(Reading time: 36 - 72 minutes)

பின்னர் தான் சில வண்டிகள் தள்ளி  அங்கே பெரிய விபத்து நடந்திருப்பது புரிந்தது.

ஒரு பேருந்தும் லாரியும்  மோதி விபத்தாகிக் கிடக்க அங்கே மக்கள் ஓலம்!!!

நிதானிக்கவில்லை நாங்கள்!! உயிர் காக்க எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். முன்னால் இருந்த இரண்டு கல்லூரி வாகனங்களில் இருந்த மாணவர்களும் மீட்பு பணியில் பேருதவியாக இருந்தனர்.

ஒரு பகுதி நெளிந்து போன பேருந்தின் இருக்கைகளுக்கு இடையே சில உயிர்கள் சிக்கித் தவிக்கின்ற என்றதும் பேருந்திற்குள் ஏறினேன். அதிலிருந்தவர்களுக்கு முதலுதவி செய்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றும் பொழுது...

நெடிய மூச்சுகள்!!!!

அந்த சத்தம் வந்த திசை நோக்கி நான் நடக்க ஆரம்பித்த பொழுது அந்த சத்தம் நின்று போக  நொடி தாமதிக்காமல்.... ஒவ்வொரு வரிசையாய் நான்  தேட ஆரம்பித்து... சில இருக்கைகள் தள்ளி....

இரு இருக்கைக்கு நடுவே.... குறுக்கு நெடிக்காக கிடந்தாள்  நிறை மாத கர்ப்பிணி! கண்ணாடி வளையல்கள் எல்லாம் நொறுங்கிப் போய்... உடம்பெங்கும் காயமும் ரத்தமுமாக.... அசைவற்று கிடந்தவளைக் கண்டதும் என் உயிரே போய்விட்டது!!!!

‘உயிர் இருக்கிறதா!!!’, அவளை நோக்கி குனிந்து நாடி துடிப்பை பற்றி  நம்பிக்கை வந்தது என்றால்...

“செத்து போயிடுவேனோன்னு பயமா இருக்குது புண்...”,

நான் கையைப் பற்றியதும் நா குளறி... தன்னை மறந்த நிலையில்  வந்த உளறலும்!!!!

என் முட்டையின் வார்த்தைகள்! பூப்பெய்தியதும் ரத்தத்தை பார்த்து பயந்து சொன்ன அதே வார்த்தைகள்!!!

அதைத் தொடர்ந்து அவள் முகம் அஷ்ட கோணலாகிப் போனது!

எனக்குள் பயம்.. நடுக்கம்.. திகைப்பு... அவன் கீழிருந்த பூமி நழுவிப் போவது போல இருந்தால் என் இதயம்....

‘என் முட்டை இப்படி தான் என் கையில் கிடைக்கணுமா??’

விம்மி வெடித்தது!!!

அவளுக்கு பிரசவ வலி! அந்த வலி தான் அவள் மூளையை முழு மயக்கத்திற்கு இழுத்துச் செல்லாமல் அவளை தட்டி எழுப்பி பிழைக்க வைத்துக் கொண்டிருக்கிறது நான் கற்ற அறிவு சொல்ல...

நான் உடைந்து போவதை மறைத்து

“உளறாதே! அதெல்லாம் ஒன்னும் ஆகாது! எதுவும் ஆகா விடமாட்டேன்”

அன்று சொன்ன வார்த்தைகளை இன்றும்  வீறு கொண்டு என் வாய் ஒப்பித்தது!!!

‘ஒரு தடவை உன்னை தவற விட்டேன்.. இந்த முறை விட மாட்டேன்! விடவே மாட்டேன்!!!’

எனக்குள் சொல்லிக் கொண்டாலும்... என்னையும் அறியாமல் கண்ணீர் வழிந்தோட... எப்படி அந்த இடுக்கிற்குள்... இடி பாடுகளுக்குள் புகுந்து அவளை அப்புறபடுத்தி கைக்குள்ளே அள்ளினேன் என்று எனக்கே தெரியவில்லை!!!!

பனிக்குடமும் உடைந்து போயிருந்ததை அவளை உணர்ந்தவனாய்..

பேருந்தின் காற்றோட்டம் நிறைந்த கடைசி இருக்கையில் படுக்க வைத்து, அவள் கையைப் பற்றிக் கொண்டே,

“உன்னை காப்பாத்திடுவேன் முட்டை! எப்படியாவது கஷ்டபட்டு நான் சொல்றதை மட்டும் செய்துடு! எனக்காக ப்ளீஸ்!!!”

அத்தனை வலியிலும்... மயக்கத்திலும்... என் கரத்தை அழுந்தப் பற்றி தலையசைத்தாள்!

என் கையை விடாமல் அவள் பற்றியிருக்க.... சத்யனை  துணைக்கு அழைத்தேன். அவளுக்கு பிரசவிப்பதிலும் சோதனை!!! இரட்டை குழந்தை அவளுக்கு! இரண்டு குழந்தைகளையும் பெற்று முடிப்பதற்குள் அவள் ஜீவன் கரைந்து கொண்டிருந்தது.

எப்படியோ குழந்தைகளை பிரசவித்து விடவும்... ஆம்புலன்ஸ்சில் ஏற்றி பக்கத்து மருத்துவமனையில் சேர்த்து அவள் அபாய கட்டத்தை தாண்டிய பின் தான் மூச்சே வந்தது எனக்கு!!!!

“என் முட்டையைக் காப்பாற்றி விட்டேன்!”, இத்தனை வருடம் அவளை காப்பாற்ற முடியாமல் போன குற்ற உணர்வும் பஸ்பமானது!

பிரசவித்த களைப்பிலும் மருந்தின் தாக்கத்திலும் தூங்கிப் போனாள்!

மங்கையாய் ஒரு பிறவி எடுத்ததையும் அன்னையாய்  ஒரு பிறவி எடுத்ததையும் பார்த்து விட்டேன்! கழுத்தில் இருந்த  தடிமன்னான தாலிச் சங்கிலியில் சமூகத்தில் மதிப்பான அந்தஸ்தில் தான் வாழ்கிறாள் என்று புரிந்தது!

“குழந்தைகள்???!!!”, இப்பொழுது தான் அவர்கள் நினைவு வந்தது எனக்கு! என் கைகள் தான் அந்த குழந்தைகளை எடுத்தது.  கவனமெல்லாம் அந்த நேரம் அவள் மீது தானே இருந்தது!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.