(Reading time: 13 - 25 minutes)

லை நயம்... க்ரியேடிவிட்டி திறமை அதிகம் உள்ளவள்.. எங்கள் டீமின் இந்த வருட ஆண்டு விழாவை திருவிழா போல மாற்றியமைத்தும் தனு தான். இந்த கிறிஸ்துமஸ்காக ஏராளமான ஐடியாகளை பட்டியலிட்டிருந்தாள் பெண்ணவள். ஏற்கனவே வாங்கி வைத்திருந்த அலங்கார பொருட்களை பார்த்துவிட்டு தேவையானவற்றை பட்டியலிட்டு கொடுத்திருந்தாள். அதனை பார்க்க பார்க்க கோபம் கனன்றுக்கொண்டேயிருந்தது!

இரண்டு மாததிற்கு முன் என்னை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்ததை அவளிடம் கூறிக்கொண்டிருந்தேன். அப்போது அவள் சொன்ன வார்த்தைகள் இதோ இப்போதும் ரீங்கார்மிட்டுக்கொண்டே! 

அவசரப்படாத கண்மணி... பொறுமையா யோசிச்சு முடிவு எடு... கூட்டு குடும்பம்னு வேற சொல்லற... மெண்டல் ஸ்டர்ஸ் அதிகமா இருக்கும்...அவங்க எல்லோரையும் அனுசரிச்சு போகனும்... உனக்கு புடிக்கவேயில்லைனாலும்!' என்று உடைந்த குரலில் கூறினாள். இது எல்லாம் அவளது அனுபவ பாடம் என்று அறிவேன்.. அதூரமாய் கையை தட்டிக்கொடுக்க.. அவள் சிறிது கலங்கியிருந்தாள். 

என்னடீ தனு?? என்ன ஆச்சு??' ...

எனக்கு திவாவை ரொம்ப பிடிக்கும்டீ... அவரை கண்மூடித்தனமா விரும்புறேன்... அவரும் அப்படிதான்... ஆனா அவர் அம்மா... என் அத்தைக்கு தான் பிடிக்கவேயில்லடீ... நல்ல பணம் இருக்கவளா பார்த்து தன் பையனுக்கு முடிக்கனும்னு பார்த்தாங்க...அவங்க எதிர்ப்பார்த்த அளவு இல்லைனாலும் என் அப்பா அவரால என்ன முடியுமோ அதுவும் நிறைவா தான் செஞ்சார்...நீயும் தான் பார்த்தியே...அவங்க ரிடையர்ட் கலக்டர்...என் மாமனார் ரிடையர்ட் இன்கம்டாகஸ் ஆப்பீசர்... அவங்களுக்கு இனையா முடியல... ஆனாலும் போராடி என்னை கைபிடிச்சார் திவா! அவருக்காக... தாண்டீ பொறுத்து போறேன்....பொண்டாட்டியும் வேணும் அம்மாவும் வேணும்னா நான் என்னடீ செய்யறது... எனக்குதான் பைத்தியமே பிடிக்கறாப்புல இருக்கு! அவ்வளோ மன அழுத்தமா இருக்கு... டெலிவரி அப்புறம் ஒன்யிர் ப்ரேக் எடுத்ததுக்கூட டிப்ரஷனால தான்! ஒரு கட்டத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியல... சரிதான் போடானு சொல்லிடேன்...மனோ மட்டும் இல்லைனா.. பெட்டி படுகைய கட்டி எங்காவது கண்காணா தூரத்துக்கு போயிருப்பேன்!...ப்ச்ச்ச்... அவரும் என்ன தாண்டீ பண்ணுவாரு... எனக்கும் பெத்தவங்களுக்கும் நடுவுல மாட்டி முழிக்கிறாரு... பாவம்!' என்றாள்.

உடனே தன்னை சரி செய்துக்கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு... அதே விரிந்த புன்னகையுடன்..'ஏய்... நீ கிளம்பு எவ்வளவு நேரமாச்சு பார்... சீக்கிரம் கிளம்பு' என்று துரிதப்படுத்தினாள். கேள்வியாய் அவளை நோக்க... எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கல கண்மணி...' என்றாள்.

நீ சரிப்பட்டு வரமாட்ட வா நான் கொண்டு போய் விடரேன்...உன் மன நிலையில நீ வண்டி ஓட்டாத..' என்றேன். இல்லடீ... வேணாம்... நீ போ... நான் போயிடுவேன்... அன்னைக்கு என் வண்டி ரிப்பேர்னு நீ வீட்டுல விட்டுடூ போனதுகே என் அத்தை அவ்வளவு பேச்சு பேசினாங்க... நீ என் மேனேஜர்னும்... நாலு தெரு தள்ளிதான் இருக்கனு சொன்னதை கூட சந்தேகத்தோட தான் பார்த்தாங்க!'

வா... இன்னைக்கு உள்ள வந்து அவங்ககிட்ட பேசிட்டே போறேன்..'

இல்லடீ அதுக்கும் ஏதாவது சொல்லுவாங்க..

சரி வீட்டுக்கு வரல... ஆனா உன்ன தனியா வண்டி ஓட்டவிட மாட்டேன்.. நீ வண்டி எடு... உன்னை பின் தொடர்ந்து நான் வரேன்... உன் அத்தை கண்ணுல படாம!' என்று ஒருவாறு சம்மதிக்க வைத்து அழைத்து சென்றது நினைவிக்கு வந்தது.

ன்று முதலே என் மனதை அவள் கூறியவை அனைத்தும் அரித்துக்கொண்டேயிருந்தது. அவளுடன் சமயம் கிடைக்கும் போதேல்லாம் மனம் திறந்து பேசிக்கொண்டிருந்தேன்... அவளையும் பேச வைத்தேன்! ஆனால் விதி செய்த சதியோ என்னவோ... டிசம்பர் தொடக்கத்திலிருந்தே அலுவல் நிமித்தமாய் ஓடிக்கொண்டிருந்ததால் அவளை கவனியாமல் விட்டுவிட்டேன்! 

இப்போது வேணு கூறியவற்றை கேட்கும் போது என் மனம் இன்னும் குற்ற உணர்ச்சியில் துடிக்கிறது. நாங்கள் சந்தித்த வியாழன் மறு நாள் முதல் அடுத்த வெள்ளி வரை வீட்டிலிருந்தபடி அலுவலக பணி செய்ய அனுமதிப்பெற்று சென்றிருந்தாள் தனுஜா தன் தாயாரை பார்க்க! ஆனால் வர்தா புயலின் தாக்கத்தின் மறு நாள்...செவ்வாய்... வழக்கமாய் வருவது போல் அலுவலகம் கிளம்பி வந்திருக்கிறாள்...அதுவும் இவள் தாய் வீடு இருக்கும் பகுதியில் மின் இணைப்பு இல்லாது இருந்த போதிலும்... தன் அன்பு மகளை தனியே தாயிடம் விட்டுவிட்டு... தன் சொந்த வண்டியில் வந்திருக்க... கையில் பொதிய பணமில்லாமல்.. உணவு உண்ணாமல்.. இருப்பதை பார்த்து வேணு உணவு வாங்கிக்கொடுத்து சாப்பிட வைத்திருக்கிறான்... அவனிடம் தான் புதிதாய் மொபைல் வாங்க போவதாகவும்... பத்தாயிரம் பட்ஜட்டில் ஒரு நல்ல மாடலை சொல்லவும் கேட்டிருக்கிறாள்... தன் மொபைல் உடைந்துவிட்டதாகவும் கூறியிருக்கிறாள் தனுஜா... அன்றே ஏதோ தன் போக்கிலே தான் வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்' என்றும் கூறினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.