(Reading time: 36 - 72 minutes)

டி.ஸி. வாங்குற சாக்குலே, ஹச். எம்.மை பார்த்து பேசுறேன்னு அம்மா சொல்லிச்சு! இந்தா வர்றேன்னு சொன்னது! இன்னும் ஆளைக் காணோம்!”

என்றவள் கண்கள் அனிச்சையாக வாசலுக்கு சென்று... அங்கே நின்றவர்களைப் பார்த்ததும் அப்படியே விதிர் விதிர்த்து போனது!

அவள் அப்பா வந்திருந்தான். இரண்டு மூன்று தடியன்கள் அவனுடன்!

என்னுடன் அவள் பேசிக் கொண்டிருந்ததை கண்டதும் ஆத்திரத்துடன் உள்ளே வந்தவன்,

“என்னடி ஆம்பிளைப் பையனுங்களோட கொஞ்சிக் கொலாவதான் பள்ளிக் கூடத்துக்கு ஓடி வந்தியோ... நீயும் அந்த ******* திட்டமாடி போடுறீங்க திட்டம்! வாடி வீட்டுக்கு!”

பேசி முடிக்கும் முன்னே, அவள் முடியை கொத்தாக பற்றி இருந்தான் அவள் அப்பன்.

மின்னலென அவன்  மீது பாய்ந்து அவளை விடுவிக்க முயல.. உடன்  வந்த தடியன்களில் ஒருவன் என்னை மூர்க்கமாக தள்ளி விட அவன் தள்ளி விட்ட வேகத்தில் அருகே இருந்த கான்கீர்ட் தூணில் போய் நான் மோத..... அது என் மண்டையையும் முட்டியையும் பதம் பார்த்தது.

மண்டையில் ‘கின்’னென்ற சத்தம்... அதோடு எழுந்து கொள்ள முயன்றேன்...

“பரத்!”

“காப்பாத்து பரத் என்னை காப்பாத்து பரத்!!”,

அவள் கதறும் சத்தம் கேட்டது.... நான் இருக்கேன் உனக்கு  சொல்ல நினைத்தேன்... சொன்னேனா தெரியவில்லை!  ஒரு காலை நகற்றவே முடியவில்லை! மற்றொரு காலை ஊன்றி எழுந்து கொள்ள முயன்ற பொழுது கண்களும் மங்கலாகி.. பின் முற்றிலும் எதுவும் தெரியாமல் மயக்க நிலைக்கு சென்று விட்டேன்!

யாரோ என்னை தட்டி எழுப்புவது போலிருந்தது. மெல்ல கண் விழித்தேன்.

“டாக்டர் ஃப்ளைட் லேண்ட்டாகிடுச்சு”, பக்கத்தில் இருந்தவர் சொல்வது ஹெட்போன் மாட்டி இருந்ததால் சன்னமாக கேட்டது!

விமான நிலையத்தில் இருந்து என்னை அழைத்துச் செல்ல என் நண்பன் சத்யன் வந்திருந்தான்.

“என்ன மச்சி! ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ் மண்ணை மிதிச்சிருக்கே! ஒரு ரெஸ்டாரண்ட், இல்லை கோவில், குலம் இப்படி போவேன்னு  பார்த்தா இப்படி திருச்சிக்கு ஏதோ ஸ்கூல் போகணும்னு சொல்றே! டீச்சர் யாரையாவது கரெக்ட் பண்றியா?”

அவன் என் வாயைக் கிளற, சிரித்த படி அதை மறுத்த நான்,

“ஸ்கூல் ஃப்ரண்ட்டை பத்தி டீடெயில் கலெக்ட் செய்யப் போறேன்”, என்றேன்.

ஆம், முட்டையை அன்று இழுத்து சென்ற பின், என் அம்மாவும் தவறி விட்டார். பாட்டி செத்து விடுவேன்னு என்று மிரட்டி ஆறே மாதத்தில் அப்பாவிற்கு மறுமணம் செய்து வைத்தார். அதன் பின், அப்பா எங்களை அவருடனே அழைத்து சென்று விட்டார்.

வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் போன எனக்கு, முட்டையை பிரிந்ததில் அவளுக்கு பிடித்த விஷயங்களில் என்னை ஈடுபடுத்தி திருப்தி அடைந்தேன்.

அவளுக்கு பிடித்தது படிப்பு! என் தாய் என் வாழ்வின்  வழி காட்டி என்றால், இவள் என் பாதையாகிப் போனாள்!!

முட்டை எங்கே இருக்கிறாள் என்றே தெரியாமலே ஓடின இத்தனை வருடங்களுக்கு பின்,  அம்மாவின் அண்ணன் வீட்டு கல்யாணத்திற்கு போயிருந்த பொழுது அவர் பேச்சு வாக்கில்,

“உங்க அம்மா சாகக் கிடக்கிறப்போ கூட ஏதோ அவ ஸ்கூல்ல படிக்கிற  பொண்ணை படிக்க வைக்க உதவி செய்யுங்கன்னு கேட்டா! அவ குணத்துக்கு உனக்கும் ஒரு குறையும் வராது!”

என்று சொன்னதும் மூளையின் ஒரு மின்னல்! கடைசியாக முட்டையை பார்த்த பொழுது அம்மாவைப் பார்க்கணும்னு சொன்னாளே என்று! அவரிடம் அந்த விவரங்களை விசாரிக்க, இத்தனை வருடங்களில் கழித்து கேட்டதில் அவர் அதை மறந்தே போயிருந்தார்.

“என் ஃப்ரண்ட் மிஷனரிலே வேலை பார்த்தான். அவன் மூலமா தான் சொன்னேன். அவனும் இப்போ உயிரோட இல்லை! அந்த மிஷனரி அட்ரஸ் வேணா தர்றேன்! விசாரி”

என்றார். என் கையில் அந்த திருச்சி மிஷனரியின் முகவரி மட்டுமே! அவள் அதில் சேர்ந்தாளா? இல்லையா? தெரியவில்லை!

ஆனால், திருச்சி நோக்கி போகின்றேன்! என்னவோ அவளை நெருங்கிட்ட உணர்வு என்னுள்ளே!!!! தமிழ் மண்ணை மிதித்ததுமே தன்னம்பிக்கை தானாக வந்து விட்டதோ!!!

“க்ரீச்ச்”

திருச்சியை நோக்கி வண்டியை செலுத்திக் கொண்டிருந்த  சத்யன் ப்ரேக்கிட்டான்! வேகமாக ப்ரேக்கை மிதித்ததின் அதிர்வு எங்களுக்குள்! சீட் பெல்ட் எங்களை கட்டி போட்டு காப்பாற்றியது!

முன்னே சென்ற வண்டிகள் திடீரென்று ப்ரேக்கிட்டதன் தொடர் அலையில் வினையில் அவனும் அதை செய்ய வேண்டியதாகிப் போனது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.