன்ன விட்டு போய் நா மட்டும் ஹப்பியாவா குட்டிமா இருந்தேன். என கலங்கிவிட்டு கட்டிலின் மறுமூளையில் படுத்துக் கொண்டான்!

ஒரு மாதகாலமும் ஓடிவிட்டது.அர்ஜுனுக்காக எல்லாவற்றையும் பார்த்து செய்தாள்!ஆனால் அவனிடம் விலகியே இருந்தாள் பவித்ரா! அர்ஜுனால் தாங்க முடியவில்லை! அவன் சமாதானங்கள் யாவும் தோல்வியில் முடிய ஒரு முடிவெடுத்தான். புரியாத சில விடயங்ளை தனிமை புரிய வைக்கும் நினைத்தான்.அதற்கான சந்தர்ப்பத்தை அவன் ஆபிஸ் வேலையும் அமைத்துககொடுக்க மூன்று வாரம் பவித்ராவை பிரிந்து வெளியூர் சென்றான்.

அர்ஜுனுடன் முன் போல் சகஜமாக பேசாவிட்டாடாலும் தன்னவன் தன் அருகில் இருப்பதையே பவித்ரா விரும்பினாள். அந்த சிறு பிரிவைக்கூட அவளால் தாங்கமுடியவில்லை. அர்ஜுனை பற்றியே அவள் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது! முன்னைய ஞாபகங்ள் கண்முன்னே தோன்றி மறைந்தன.

மூன்று வருடங்கள் முன்பு ஒரே ஆபிஸில் ஒன்றாக பணிபுரிந்த போது ஏற்பட்ட சிநேகம் அர்ஜுன் பணிபுரிவதற்காக ஆன்சைட் போனபோது இணையம் வழியாய் காதலாய் மலர்ந்தது! அர்ஜுனே மிகவும் நேர்மையாக தன்காதலை சொன்னான். தனக்கு ஹார்ட்டில் இருக்கும் சிறு பிரச்சினை உட்பட கூறினான் பவித்ராவை கட்டாயப்படுத்தவில்லை! அர்ஜுனின் மேல் கொண்ட பிரியமும் அவனின் நேர்மையும் அவனது ரசனைகளும் பிடித்துவிட அவனின் பிரச்சினை முன்னர் தெரிந்து இருந்ததாலும் மனப்பூர்மாக அவன் காதலை ஏற்றுக்கொண்டாள்! அவர்கள் இருவருக்குள்ளும் சிறு மிஸ்அன்டர்ஸ்டனிங் கூட வந்ததில்லை!

டேய் உன்னப் போல யாராலையும் என்னை லவ் பண்ண முடியாது!நீ எப்போதும் புரியாதபுதிர் தான்! நா பீவர்ல ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனப்போ எனக்காக லீவு போட்டுவந்தாய்..! லவர்ஸ்டே பத்தி முன்னைய நாள் எவ்வளவு எல்லாம் கமன்ட் பண்ணிட்டு மொர்னிங் கிப்டோட வந்து இன்ப அதிர்ச்சி கொடுப்பாய்!நான் என்னை பத்தி தெரிஞ்சி வைச்சிருக்கேனோ தெரியல! ஆனால் நீ என் ஒவ்வொரு அசைவையும் புரிந்து வைத்தவன் உன்னையன்றி யாருமில்லை!இரண்டு வருடமா நல்லா தானே நம்ம லைப் போய்க்கொண்டிருந்தது.

தீடீர்னு என்னிடமிருந்து கொஞ்ச கொஞ்சமாக விலக ஆரம்பிச்ச! சரியா பேசிறது கூட இல்ல! ஏன்னு உன்கூட சண்டை போட்டு அழுதப்போ நீ எனக்காக அழுத தாங்கமுடியலடா!இனி எல்லாம் சரியாகிடும்னு இருக்கும் போது ஒரு வாரமா ஒரு மெசர்ஜ் கூட இல்ல! உன்னை காண்டெக் பண்ணவும் முடியல. தீடீர்னு ஒரு மெசர்ஜ் “உனக்கும் எனக்கும் இனி ஒத்து வராது! உனக்கான நல்ல லைப்யை அமைச்சி கொள்.. விதி எதுவொ அது நடக்கட்டும்..! பண்ணிட்டு ஒரு வருடமா காணம போய் இப்போ நீ சொன்ன விதி சேர்த்து வைச்சிடுச்சி ஆனால் நீயா காரணம் சொல்லும் வரை என்னால உன்னை முழுசா ஏத்துக்க முடியல.. உன்னை எனக்கு தெரியும் ஏதோ ஒன்ன மறைக்கிறாய். அதுவும் எனக்காக தான் இருக்கும்னு தொனுது

என்றென்னி கண்கலங்கியவாறே திருமண ஆல்பத்தை எடுப்பதற்காக காபோர்ட்டை திறந்து அதை தேடிக் கொண்டிருக்போது சில மெடிகல் ரிபோர்ட்டும் அர்ஜுனின் டயரியும் பவித்ராவின் கண்ணில் பட்டது.

அதை எடுத்து பார்த்தவளுக்கு இதயம் கணத்து கண்ணீர் சொட்டியது. அர்ஜுனிற்கு ஹார்ட்டில் மேஜர் ஆப்பரேசன் 6மாதங்களுக்கு முன்னர் செய்யப்பட்டிருப்பதை அது தெளிவாக காட்டியது! அவளால் தாங்கமுடியவில்லை. உன்னை எவ்வளவு காயப்படுத்திவிட்டேன் அர்ஜு! என்று கண்ணீர் சிந்தியவாறு அர்ஜுனின் டயரியை வாசிக்க ஆரம்பித்தாள்!

பவி நீ எனக்கு கிடைச்சது என் அதிஷ்டம்! என் பிராப்ளம் தெரிஞ்சும் என்னை மனப்பூர்வமாய் காதல் செய்தாய்!நானும் நினைச்சேன் எனக்கு இருக்கிறது மைனர் பிராப்ளம்னு! என் ஆயுள் இவ்வளோ கம்மியானு தொனுது..எனக்கு ஹார்ட்ல மேஜர் ஆப்ரேசன் செய்யனுமாம்! அப்பிடி செஞ்சி சக்ஸஷ் ஆகுற சான்ஸ் ரொம்ம கம்மியாம் டாக்டர் சொல்றாங்க. காதல்ன்ற பெயர்ல உன் வாழ்க்கையை பணயம் வைச்சிட்டேனு குற்றஉணர்ச்சி என்னை கொல்லுதுடி.. நீ சந்தோசமாக இருக்கனும்.உன்னை விட்டு கொடுக்கவும் முடியாம விலகி நிற்கவும் முடியாம நரக வாழ்க்கை தான் வாழ்கிறேன்.உனக்காக வாழனும்ற ஆசைல ஆப்பரேசன் பன்ன போறன்டி கடைசி முயற்ச்சியாக..நம் காதலுக்கு சக்தி இருந்தால் அது நம்மல சேர்த்து வைக்குகம்னு நம்புறேன். அதனால தான் நீ சுமக்கும் அதே வலியோடு உன்னை விட்டு விலகுறேன்..!

அர்ஜுனின் ஆழமான காதல் புரிந்வுடன் கதறி அழுது கொண்டிருக்கும் பொழுது பவித்ராவை பிரிந்திருக்க முடியாமல் பணியை இடை நிறுத்தி வந்தவனுக்கு பவி அழுவதை காணமுடியாமல் அவளை தேற்றும் வழி தெரியாது அணைத்தான். அவன் அணைபினுள் தஞ்சமடைந்த பெண்ணவள் அர்ஜு என்னை மன்னிச்சிடுங்க உங்க நிலமை தெரியாம உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன். உங்களுக்கு இப்போ ஒன்னுமில்லையே நீங்க இல்லன்னா என்னால தாங்கமுடியாது!ஏன் அர்ஜு என்கிட்ட சொல்ல என கண்ணீர் மல்க கூறி அவன் மார்பில் சரணடைந்தாள்.

பவி நா இதெல்லாம் சொன்னால் நீ இப்பிடி உடைஞ்சி போய்டுவனு தான் உன்கிட்ட சொல்லாமல் மறைச்சிட்டுடேன்.குட்டிமா நீ அழுவுறது தாங்கமுடியலடி! உனக்காகவே நானடி.. பின்ன எப்படி உன்னை காயப்படுத்துவேன்.. ஆசை பொங்கும் காதலுடன் கூறி அவளிடம் தஞ்சமடைந்தான்.

Thank you so much chillzee team எழுதும் திறமையுடையோருக்கு சிறந்த களம் அமைத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி..! இது என் முதல் சிறுகதை. இதில் தவறுகள் இருந்தால் என்னை மன்னிக்கவும். கதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் எழுதிவிட்டேன்..!

This is entry #147 of the current on-going short story contest! please visit contest page to know more about the contest

போட்டி பிரிவு - சூழ்நிலைக் கதை - கதை தொடக்கத்தில் இருந்து தொடர்க...

எழுத்தாளர் - சமீரா

{kunena_discuss:1083}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.